நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801)

IMG_1652 (2)

Written by london swaminathan

 

Date: 11 May 2016

 

Post No. 2801

 

Time uploaded in London :–  17-11

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது:

 

महीयांसः प्रकृत्या मितभषिणः

 

Maheeyamsah prakrityaa mitabhaashinah

 

Great men, by nature, do not talk much (they limit their speech to the essentials only)

மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண:

பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.

வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி), ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்), பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.

 

இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்’.

 

ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:

விரைந்துரையார்

மேன்மேலுரையார்

பொய்யாய் புனைந்துரையார்

பாரித்துரையார்

 

பொருள்:

விரைவாகச் சொல்லமாட்டார், சொன்னதையே திரும்பச் சொல்லார், பொய்யாக எட்டுக்கட்டிச் சொல்லமாட்டார், மிகைப்படுத்தி சொல்லமாட்டார்

பின்னர் எப்படிச் சொல்லுவார்?

சுருக்கமாகப் பொருள் முழுதும் விளங்கும்படி சொல்லுவார், காலத்திற்குப் பொருத்தமாக, விரும்பியதை மட்டும் சொல்லுவார்.

 

இதோ பாடல் முழுதும்:

விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய

பரந்துரையார் பாரித்துரையார் –ஒருங்கெனைத்தும்

சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால்

சொல்லுக செவ்வியறிந்து.

—ஆசாரக்கோவை

 

திருவள்ளுவன் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில் சொன்ன பொன்மொழிகளை நாம் அறிவோம்.

 

இறுதியாக உலகின் முதல் சட்ட வல்லுனனான மனு, அவருடைய மனுஸ்மிருதியில் (4-138) சொல்லுவது என்ன என்று காண்போம்:

satyam bruyat priyam bruyat na bruyat satyam apriyam
priyam ca nanrutam bruyat esha dharmah sanatanah

                 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:

–மனு ஸ்மிருதி 4-138

உண்மையே பேசு; இனிமையாகப் பேசு;

கசப்பான உண்மையைச் சொல்லாதே;

இனிமையான பொய்களைப் பேசாதே;

இதுதான் சநாதன தர்மம் (இந்து மதம்).

 

எனது பழைய கட்டுரை:

எப்போது பொய் சொல்லலாம்? வள்ளுவர், சங்கரர் அறிவுரை !(
Post No.837            Date. 13-02-2014

–subham–