WRITTEN BY M.RAJAGOPALAN, LONDON
Post No. 10,561
Date uploaded in London – – 14 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
*இனிய பொங்கலோ பொங்கல்*
அன் *பால்* நனைத்த
*அரிசி* யாம் நல்லறமும்
இன்பப் *பயறும்*
இள *நெய்* நல்மனமும்
*வெல்லப்* பேச்சும்
*வெண்பருப்பு* மென்சிரிப்பும்
நல்ல பழக்க *நறுந்தேனமுதும்*
*கற்கண்டுச்* சொற்கொண்ட
*கரும்பும்* உபசரிப்பும்
பொற்புஎனும் *முந்திரியும்*
பொறையான *திராட்சைகளும்*
*ஏலக்காய்* வாசனையாய்
எளிமையும் *குங்குமப்பூ*
போலத்தான் நடத்தை
பொலிவும் *பசுமஞ்சள்*
மங்களமாய் நமக்குள்ளே
மலருமருட் *சூரியனாய்ப்*
*பொங்கியதா, அன்பர்களே!*
பூத்துக் குலுங்கிடுங்கள்!
*கனிமரமாய்க்* கொட்டிக்
*கனுப் பொங்கல்* காணுங்கள்!
இனியதி *தை* புதியதி *தை*
என்றுமி *தைப்* பேணுங்கள்!
நலந்தரும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
மீ. ரா
14-1-2022
SRI M. RAJAGOPALAN (MEE.RAA) IS A SCIENTIST WORKING IN LONDON. HE HAS WRITTEN POEMS ON ALL TEMPLES AND GODS IN LONDON AND DONATED THE MONEY TO THE RESPECTIVE TEMPLE RECIVED THROUGH THE SALE OF HIS BOOKS. HE HAS TRANSLATED BHAGAVAD GITA IN TAMIL VERSES AS WELL. HIS RECENT POEMS ARE GIVEN BELOW
பாரதி யார்!
பாரதி யார்? ஞானத்தீ! பைந்தமிழின் தேனூற்று!
வாரிதி யாய்த்தமிழின்பம் வார்த்தமழை மேகம்!
பாரதி காரிஎனப் பரம சுகப் பெருஞானத்
தேரதி காரத்தால் தெருவிலிட்ட குருவான
சாரதி! தீரமுனி! சத்தியத் தணற்துண்டு!
நேரதி காரமினி நிலம்பிறந்தார்க் கேஎன்று
கூறிஎழும் வெண்சங்கு! கோபுரத்து மணியோசை!
வீரியத்தை உள்ளத்துள் விதைத்த தமிழ்விவசாயி!
பித்தன்! மதிசூடும் பெருமானைப் போற்கந்தல்
சுத்தித் திரிந்த சுடர்விளக்கு! சக்தியுமை
பக்தன்! பெண்குலத்தைப் பணிந்த மாமேதை!
சித்தன்! சுதந்திரத்துச் சிந்துதரும் பொன்வண்டு!
வார்ப்பான் விடுதலையை வரவைப்பான் தீக்குள்விரல்
சேர்ப்பான் சிரித்துசுகம் செய்யும் எனச்சொல்வான்!
பார்ப்பான் வையத்தைப் பரசக்தி வடிவென்பான்!
வேர்ப்பான் தமிழரிடம் வீரமுரம் கொள்ளென்பான்!
முண்டாசு! நெற்றியொளி முகப்பு பரஞானம்!
கொண்டாடச் சுட்டுவிழி! கூர்மை எனமூக்கு!
வண்டாடுங் கண்ணுக்குள் வளர்கருணை கூர்மீசைத்
துண்டாடும் செவ்வாய்! தூயதமிழ் மடைதிறப்பு!
மின்னல்! தமிழ்முழக்கு மேகம் பெருகுமிடி!
கன்னல்! வழிகாட்டி! கத்திமுனைப் புத்திமதி
தின்னத் தருவமுதம்! தென்னகத்து ஞானவொளி
என்னவொரு பிறப்பு! எந்தைகவி பாரதியார்!
கோழை களைக்குட்டிக் குனியாமல் தலைநிமிர்த்தி
வாழவழி செய்த வைர மனச்செம்மல்!
ஏழையென இருந்து எல்லாமும் கொடுத்தளித்த
வாழை! பாரதியார் வாழ்க்கையினி நம்பாடம்!
மீ. ராஜகோபாலன் (11-12-2021)
XXXX
அருட் குரு பகவான் ரமணர் ஜெயந்தி (30-12-2021)
Poem by M Rajagopalan
tags – Mee.Raa, ரமணர் ஜெயந்தி, பாரதி யார், பொங்கலோ பொங்கல், மீ.ரா. மீ ராஜகோபாலன்