
Post No. 9679
Date uploaded in London – –2 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளில் ஒன்றைத்தான் இன்னும் ஆராய்ந்து வருகிறோம் . இதில் தேனீக்களுக்கு தேன் கொடுப்பதும் அஸ்வினி தேவர்கள் என்று ஒரு மந்திரம் வருகிறது. இது போல ரிக் வேதம் முழுதும் சோமலதை (Soma Plant) என்னும் அற்புத மூலி கையை பருந்து (Falcon) கொண்டுவந்து தருவதாக மந்திரங்கள் வருகின்றன. இதுபற்றியெல்லாம் மாக்ஸ் முல்லர் கும்பல் மவுனம் சாதிக்கின்றது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல் சொல்லுவது போல சோம ரசம் என்பது ஒரு போதையூட்டும் பானம் என்பதை நம்புவோமானால் உலகின் முதல் போதை மருந்து நூல் ரிக் வேதம் என்று ஒப்புக்கொள்ள வேண்டிவரும் . ஏனெனில் ரிக் வேதத்தில் பெரும்பாலான மந்திரங்களில் சோம ரஸம் வருகிறது. அதுமட்டுமல்ல சூர்யோதயத்துக்கு முன்னால் , குளித்துவிட்டு, மடி, ஆசாரத்துடன் மந்திரம் சொல்லிக் குடித்ததாக வருகிறது . அது மட்டுமல்ல அரிதான அந்த ரசத்தை கடவுளுக்கும் , குறிப்பாக இந்திரனுக்கும் தீயில் ஊற்றி வீணடித்தையும் நாம் நம்பவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் மாக்ஸ்முல்லர் கும்பல் முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான மொழி பெயர்ப்பைச் செய்துள்ளது. ரிக் வேதத்தை அனைவரும் படித்து இந்தக் கும்பலை அம்பலப்படுத்த வேண்டும் .
xxx
தொடர்ந்து இந்தக் கவிதையின் மந்திரங்களைக் காண்போம் (ரிக்.1-112-18)

மந்திரம் 18
இதில் அங்கீரஸ முனிவர், மநு பற்றி வருகிறது; முன்னரே கண்டோம்;
திருடப்பட்ட பசுக்களை “குகையில் ஒளித்து வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாக” இங்கும் வருகிறது . இதுவும் “கிணற்றில் தள்ளிவிடப்பட்ட முனிவர்களும்” பல இடங்களில் வருவதால் இதை அப்படியே அர்த்தம் செய்யாமல் அதன் மறைபொருளை அறிய வேண்டும். இந்த மந்திரத்தில் அவைகளை மலைகளில் ஒளிந்துகொண்டு இருக்கும் மேகங்கள் என்று உரைகாரர் செப்புவர் .
இந்த மந்திரத்தில் ‘பால் வெள்ளம்’ என்பதை மழைப் பொழிவு என்பர். இதை படிக்கும்போது “பாலுக்கழுத மகனுக்குப் பாற்கடல் ஈந்த பிரான்” என்ற வரி நினைவுக்கு வருகிறது
xxx
மந்திரம் 19
இங்கு விமதன் என்பவருக்கு அஸ்வினி தேவர்கள் மனைவியைக் கொண்டுவந்ததை புலவர் பாராட்டுகிறார். விமதன் என்பவர் ஒரு ரிஷி என்றும் அவருக்கு புருவித்ரன் மகள் மனைவி ஆனதாகவும் உரைகார்கள் உரைப்பர். இதில் அஸ்வினி தேவர்கள் “சிவப்பு வர்ண பசுக்களை” மீட்டதாகப் பாடுகிறார். இதற்கு சிவப்பு நிற மேகங்கள் என்று அர்த்தம் கற்ப்பிக்கப்படுகிறது . அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இதைவிட முக்கியமான செய்தி சுதாசுக்கு செல்வம் கிடைக்க வழி செய்த அஸ்வினி தேவர்களே எங்களுக்கும் உதவுங்கள் என்ற வரிகளாகும். சுதாஸ் ஒரு பெரிய மன்னன். மிகப்பெரிய போரில் அவன் வெற்றி பெற இந்திரன் உதவியதாக ஏழாவது மண்டலத்தின் 18-ஆவது பாடலில் நீண்ட வரலாறு கூறப்பட்டுள்ளது .இதற்கு அடுத்த முக்கியக் கவிதை அதுதான். அதைப்பற்றி தனியே எழுதுவேன் . இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட விரும்புகிறேன். சு+தாச , திவோ+ தாச /தச என்றெல்லாம் வேத கால மன்னர்களின் பெயர்கள் வருகின்றன. தாச , தஸ்யூ என்பன இழி பொருளில் பயன்படுத்தப்படுவதாக கூறும் கும்பல் இது பற்றி மவுனம் சாதிக்கிறது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்து ஒழிந்தது போல வேத கால மன்னர்களிடையேயும் சண்டை நடந்துள்ளது. அதில் பிஜாவான என்ற மன்னரின் மகன் சுதாஸ் வெற்றிபெற்ற செய்தி வருகிறது. வேத காலத்தில் தஸ்யூக்கள் என்னும் திருடர்களுடன் நடந்த சண்டையைக் கூட இனவாதப் போர் என்று மாக்ஸ்முல்லர் கும்பல் சித்தரிப்பது முழுப் பொய். சுதாஸ் சம்பந்தப்பட்ட போரில் பத்து அரசர்கள் சண்டையிட்டதை பின்னர் காண்போம். கரிகாலன் ஏழு அரசர்களை வென்று ஏழாரம் போட்டது போன்ற பெரிய யுத்தம் அது. ஆக சுதாஸ் பற்றிய வெற்றிச் செய்தியையும் இங்கே காண்கிறோம்.
சுதாஸ் பற்றிய ஏழாவது மண்டல துதியில் ஒரு அற்புதமான செய்தி வருகிறது. யமுனை நதி குறிப்பிடப்படுகிறது. மேலை நாட்டுக்கும்பல் இதைப்படித்துவிட்டு நம்ப முடியவில்லையே, புரியவில்லையே என்று பேந்தப் பேந்த முழிக்கிறது . ஏனெனில் ஈரான் நாட்டிலிருந்து டில்லிக்கு அருகில் ஓடும் யமுனை வரையுள்ள உலகின் பிரம்மாண்ட நிலப்பரப்பு பற்றி ரிக் வேத மன்னர் ஆட்சி வருகிறது. இதை மாக்ஸ்முல்லர் கும்பலால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு பக்கம் வேத கால இந்துக்களை நாடோடிக்கும்பல் என்று வருணித்த பயல்கள் இதற்கு விளக்கம் சொல்லமுடியாமல் திணறுகிறார்கள் .
xxx

மந்திரம் 20 (1-112-20)
பூஜ்யு , அத்ரிகு , ருதுஸ் தூபம் ஆகிய மூவர் தொடர்பான அதிசயச் செய்திகள் இங்கே புகழப் படுகின்றன.
அஸ்வினி தேவர்கள் செய்த மிகப்பெரிய சாஹஸச் செயல் புஜ்யுவை நடுக்கடலில் இருந்து கப்பலில் மீட்டதாகும். முன்னரே ஒரு மந்திரத்தில் கண்டோம்.
இங்கு மேலும் இரண்டு செய்திகள் என்னவென்றால் அத்ரிகு, ருதுஸ் துபன் என்ற இரண்டு ரிஷிகளுக்கு அஸ்வினி தேவர்கள் செய்த உதவியாகும். ருதுஸ்தூபனுக்கு உணவு கொடுத்ததாக வருகிறது; இதுபற்றி அதிகம் தெரியவில்லை. அதற்கு முன் வரும் ‘சுபராம்’ என்பதை சாயனர் உரிச் சொல்லாகக் கொண்டு உணவு பற்றி கதைக்கிறார் .
மந்திரம் 21
இந்த மந்திரத்தில் நிறைய அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன. மற்ற மந்திரங்களில் ‘தேன் சொட்டும் அஸ்வினியர்’ என்று போற்றினர். இங்கே தேனீக்களுக்கு தேன் கொடுத்தவர்களும் அவர்கள்தான் என்கிறார் புலவர்.
ஒரு இளைஞனை குதிரை ரேஸில் வெல்ல வைக்கவும் பாடுகிறார் . அந்த இளைஞன் புருகுத்சன் என்று உரைகாரர் பகர்வர். ஆக இது நாடோடி ஸமூகமல்ல . குதிரை ரேஸ் முதலியன விளையாடிய நாகரீக சமூகம் என்று தெரிகிறது.
கிருசானு யார் ?
இம்மந்திரத்தில் கிருசானுவை அஸ்வினியர் காத்ததாக வருகிறது. இவரை தேவலோக சோம ரஸ பாதுகாவலர் என்று எழுதிவிட்டு 1-155 மந்திரத்தில் இவரை அரக்கர்- ஒரு வேளை அமிர்தமான மழையைத் தடுக்கும் வறட்சி என்னும் அசுரனாக இருக்கலாம் என்று பிதற்றுகின்றனர். மேலை நாட்டு கோமாளிக் கும்பலோ இவரை பார்ஸி மொழி அவஸ்தா புஸ்தகத்தில் உள்ள கெரிசானியுடன் ஒப்பிடுகிறது மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம் இது.

மேலும் தொடர்வோம்………………………………………..
tags- முதல் வரலாற்று ஆசிரியர் 5,கிருசானு