முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை! (Post No. 2417)

arabian wonder

Written by S NAGARAJAN

Date: 23 December 2015

 

Post No. 2417

 

Time uploaded in London :– காலை 8-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப் போக்கு

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!

 

ச.நாகராஜன்

 

முஸ்லீம்கள் உலகப்போக்கை நன்கு கவனிக்க வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தத் தருணத்தை விட்டு விட்டால் இனி ஒரு தருணம் கிடைப்பது அரிது.

 

 

ஒரு சில தீவிரவாதிகளால் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை “ஓரம் கட்ட” உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடப்பவற்றைப் பார்ப்போம்.

 

 

தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை தரும் செய்தி இது:-

ஸ்விட்சர்லாந்தில் டிசினோ (Ticino) பிராந்தியத்தில் முகத்தை மூடி பர்கா (BURKA) அணிவது இனி கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 6500 ஸ்டர்லிங் பவுண்டுகள் அபராதம். இந்தப் பிராந்தியத்தின் பார்லிமெண்ட் இதற்கான சட்டத்தை சமீபத்தில் 23-11-2015 திங்களன்று இயற்றி நிறைவேற்றியுள்ளது.

 

 

ஐரோப்பாவில் மிக அதிக அளவில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றிலுமாக முறியடிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என ஸ்விட்சர்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தின் தென் பகுதியான இத்தாலி மொழி பேசும் டிசினோ பிராந்தியம், பொது இடங்களில் இப்படி முகத்திரை அணிந்து வந்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து விட்டது. பொது இடங்கள் என்றால் கடைகள்,உணவு விடுதிகள், பொது கட்டிடங்கள் என்று அர்த்தம். காரில் அமர்ந்து செல்லும் போதும் பர்கா அணியக் கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கும் விதிவிலக்கு இல்லை. அவர்களும் இந்த விதியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

ஆனால் முகமூடி, க்ராஷ் ஹெல்மெட் போன்றவற்றை அணியத் தடை இல்லை.

 

இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயக முறைப்படி கருத்து வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் இப்படி தடை விதிப்பதை ஆதரித்தனர். இந்த வாக்கெடுப்பு 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்டது. பின்னர் சட்டம் இயற்றப்பட்டு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 

இதை முன்னின்று வரைவுச் சட்டத்தை அமைத்த ஜியார்ஜியோ கிரின்ஹெல்லி (George Ghiringhelli), “இந்தத் தடையானது டிசினோ மற்றும் ஸ்விட்சர்லாந்து பகுதியில் பதுங்கி இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனம் தரும் இந்தச் செய்தி தனியான ஒரு செய்தி அல்ல.

2 முஸ்லீம் கண்ணன்

 

உலகெங்கும் உள்ள நாடுகளின் பார்வை முஸ்லீம்களின் மீது சந்தேகத்தைக் கொண்டுள்ளதாக மாறி வருவதைத் தெரிவிக்கும் பல செய்திகளில் ஒன்று.

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்று பல முஸ்லீம் அறிவுஜீவிகளும், நல்லவர்களும் கூறுவது உண்மையே!

 

 

ஆனால் அந்த அறிவு ஜீவிகளும், நல்லவர்களும், அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றையும் செய்யவில்லையே (அல்லது அவர்களைத் தீவிரவாதிகளும் அவர்களின் இயக்கத் தலைவர்களும் செய்ய விடவில்லையே)

 

ஆகவே முஸ்லீம்கள், குறிப்பாக முஸ்லீம் பெண்மணிகள் எழ வேண்டிய தருணம் வந்து விட்டது. அவர்கள் தங்கள் கணவன்மார்களை, சகோதரர்களை, உறவினர்களை அழைத்து தீவிரவாதத்தை முஸ்லீம் சமுதாயத்திலிருந்து அறவே அழித்தொழிக்க முன் வர வேண்டும். சொர்க்கத்தை இங்கேயே ஸ்தாபிக்கும் வண்ணம் அமைதியான சமாதானமுள்ள அழகிய பூமியை உருவாக்க உதவ வேண்டும்.

 

 

இல்லையேல்… காலம் அவர்களுக்குக் கடுமையான படிப்பினையைத் தந்து விடும். உணர்வார்களா?

********

அடுத்து பிரான்ஸ் என்ன செய்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்