
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 31 August 2018
Time uploaded in London – 20-44 (British Summer Time)
Post No. 5381
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
இந்துக்களின் அதிசய மூச்சு சாஸ்திரம்
நமது மூக்கில் இரண்டு துளைகள் உள்ளன. அதில் மூச்சு மாறி மாறி ஓடும். இதை நாம் கவனிப்பதே இல்லை. எப்போதாவது ஜலதோஷத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் அப்போது மட்டுமே, எந்த துவாரத்தின் வழியாக மூச்சு ஓடுகிறதோ அந்த வழியாக விடுகிறோம்.
வலது துவாரம் வழியாக மூச்சு விடும்போது அதை சூரியகலை என்பர். இடது துவாரம் வழியாக முச்சு விடும்போது அதை சந்திரகலை என்பர். சிலநேரங்களில் இரண்டு துவாரம் வழியாகவும் மூச்சு சென்று வரும்; இதை சுழுமுனை என்பர்.
இந்த மூச்சு சாஸ்திரத்தை நன்கு கவனித்த பெரியோர்கள் சாதாரண மனிதனுக்கு மூச்சு எப்படி ஓடுகிறது என்று கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளனர். இதைப் பற்றி மேலை நாட்டு மருத்துவ நூல்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலும் சூரிய கலை எனப்படும் வலது நாசித் துவாரம் வழியாக மூச்சு வெளியேறும்; உள்ளே வரும். எட்டு மணி முதல் பத்து மணிவரை மூக்கின் இடது துளை வழியாக- அதாவது சந்திர கலை வழியாக மூச்சு விடுவோம். இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறி மாறி ஓடும்.

சூரிய கலையை பிங்கலை என்றும் சொல்வர்.
சூரிய கலையில் செய்யக்கூடிய காரியங்கள் என்ன என்று பழைய நூல்கள் கூறும்:–
கல்வி கற்றல்
மந்திரம் ஓதுதல் துவக்கம்
வாஹனம் ஓட்டக் கற்றல்
சித்திரப் படமெழுதல்
ஸ்நானம்/ குளியல்
சொற்பொழிவாற்றுதல்
தான தருமம்
வேட்டை யாடல்
பெண்களுடன் சம்போகம்
மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம்
புத்தாடை அணிதல் (நூதன வஸ்திராபரணம்)
வடக்கு, கிழக்கு திசையில் பிரயாணம்
சந்திர கலை எனப்படும் இடது துவரம் வழியாக நாம் மூச்சு விடும்போது செய்ய வேண்டிய செயல்கள்
தெற்கு, மேற்கு திசையில் பிரயாணம் செய்தல்
யுத்தம் செய்தல்
உபநயனம்
கிரஹப் ப்ரவேசம்
விதை விதைத்தல்
மருந்து சாப்பிடுதல்
சாந்தி கழித்தல்
விவாகம்
யோக அப்யாஸம்
வெளிநாட்டுப் பயணம்
கடவுள் சிலை நிர்மாணித்தல்
அலங்காரம்
இந்த நேரங்களில் இந்தக் காரியங்களைச் செய்வது 100 சதவிகித பலன் தரும் என்பது நம்பிக்கை.
ஆருடம் சொல்ல ஆசையா?
மூச்சு சாஸ்திரத்தைப் பயின்றால் நீங்களும் ஆரூடம் சொல்லலாம். ஆனால் மனம் , மொழி, மெய் ஆகியவற்றில் சுத்தம் வேண்டும்; அல்லது ஜோதிடம் சொல்லியே சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஏனெனில் நாம் சொல்வது பலிக்காது; அப்படிப் பலித்தாலும் அதுவே நம்மை சிக்கலில் மாட்டிவிடும். ஆகையால் வினைத் தூய்மை இல்லாதோர் விலகி நிற்க.
யாராவது ஒருவர் உங்களிடம் வந்து நான் கார் வாங்கலாமா, வீடு வாங்கலாமா, அல்லது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலில் வெற்றி கிடைக்குமா, போட்டி போடலாமா என்றெல்லாம் கேடதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மூக்கின் வலது துவாரத்தின் வழியாக மூச்சு ஓடி, அவரும் அதே பக்கத்தில் நின்று உங்களை எது கேட்டாலும் ஜயம்/ வெற்றி என்று சொல்லலாம்.
இது சூரிய குறி எனப்படும்
சந்திர குறி என்றால் என்ன?
சந்திர கலை பூரணமாய் நடக்கும்போது– அதாவது இடது துளை வழியாக மூச்சு ஓடுகையில் ஒருவர் வந்து அதே பக்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அந்தக் காரியம் தடை இன்றி நிறைவேறும் என்று செப்பலாம்.
மூக்கின் இரண்டு துளைகள் வழியாகவும் மூச்சு ஓடினால் அதை சுழும்,,,,,,,,,,,,,,,னை என்பர். அந்த நேரத்தில் ஒருவர் வந்து கேட்டால் அவர் வெற்றி பெறமாட்டார். காணாமற்போன பொருள் கிடைக்குமா என்று கேட்டாலும் அது கிடைக்காது என்று சொல்லிவிடலாம்.
மூச்சு ஓடும் பக்கம் பூரண பக்கம்
மூச்சு ஓடாத பக்கம் சூன்யம் எனப்படும்.
நமக்கு வேண்டாதவர் வந்தால், எதிரிகள் வந்தால், அவர்களை சூன்ய பக்கத்தில் நிற்க வைத்து, நிறை வேறாது என்று சொல்லலாம். வாதங்களில் அவரைத் தோற்கடித்து விடலாம்.
மூச்சு சாஸ்திரத்தில் இன்னும் பல அதிசயங்கள் உண்டு; அவற்றைப் பின்னர் காண்போம்.
-சுபம்–