மூன்று கிரகம் உச்சம்! மந்திரி பதவி நிச்ச(ய)ம் !! – பகுதி 1 (Post.8619)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8619

Date uploaded in London – –3 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் பார்த்த பார்வை
நான்பார்த்த பார்வை அவர் பார்க்கவில்லை
அவர்சொன்ன வார்த்தை நான் கேட்கவில்லை
உன் கண்ணில் அவர் இருந்தால்
அவர்கண்ணில் நான் இருந்தால்….. பிரச்சினை ஏதுமில்லை



புயல்வேகத்தில் ஓடிவந்தார் அவர்.
நான் சொல்லாமலே நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டார்.
அவர்முகத்தில்  வெடித்த எள்ளையும் கொள்ளையும் பார்த்த
மாத்திரத்தில் நானே ஐயா வணக்கம்! என்று சொல்லி விட்டேன்
அவரே ஆரம்பித்தார்.


சார் மூன்று கிரகங்கள்,அதுவும் முக்கிய கிரகங்களான குரு,
சுக்கிரன் சூரியன் உச்சமாக இருந்தால் மந்திரி பதவி கிடைக்குமாமே?.?.
நான்-ஜாதகத்தை பார்க்கணுமே????


அவர் ரொம்ப அவசரப்பட்டார் அவரிடம் போயிருந்தேன்
கண்டிப்பா நீ மந்திரிதான் என்று அடித்து சொல்றார்!!!!
நான்- இதற்கு ஏன் இங்கு வருகிறீர்கள ??? நேராக நம்ம
சீ எம். (C M ) யே போய் பார்த்துற வேண்டயதுதானே……


எனக்கு 3 கிரகம் உச்சம் என்று சொல்லி கேட்க வேண்டியதுதானே
என்று நக்கலாக சொன்னேன்.


போய்கேட்டேனே………ஆபீஸ் பக்கமே விடமாட்டேனுட்டானுன்க


பெரிதாக சத்தம் போட்டேன்…. போலீஸ் அதிகாரி வந்து சத்தம்
போட்டார்

எனக்கு 3 கிரகம் உச்சம் …வருங்கால மந்திரி ….. இப்படி தடுக்கலாமா .??

என்னை ஏற இறங்க பார்த்தார் உள்ளே போனார்
ஒரு கவருடன் வந்தார்.


ஓஹோ ஓகே ஓகே என்னை பார்க்காமலே பதவி அடித்து கொடுத்துட்டார் போல……
பின்னால் மாலையுடன் வந்து சந்திபபோம்.


கவருடன்வந்த அவர போலீஸ அல்ல, செக்யூரிடி என்ற வெளியே வந்து டிரஸை பார்த்த பின்தெரிந்தது.
வாங்க சார் உங்களுக்கு வண்டி அரேன்ஞ் (arrange) செஞசிருக்கோம்
சீ எம் ன்னா சி எம். (CM = Chief Minister) தான்…….. எல்லாம்; அந்த 3 கிரகம் செய்யற
வேலை………
அங்கே ஒரு ஆம்புலன்ஸ் காத்திருந்தது. ஓஹோ கார் இல்லை
என்றவுடன்பதவி ஏற்புக்காக அவசரமாக ஆம்புலனஸே ஏற்பாடு
பண்ணியிருக்கார் நம்ம சி எம்……


ஆம்புலன்னஸில் நம்பி ஏறி  உட்கார்ந்தேன். அது நேராக
கீழ்பாக்கத்திலுள்ள மன நல காப்பகத்திற்கு சென்றது.


ஓஹோ பதவி ஏற்பு விழாவை எனக்காக அவசரமாக இங்கே
மாற்றியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எல்லோரும் சல்யூட்
அடித்தனர்என்ஐப பார்த்து……வருங்கால மந்திதிரியை
முனபே தெறிந்து கொண்டார்கள் போலிருக்கிறது
கையைப்பிடித்துக் கொண்டு சென்றார் அவர்…
நேரே டாக்டர் ரூமுக்கு அழைத்து சன்றார்.ஓஹோ மெடிகல் 
செக்கப் பண்ணுவதற்கு…..


இரண்டு ஆண் அட்டெண்டர்கள என இரண்டு பக்கமும் என்னை
அழுத்தி பிடித்துக் கொண்டார்கள்……..
அவ்வளவுதான் ஓரு வாரமாகிவிட்டத் நான் தப்பிப்பதற்கு!,,,,

தொடரும்
……………………………………….

tags- மூன்று கிரகம் உச்சம், மந்திரி பதவி,