4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் ஆண்டு! (Post No.9492)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9492

Date uploaded in London – –14  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

படகு /ப்லவ/ பிலவ வருஷ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அறுபது வருட வரிசையில் முப்பத்தைந்தாவதாக இடம்பெறுவது படகு. இதற்கான ஸம்ஸ்க்ருத்ச் சொல்  ‘ப்லவ’ (Float/Boat in English) .

இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலன்களையுயும் அளிக்கட்டும்!

படகு /ப்லவ என்று சொன்னவுடன் சில படகு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.

அப்பர் பெருமான் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் படகு பற்றிப் பாடினார் :–

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே

–அப்பர் தேவாரம் 4-46

அழகான உருவக அணி!

மனம் = படகு/தோணி

மதி /அறிவு = துடுப்பு

சினம் = சரக்கு

கடல் = சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல் (குறள் )

மனன் = மன்மதன்/காமம்

மறியும்போது = இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால்

உன்னை நினைக்கும் உணர்வு = ஓற்றியூரில் கோவில்கொண்ட

சிவபெருமானே  உன்னை நினைந்தால் போதும் ; உய்வு உண்டு.

மனம் என்பது ஒரு படகு என்பதையும், அது காற்று அடிக்கும் திசைக்கு ஏற்பச் சென்றால் என்ன நடக்கும் என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நாலாம் திருமுறையில்.

XXX

ஆக ப்லவ வருஷ அறிவுரை:

படகை ஜாக்கிரதையாக, கவனமாக செலுத்துங்கள் !

அடுத்தபடியாக என் நினைவுக்கு வரும் கவிதை பாரதியாரின் கவிதையே!

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

நல்ல சுவையான அருமையான கற்பனை : மலையாள அழகிகள்; நதி- பஞ்சாப் பில் ஓடும் சிந்து நதி ; அதில் தோணி/படகுப் பயணம். பின்னணியில் தெலுங்கு மொழியின் தேனிசை !

இப்படி வாழ்நாள் முழுதும் கழிக்க முடிந்தால் எப்போதும் தோணி/ படகு/ கப்பல்/ ப்லவ நீடிக்கட்டும்! .

XXX

அப்பருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் புத்தர். அவர் கடலைக் கண்டதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர் வலம் வந்த இடங்கள் பீஹார் , உத்தரப்பிரதேச மாநில  நகரங்களே . அவர் படகு பற்றிப் படுகிறார். அது கங்கை நதி அல்லது ஏரிப்  படகாக இருக்கவேண்டும்

தம்மபதத்தில் புத்தரும் அப்பர் போல எச்சரிக்கிறார் –

வாழ்க்கை என்னும் படகிலுள்ள சரக்கை தூக்கி எறியுங்கள் ; அப்போது அது வேகமாகச் செல்லும்  தீய ஆசைகளையும் புலன் இன்பத்தையும் (சரக்கு) களைந்து விட்டால் வாழ்க்கைப்படகு ‘நிர்வாணம்’ (முக்தி) என்னும் இடத்தை விரைவில் அடைந்து விடும் – தம்மபதம் 369.

வாழ்க்கை = படகு

சரக்கு = ஆசைகள்

XXX

4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் பிலவ ஆண்டு.

இறுதியாக இந்த பிலவ ஆண்டின் அதிர்ஷ்ட சாலிகள் யார் என்று பார்ப்போம் :-

தனுர், மீனம், ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ; அதைவிட கூடுதல் அதிர்ஷ்டம் மகர ,கும்ப ராசிக்கார்களுக்கு இருந்தாலும் அதே அளவுக்கு நஷ்டமும் உண்டு ; அதாவது லாபமும் நஷ்டமும் சமம்

அதிக நஷ்டம் உடைய  ராசிகள் –

கடக , சிம்மம்

ஏனைய ராசிக்காரர்களுக்கு லாப- நஷ்டம் சமம்

XXX

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்

ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட

மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்

நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

பெரியபுராணம்சேக்கிழார்

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து!

–subham–

Tags – ராசி, அதிர்ஷ்டம், மனம், படகு, தோணி , ப்லவ, பிலவ

ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்! (Post No.9170)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9170

Date uploaded in London – –21 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராகங்கள் தொடரில் சில புதிய ராகங்கள்!

ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

ச.நாகராஜன்

12 ராசிக்குரிய ராகங்கள்!

  1. மேஷம் – ஷண்முகப்ரியா
  2. ரிஷபம் – ஸ்ரீராகம்
  3. மிதுனம் – மாளவம்
  4. கடகம் – ஹிந்தோளம்
  5. சிம்மம் – வசந்தா
  6. கன்னி – பூபாளம்
  7. துலாம் – நாதநாமக்ரியா
  8. விருச்சிகம் – கரகரப்ரியா
  9. தனுசு – சாரங்கா
  10. மகரம் – பைரவி
  11. கும்பம் – சங்கராபரணம்
  12. மீனம் – பங்காளா

*

கல்யாணத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பாட வேண்டிய ராகங்கள்

நிச்சயதார்த்தம் – கானடா, அடாணா, பியாக்கடை

மாப்பிள்ளை அழைப்பு – கல்யாணி, சங்கராபரணம்

ஜானவாசம் – தோடி, காம்போதி, கரகரப்ரியா

ஊஞ்சல் – ஆனந்தபைரவி

சடங்குகள் – கேதாரம், பூபாளம், லஹரி

முகூர்த்த நேரம் முன்பு – நாட்டைகுறிச்சி

முகூர்த்த நேரம் – தன்யாசி, நாராயணி

தாலி கட்டியவுடன் – ஆனந்த பைரவி

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பாடல் – சைந்தவி

*

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் நவக்ரஹ கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

அதில் வரும் ராகங்கள் வருமாறு:-

சூர்யமூர்தே நமோஸ்துதே – சூரியன் -சௌராஷ்டிரம்

சந்த்ரம் பஜ மானஸ – சந்திரன் -அசாவேரி

அங்காரக மாஸ்ர யாம் யஹம் – செவ்வாய் – ஸுரடி

புதம் ஆஸ்ரயாமி ஸததம் – புதன் –  நாடகுரஞ்சி

ப்ரஹஸ்பதே தாராபதே – குரு – அடாணா

ஸ்ரீ சுக்ர பகவந்தம் சிந்தயாமி – சுக்ரன் – பரஸ்

திவாகரதனுஜம் சனைஸ்சரம் – சனி – யதுகுலகாம்போஜி

ஸ்மராம்யஹம் சதா ராஹும் – ராகு – ரமா மனோஹரி

மஹாசுரம் கேதுமஹம் – கேது – ஷண்முகப்ரியா (சாமரம் என்ற பெயரும் உண்டு)

*

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் அவர்கள் இயற்றியுள்ள 11 கமலாம்பிகா நவாவர்ண கீர்த்தனைகளும் அவற்றின் ராகங்களும் வருமாறு:

  1. கமலாம்பிகே – தோடி
  2. கமலாம்பா சம்ரக்ஷது – ஆனந்தபைரவி
  3. கமலாம்பாம் பஜரே – கல்யாணி
  4. ஸ்ரீ கமலாம்பிகயம் – சங்கராபரணம்
  5. கமலாம்பிகாயை – காம்போஜி
  6. ஸ்ரீ கமலாம்பா பரம் – பைரவி
  7. கமலாம்பிகயாஸ்தவ – புன்னாகவராளி
  8. ஸ்ரீ கமலாம்பிகயம் – ஸஹானா
  9. ஸ்ரீ கமலாம்பிகே – கண்ட ராகம்
  10. ஸ்ரீ கமலாம்பா ஜயதி – ஆஹிரி
  11. ஸ்ரீ கமலாம்பிகே – ஸ்ரீ

***



tags– ராசி, ராகம், நவக்ரஹ கீர்த்தனை, 

கல்யாண சமையல் சாதம் , காய்கறிகளும் பிரமாதம்! (Post No.8518)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8518

Date uploaded in London – 16 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவிமார்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்!

kattukutty

என் மனைவி சமைச்ச சாதம்
சாப்பிட பிரமாதம் இந்த கவுரவ ப்ரசாதம்
இதுவே எனக்கு போதும்….
அ ஹ்ஹ ஹ்ஹஹ ஆஹ்ஹ ஹ்ஹா

என்றாவது ஒரு நாள் இந்த மாதிரி பாடி மனைவியை motivate
பண்ணியிருக்கிறீர்களா……..

சமையலறையில்,அல்லது டைனிங் டேபிளில்
என்ன நடக்குதுன்னு நான் சொல்றேன்



“என்ன (டி)பண்ணித் தொலைஞ்சிருக்கே???
ஏண்டா இந்த வீட்ல சாப்பிடறோம்ன்னு இருக்கு”

என்னோட ஆபீஸுல என் friend கோவிந்தன் அவன்
பொண்டாட்டி சமச்ச பிரியாணி ஒரு பிடி போட்டான்
பாரு….. என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட்…..ம்……அவன்
கொடுத்து வச்சவன்……..

‘ஜோக்’கும்   படித்திருக்கிறோம்
“நீ பண்ணின இத நம்ம நாய்க்கு போட்டிறாதே;
செத்து கித்து தொலைக்கப் போவுது;
ஆசையா வளர்த்த நாய்!”

சிலர் சாப்பிடும் போதே, “இத மனுஷன் சாப்புடுவான்?
நா ஒரு சொரணை கெட்டவன். தினம்,தினம் சாப்புடறேன்” என்பர்.
அதற்கு அவன் மனைவி, இந்த பேச்சுக்கொண்ணும் குறச்சலில்ல
தினம் தினம் மூணு வேளை தட்டு நிறையா கொட்டிக்கறதிலே
குறச்சலில்லே ,இதுலே பேச்சு வேற…….” என்று முணுமுணுப்பாள்.


என்னடி அங்க முணுமுணுப்பு…..
உங்களுக்கு பிடிக்லன்னா வைச்சுடுங்க குழந்தைங்க நல்லா
சாப்பிடுங்க…..

சரி, நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி  நடக்கப் போவதாவது நல்லனவைகளாக இருக்கட்டும்

****



முதலில் உங்கள் மனைவி என்ன நட்சத்திரம் என்று பாருங்கள்.


அது என்ன ராசி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள் சமையலறையில் முடிந்த வரை என்னன்ன
‘Modification’ பண்ண முடியுமோ அதைப் பண்ணி
உங்கள் மனைவியை சமைக்கச் சொல்லுங்கள்



ஏ மேஷ ராசி பெண்களே


உங்களுக்கு கொஞ்சம் ‘ஸ்பீடு’ ஜாஸ்தி…..நீங்க கிழக்கு
பார்த்து தான் சமைக்கணும். உங்க இடதுபக்கம் தண்ணீரும்
வலது பக்கம் உங்க சமையல் பொருள்களை வையுங்க


மிதுன ராசி பெண்களே


துருவித் துருவி நல்ல பொருளைத் தான் எடுத்து சமைப்பீங்க
சிரிக்கப் பேசிக்கிட்டே சமைப்பீங்க…..


உங்க சமையலறை வடக்கு பக்கம் இருக்கணும்..முடியாத
பட்சத்தில் சமையல் அறை எந்த பக்கம் இருந்தாலும்
நீங்க வடக்கு பார்த்தாவது சமையல் செய்யுங்க…இடது புறம்
தண்ணீர் வலது பக்கம் உங்க சாப்பாடு…..



ஏ சிம்ம ராசி பெண்களே


சமையலில் புதுமை தேடும் நீங்கள் மனசு வைத்தால் விதம்
விதமாக சமைப்பீர்கள் இல்லேன்னா ஓட்டல் தான்….
சமையலறை கிழக்கில் அல்லது கிழக்கு பார்த்து சமைக்கவும்
உணவும் தண்ணீரும் வலது பக்கம் ஓ.கே ????

கடக ராசி பெண்களே


அறு சுவை உணவின் அரசியே!!! தென்மேற்கு திசை
அல்லது தெற்கு திசை நோக்கி சமைக்கவும். விதம் விதமாக
சமைக்க தெரியும் உங்களுக்கு. தென் மேற்கே தண்ணீர். தென்
கிழக்கில் உணவுப்பொருள்….



ஏ கன்னி ராசி பெண்களே


கோச்சுக்காதீங்க!  நீங்க ரொம்ப “செல்பிஷ்” உங்களுக்கு
மேற்கே சமையலறை இருந்தால் தான் நல்லது….நீங்க
அருமையா சமைத்த உணவு எல்லாம் இடது பக்கம், தண்ணீர்
வலது பக்கம் தண்ணீர்… சரியா???.?

துலாம் ராசி பெண்களே


மெழுகு போன்ற இளகிய மனம்  படைத்த நீங்க வடமேற்கு
திசையில் அல்லது வடக்கு பார்த்து நின்று வடக்கு பார்த்து
சமையல் செய்யணும். பட படன்னு வேலை செய்யக்கூடாது
மெதுவா பார்த்து சமைக்கணும்….சரியா???
இடது பக்கம் தண்ணீர், வலது பக்கம் உணவு.



ஏ விருச்சிக ராசி பெண்களே,


நம்ம ‘டேஸ்டே’ தனி என்று விதம் விதமாக சமைக்கும்
நீங்க தென்கிழக்கு பார்த்து அல்லது கிழக்கு பார்த்து சமைக்கணும்.


இந்த திசையை பார்த்து சமைத்தால சண்டை வராது!!!
உணவு காய் கறிகள் இடது பக்கம், தண்ணீர் வலது பக்கம்
என்ன ….புரிஞ்சதா???? ‘ஸ்டார்ட்…….’

தனுசு ராசி பெண்களே


எனக்கு தெரிகிறது நீங்க ‘ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா’–
என்று பக்தியுடன் பாடிக்கொண்டே சமைப்பது. அப்படியே கொஞ்சம்
கிழக்கு பார்த்து சமைங்க பார்ப்போம். வலது பக்கம் தண்ணீர்
இடது பக்கம் உணவுப்பொருள்


ஏ மகர ராசி பெண்களே


நீங்க ரொம்ப ‘போல்டான’ மேடம்……உங்களுக்கு தென்மேற்கில்
சமைலறை இருக்க வேண்டும், இடது பக்கம் தண்ணீர், வலது பக்கம்
உணவு….. இனிப்பான நீங்கள் உங்கள் கணவர்,குழந்தைகள்
உங்களை புகழ வேண்டும் என நினைப்பீர்கள்.

கும்ப ராசி பெண்களே


சமைலறை பிரச்சினைகளை சாதுர்யமாக ‘அட்டாக்’ செய்யும்
நீங்கள் தென் கிழக்கு திசையை பார்த்து சமைக்கணும்.
இனிப்பு பண்டம் செய்வதில் வல்லவர் நீங்கள்….



ஏ மீன ராசி பெண்களே


குங்கும பொட்டும், குழந்தை மனமும் கொண்ட நீங்கள் கொஞ்சம்
அலட்சியம் தான் சமையலில்…தெற்கே சமையலறை இருக்க வேண்டும்.

புதுசு புதுசாக கசப்பு இனிப்பு வகைகள சமைத்து
வெற்றியும காண்பீர்கள்.

பொதுவாக வாஸ்து பிரகாரம் தென் கிழக்கு மூலையான அக்னி
மூலையில் தான் அமைய வேண்டும் சமையலறை. அப்படி முடியாத
பட்சம் வட மேற்கு மூலையில் அமைத்துக் கொள்ளலாம்.
என் அபிப்ராயம் வேறு விதம். ஒவ்வொரு ராசிக்கு தகுந்த மாதிரி
சமயலறை அமைத்து நன்றாக சமைத்து சாப்பிட்டு சிறப்பாக
வாழ்வதை கண்முன் கண்டேன்


அதற்காவே பெண்குலம் தழைக்கவே திரு சாமிநாதனை
கேட்டுக் கொண்டேன் எனது இந்த ஆராய்ச்சி முடிவுகளை
வெளியிட…….


எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றும் நினையேன் பராபரமே !!!

tags – ராசி,நட்சத்திரம், சமையலறை,கல்யாண சமையல் , சாதம் ,