
Post No. 9799
Date uploaded in London –1 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குழந்தைகளுக்கு கதைகள் எழுதி புகழ்பெற்றவர் ரோல்ட் டால் (ROALD DAHL)
ரோல்ட் டால் போர்க் கால பிரிட்டிஷ் விமானி;
திரைப்பட வசன கர்த்தா;
நாவல் ஆசிரியர்;
டெலிவிஷன் நிகழ்ச்சிகள் தந்தவர்;
25 கோடி புஸ்தகங்கள் விற்பனைக்கு மூல புருஷன்;
குழந்தைகள் மனதில் நீங்காத இடம்பெற்றவர்;
அமெரிக்க நடிகையை மணந்தவர்.
பிறந்த தேதி – செப்டம்பர் 13, 1916
இறந்த தேதி – நவம்பர் 23, 1990
வாழ்ந்த ஆண்டுகள் – 74
பிரிட்டனில் ரோல்ட் டால் என்ற பெயரை அறியாத பள்ளிச் சிறார் இரார்.
சார்லியும் சாக்லேட் தொழிற்சாலையும் என்ற குழந்தைகளுக்கான கதை மூலம் பிரபலம் ஆனவர் ரோல்ட் டால் .



பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் பிறந்தவர். இவருக்கு 4 வயதானபோது தந்தையை இழந்தார். அதற்கு முன்னரே, இவருடைய பெற்றோர்கள் நார்வே நாட்டிலிருந்து பிரிட்டனில் குடியேறினர். ஹாஸ்ட்டலிலேயே தங்கிப் படிக்கும் போர்டிங் ஸ்கூலில் (BOARDING SCHOOL) கல்வி கற்றார். அங்கு கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தன. இதனால் இவர் எழுதிய கதைகளில், கொடுமை செய்யும், வயதில் முதியோரைப் பழிவாங்கும் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அதே போல எல்லாக் கதைகளிலும் சாக்லேட்டும் இடம்பெறும்.
பள்ளிக்கூட கல்வி முடித்த பின்னர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அதை உதறித் தள்ளிவிட்டு, ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு எண்ணைக் கம்பெனியில் வேலை பார்த்தார். 1939-ம் ஆண்டில் இரண்டாவது உலக மகாயுத்தம் வெடித்தது. பிரிட்டிஷ் விமானப் படையின் பெயர் ராயல் ஏர் ஃ போர்ஸ் (ROYAL AIRFORCE). அதில் விமானியாகச் சேர்ந்து வானில் பறந்து வெடிகுண்டுகளை வீசினார் ரோல்ட் டால்.
அவருடைய போதாத காலம்; விமானம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் உலகப் போரில் உளவாளியாக (SPY) பணி புரிந்தார்.
கனவில் மலர்ந்த கதைகள்
உலகப் போரில் ஏற்பட்ட காயங்களிலிருந்து குணமடையும் காலத்தில் அவருக்கு வினோதமான கனவுகள் உண்டாயின. அவற்றை சொற்களில் வடித்துக் கதைகளாகத் தந்தார்.
போர் முடிவுக்கு வந்தவுடன் தனது கதைகளை புஸ்தகமாக (FOR ADULTS) வெளியிட்டார். இவை குழந்தைகள் கதை அல்ல .
அவைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. பிற் காலத்தில் அவை டெலிவிஷன் கதைகளாக வலம் வந்தன. அந்தக் கதைகளில் எதிர் பாராத முடிவுகள், விசித்திரமான முடிவுகள் இருக்கும்; அச்சறுத்தும் செயல்களும் கதைகளில் இடம் பிடிக்கும்.
ரோல்ட் டால் அமெரிக்க நடிகை பட்ரீஷியா நீல் (PATRICIA NEAL) – ஐ திருமணம் செய்தார். அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தன. பின்னர்தான் குழந்தைகளுக்கான கதைகளை எழுதத் துவங்கினார் .அவருக்கு 44 வயதானபோது , அவர் எழுதிய ஜேம்ஸும் இராட்சத பீச் பழமும் என்ற கதை குழந்தைகள் உலகில் அவருக்கு இடம்பிடித்துக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல குழந்தைக் கதைகள் வெளிவந்தன. அவற்றில் கேளிக்கையும் வேடிக்கையும் இருக்கும். வயதில் பெரியோரை மட்டம் தட்டும். இதனால் பெற்றோரும் ஆசிரியரும் இக்கதைகளை வெறுத்தனர்; மறுத்தனர் ; கரித்தனர்.
அமெரிக்க நடிகையுடனான 30 ஆண்டு திருமண வாழ்வு முறிந்தவுடன் இரண்டாவது கல்யாணம் கட்டினார் . புதிய மனைவியின் பெயர் – பெலிஸிட்டி லிஸ்ஸி கிராஸ்லான்ட் (FELICITY LICCY CROSSLAND) அவர் டாலின் புகழ் பரவும் வகையில் குழந்தைகள் அறக்கட்டளை, ரோல்ட் டால் மியூஸியம் , கதை சொல்லும் நிலையம் ஆகியவற்றை அமைத்தார்.
திரைப்படங்கள் இரண்டுக்கு ,ரோல்ட் டால் கதை வசனம் எழுதினார்.
YOU ONLY LIVE TWICE (ஜேம்ஸ் பாண்ட்)
CHITTY CHITTY BANG BANG


இவ்வாறு பல துறைகளில் ரோல்ட் டால் இறங்கியதால் திரைப்படம், டெலிவிஷன், குழந்தைகள் இலக்கியம் போர்க்கால வீர தீரச் செயல் கள் , உளவுத்துறை , நாவல்-சிறுகதைத் துறை என்று எல்லா வகைகளிலும் அவரது பெயர் இடம்பெற்றது. இதனால் ரோல்ட் டாலுக்கு நிறைய விருதுகளும் பட்டங்களும் கிடைத்தன.
ரோல்ட் டால் இலக்கிய படைப்புகள்—
1953- SOMEONE LIKE YOU
1959 – KISS, KISS
1961 – JAMES AND THE GIANT PEACH
1964 – CHARLIE AND THE CHACOLATE FACTORY
1970 – FANTASTIC MR. FOX
1975 – DANNY THE CHAMPION OF THE WORLD
1982 – THE BFG
1983 – THE WITCHES
1988 – MATILDA


–SUBHAM–
tags: பிரிட்டிஷ் கதாசிரியர், ரோல்ட் டால்,Roald Dahl, Children Stories


