நல்ல பதில்கள்! (Post No.2698)

disraeli book

Written by S NAGARAJAN
Date: 6 April 2016

 

Post No. 2698

 

Time uploaded in London :–  6-00  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சமயோஜிதம்

 

நல்ல பதில்கள்!

 

ச.நாகராஜன்

 

சிக்கலான தருணங்களில் தக்க பதில்களை உடனடியாகத் தருவது ஒரு கலை.

 

மேதைகளிடம் இதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

பிரிட்டனில் எதிரும் புதிருமாக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேலியும் வில்லியம் க்ளாட்ஸ்டோனும் ஒருவருக்கொருவர் சூடான பதிலைக் கொடுப்பது வழக்கம்.

 

ஒரு முறை டிஸ்ரேலியிடம் ஒருவர் misfortune க்கும்  calamity க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா டிஸ்ரேலி!

 

“தேம்ஸ் நதியில் டிஸ்ரேலி விழுந்து விட்டால் அது துரதிர்ஷ்டம். (Misfortune) அவரை யாராவது காப்பாற்றி மீட்டு விட்டால் அது பெரும் அபாயம்(calamity)” என்று பதில் சொன்னார் அவர்.

 

ஆப்ரஹாம்  லிங்கனைச் சந்தித்த ஒரு குழுவினர் உடனடியாக அடிமைகளை மீட்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கான காலம் கனியவில்லை என்று நினைத்தார் லிங்கன்.

 

வந்தவர்களோ பிடிவாதமாக இருந்தனர்.

 

லிங்கன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்” “ ஒரு ஆட்டின் வாலையும் கால் என்று நீங்கள் வைத்துக் கொண்டால் அதற்கு மொத்தம் எத்தனை கால்கள்?”

 

உடனே அவர்கள், “ஐந்து” என்று பதில் சொன்னார்கள்.

உடனே லிங்கன், “அது தான் இல்லை. வாலைக் கால் என்று சொன்னால் அது கால் ஆகி விடாது. அது வால் தான்!” என்றார்.

ஒரு கொள்கையை எப்படி மாற்றிச் சொன்னாலும் உள்ளது உள்ளபடி தான் இருக்கும்.

 

இங்கிலாந்தின் பிர்பல பாடலாசிரியரான தாமஸ் டிப்டின் தன்னைச் சந்தித்த இளைஞர் ஜெரால்டிடம் கேட்டார் இப்படி:”

அன்புள்ள இளைஞனே!   என் மீது உனக்குத் தான் அளப்பரிய நம்பிக்கை இருக்கிறதே! எனக்கு ஒரு கினி ( லண்டனில் புழக்கத்தில் இருந்த நாணயம்) கடன் தருவாயா?” என்றார்.

இளைஞனோ விவரமானவன்.

 

“ ஆஹா! அபாரமான நம்பிக்கை உங்கள் மீது இருக்கிறது. ஆனால் கினியா தான் என்னிடம் இல்லை!” என்றான் அவன்.

மனம் புண்படாமல் சமயோஜிதமாகப் பேசுவது ஒரு கலை!

பழகினால் வருவது அது!

 

**************