எலிச் செட்டியார் கதை! (Post No.5173)

Written by London swaminathan

 

Date: 2 JULY 2018

 

Time uploaded in London –   14-53 (British Summer Time)

 

Post No. 5173

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

“வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்” என்று வெற்றி வேற்கையில் அதிவீர ராம பாண்டியன் கூறுகிறார்.

 

கதாசரித் சாகரம் என்னும் உலகின் முதல் பெரிய கதைத் தொகுப்பு நூல் ஒரு சுவையான கதையைச் சொல்கிறது இது ஒரு ஸம்ஸ்க்ருத நூல்; கதைக் கடல் என்ற பெயரில் தமிழிலும் கிடைக்கும்.

 

வர்த்தகர்கள் கிடைக்கும் சிறு லாபத்தையும் மேலும் மேலும் முதலீடு செய்து வணிகத்தையும் லாபத்தையும் வளர்ப்பார்கள்.

 

பாடலிபுத்ரம் (பாட்னா, பீஹார்) நகரில் முன்னொரு காலத்திலொரு ஏழைச் செட்டி மகன் இருந்தான். அவன் பிழைக்க வழி ஏது என்று கருதிக் கொண்டிருந்தபோது ஒரு செத்துப் போன எலியைக் கண்டான். அதைக் கையில் தூக்கிக் கொண்டு போனபோது ஒருவன் பூனையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதைக்  கண்டான். பூனைக்கு எலி மாமிசம் பிடிக்குமே விலைக்கு வேண்டுமா? என்று வினவினான். உடனே அவன் என்னிடம் இரண்டு உழக்கு பச்சைக் கடலை மட்டுமே உளது என்றான்.

 

அதற்கென்ன, ரொம்ப பேஷ்! இந்தா எலி என்று பண்டம் மாற்று செய்தான். அதைச் சுண்டல் சுண்டி ஒரு சாலை ஓரத்தில் கடை விரித்தான்.

அருகில் ஒரு தண்ணீர் பானையும் வைத்தான். சாலையில் விறகு சுமந்து செல்லுபவர்கள், “அப்பா, சுண்டல் என்ன விலை?” என்று வினவ, “அவன் பணம் ஏதும் வேண்டாம்’ ஆளுக்கு இரண்டு விறகு கொடுங்கள் போதும்” என்று சுண்டலைப் பொட்டலம் போட்டுக் கொடுத்தான். அத்தோடு இன்னும் கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்து நாலணாவுக்கு விற்றான். பின்னர் அதற்குச் சுண்டல் கடலை வாங்கி பொட்டலம் போட்டு விற்கவே ஒரு மாதத்தில் ஏழரை ரூபாய் கிடைத்தது.

 

பிறகு விறகு வியாபாரத்தை ஒரு வருஷம் செய்யவே 300 ரூபாய் கிடைத்தது. பிறகு கடையை பெரிதாக்கி ஐந்தே வருஷங்களில் ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்தான். பிறகு அதை முதலீடு செய்து மளிகைக் கடை வைத்தான். பத்தே வருஷங்களில் ஊரே மதிக்கும் படி பணக்காரச் செட்டியானான் இருபது வருஷத்துக்குள் மிகப் பெரிய பணக்காரனானவுடன் அரசன் கூட அவனிடம் கடன் வாங்க வந்து நின்றான். அவன் எலியின் மூலம் இவ்வளவு பணம் சம்பாதித்ததால் அவன் பெயரே ‘எலிச் செட்டியார்’ என்று பிரபலமானது.

இது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸம்ஸ்க்ருதத்தில்

எழுதப்பட்ட நூல். ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டு

 

இந்தக் காலத்திலும் கூட உலகின் மிகப் பெரிய பணக்காரர்       களில் ஒருவரான மித்தல் (Lakshmi Mittal) கதை இப்படித்தான்; பழைய இரும்புகளை வாங்கி விற்றவர், மூடப் போகும் இரும்பு ஆலைகளை வாங்கி லாபம் சம்பாதித்தார். பின்னர் பெரிய இரும்பு வணிகர் ஆனார். இன்று உலகின் பெரிய பணக்காரர்   பட்டியலில் அவர் பெயர் உள்ளது.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ ( திரு = ஸ்ரீ= செல்வம்)

 

சுபம்.

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு! (Post No.2807)

MONEY_LAUND_1337399f

Written by london swaminathan

 

Date: 13 May 2016

 

Post No. 2807

 

Time uploaded in London :–  10-43 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அஃகமும்= நிலபுலன்களையும் அதில் விளையும் தானியங்களையும்

காசும்= பணத்தையும்

சிக்கென = உறுதியாக

தேடு = முயற்சி செய்து பெறு

-என்று கொன்றைவேந்தனில் அவ்வையார் அழகாகச்சொல்லிவிட்டார்.

இது போதாதோ என்று எண்ணி, மேலும் சொல்லுவார்:-

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

சொக்கர் = பொருளுடையவர் (சொக்கத் தங்கம் வைத்திருப்பவர்)

அத்தம் = செல்வம் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ=அறம், பொருள், இன்பம், வீடு என்பதிலுள்ள அர்த்தம் =அத்தம்)

பெறுவர் = அடைவர்.

அதாவது ஏற்கனவே செல்வம் வைத்திருப்பவர், புத்திசாலியாக இருந்தால், அதை நல்ல விதத்தில் முதலீடு செய்து மேலும் மேலும் செல்வதராவர் என்பது அவ்வையரின் கணிப்பு.

 

அட, இவ்வளவு சொல்லியும் புரியாதோருக்கு இன்னும் ஒரு வக்கியத்தையும் சொல்லி விடுவோம் என்று கருதி,

திரைகடலோடியும் திரவியம் தேடு – என்றார் கொன்றைவேந்தனில்.

black-money-generic_ndtv

அதாவது, உள்நாட்டில் செல்வம் சம்பாதிக்க முடியவில்லையா, அல்லது போட்டி தைகமாக இருக்கிறதா, வெளிநாட்டுக்குப் போய் சம்பாதி என்றார்.

இவை அத்தனையையும் கடைப்பிடித்து வெற்றி பெற்றவர்கள் செட்டியார்களும், படேல் சமூகத்தினரும்.

வெற்றிவேர்க்கை எழுதிய அதிவீர ராம பாண்டியனும் “வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்: என்று கூறி அதை உறுதி செய்கிறார்.

 

இந்து மதம் ஒரு திட்டமிடப்பட்ட மதம்; கட்டுக்கோப்பன மதம்; காமா சோமா என்றோ கன்னா பின்னா என்றோ அமைக்கப்பட்ட மதமல்ல. பழைய சம்ஸ்கிருத நூல்களில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்று வாழ்க்கையின் தத்துவங்களை நாலே சொற்களில் சொல்லிவிட்டனர். இதை அப்படியே தொல்காப்பியரும், சம்ஸ்கிருதப் பேரறிஞன் வள்ளுவனும், புறநானூற்றுப் புலவர்களும் அப்படியே அதே வரிசையில் தொல்காப்பியத்திலும், புற நானூற்றிலும், திருக்குறளிலும் பல இடங்களில் சொல்லிவிட்டனர். (குறள் எண், தொல்காப்பிய வரி எண், புறநானூற்றுப் பாடலெண் வேண்டுவோர் என் பழைய கட்டுரைகளைப் பார்க்கவும்).

 

அறம்:- வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடி

பொருள்:- சும்மா, பொழுதைக் கழிக்காதே! எப்படி பொருள் சேர்ப்பது; முதலில் சொன்ன அறப்படி (தர்மப்படி).

இன்பம்:– நல்ல மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து; அனுபவி ராஜா, அனுபவி.

 

மோக்ஷம்:- மேற்கூறிய மூன்றும் சிற்றின்பம்தான் தரும்; மேற்கூறிய மூன்றும் ஒரு நிலையில் அலுத்துப் போகும். பேரின்பம் பெற, நிலையான இன்பம் பெற, வீடு பேறு பெறத்தான் இவையனைத்தும் பயன்பட வேண்டும்.

 

சம்ஸ்கிருத பண்டிதர்களும் அழகாகச் சொல்லுகிறார்கள்:–

“ஸ்ரேயாம்சி சகலான்யனலசானாம் ஹஸ்தே நித்யசான்னிதயானி”

யார் சோம்பேறித்தனம் இல்லாமல், எப்பொழுதும், உழைக்கிறார்களோ, அவர்களிடத்திலே எப்போதும் வளமும் நலமும் தங்கும்.

 

Shreyaamsi cha sakalaanyanalasaanaam haste nityasaannidhyaani

 

All prosperity and welfare is always in the hands of those who are always active, who do not

know laziness  

 

lakshmi in kshetras

உத்தரராமசரிதம் என்னும் சம்ஸ்கிருத நாடகத்தில், பவபூதி கூறுவார்:-

 

“சாஹசே ஸ்ரீ ப்ரதிவசதி”

பொருள்:- துணிவான செயல்களைச் செய்வோரிடத்திலே லெட்சுமி வசிக்கிறாள் (செல்வம் நிலையாகத் தங்கும்)
साहसे श्री प्रतिवसति

 

Saahase shree prativasati

 

In adventure resides Goddess Lakshmi (Only those who are adventurous can amass wealth)
Uttararaamacharitam (Bhavabhuti)

 

–சுபம்–