இந்த அழகான மிருகத்துக்கு கொம்பும் வாலும் இல்லாவிடில் எப்படி இருக்கும்?
Written by London swaminathan
Article no.1883, Date: 23 May 2015.
இலக்கியம் கலைகள் பற்றிய சம்ஸ்கிருத பொன்மொழிகள்
1)சாஹித்ய சங்கீதகலாவிஹீன: சாக்ஷாத் பசு: புச்ச விஷயாணஹீன: — பர்த்ருஹரி
இலக்கிய, இசை, நுண்கலைகளை ரசிக்காதவன் வாலும் கொம்பும் இல்லாத பசுவுக்குச் சமானம் .(பசு=மிருகம்)
2)சத்ய: பலதி காந்தர்வம்– சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
பாட்டாகச் சொல்வதால் பயன்மிகும்.
3)விநா வேதம் விநா கீதாம் விநா ராமாயணீம் கதாம்
விநா கவீம் காளிதாசம் பாரதம் பாரதம் நஹி
வேதமும், கீதையும் ராமாயணக் கதையும், காளிதாசனின் கவிதையும் இல்லாவிட்டால் பாரதம், பாரத நாடாக இரா.
4)ரீதிராத்மா காவ்யஸ்ய – காவ்யாலங்கார சூத்ரானி
இலக்கியப் படைப்பின் உயிர்நாடி ஒழுங்குமுறை ஆகும்
5)வாக்யம் ரஸாத்மகம் காவ்யம் – சாஹித்யதர்பண:
“சுவைப்பதற்கான படைப்பு காவியம்”
6)வித்யாரத்னம் சரச கவிதா –
சுவையுடன் கூடிய கவிதையே கல்வியில் சிறந்தது
7)தேவஸ்ய பஸ்ய காவ்யம் – ருக் வேதம்
காலஸ்வரூபமாக (வேத ஸ்வரூபமாக ) இருக்கக்கூடிய இறைவனுடைய காவியத்தைப் பாருங்கள்.
8)தேவஸ்ய பஸ்ய காவ்யம் ந மமார ந ஜீர்யந்தி – அதர்வ வேதம்
அந்த இறைவனுடைய காவியத்தைப் பாருங்கள். அது முதுமை அடைவதில்லை; அழிவதுமில்லை.
9)கலாசீமா காவ்யம் – ப்ரசங்காபரணம்
கலையின் எல்லை (உச்சம்) காவியம்
10)கவி: கரோதி காவ்யானி
கவிகள் செய்வது (எல்லாம்) காவியம்
11)கவீனாம் உசனா கவி: – பகவத் கீதை
கவிஞர்களுள் நான் உசனஸ் (சுக்ராசார்ய)
12)ஸ்தாணுரயம் பார ஹார: கிலானுபூத
அதீத்ய வேதம் ந விஜானாதி யோ அர்தம்
வேதங்களைப் படித்துவிட்டு பொருள் தெரியாமல் இருப்பவன் அவன் வெறும் பாரத்தைச் சுமக்கும் உடல் உடையவனே
13)பாஷாசு முக்யா மதுரா திவ்யா கீர்வாண பாரதி
தஸ்மாத் ஹி காவ்யம் மதுரம் தஸ்மாதபி சுபாஷிதம்
—சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
எல்லா மொழிகளையும் விட முக்கியமானதும், இனிமையானதும், தெய்வீகமானதும் சம்ஸ்கிருதம் ஆகும்; அதிலும் சம்ஸ்கிருத காவியம் சிறந்தது. அதிலும் சிறந்தது சுபாஷிதம் (பொன்மொழிகள்)
14)கவய: கின்ன பஸ்யந்தி – சாணக்ய நீதி தர்ப்பண:
கவிகள் எதைப் பார்ப்பதில்லை? கவிகள் கண்களில் தென்படாதது ஏதேனும் உளதோ?
ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹான் பஹுஞ்சே கவி
15)ஸோக: ஸ்லோகத்வமாகத:
சோகமே ஸ்லோகமாக வந்தது (வால்மீகி—வேடன் கதை)
16)ஸ்லோகத்வமாபத்யத: யஸ்ய சோக: — ரகுவம்சம்
எவருடைய சோகம் ஸ்லோகமானதோ (வால்மீகி—வேடன் கதை)
17)கவய: க்ராந்த தர்சின:
பரந்த நோக்கும் விரிந்த பார்வையும் உடையவன் கவிஞன்.
சுபம்



You must be logged in to post a comment.