அன்னா கரீனா : தினமணி திரு. சந்தானம் மொழி பெயர்த்த அற்புத நாவல் (Post No.8510)

Sri V Santanam standing behind Rajaji.

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8510

Date uploaded in London – – –15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

1998ஆம் ஆண்டு. ஆகஸ்ட் 15. எங்களது தந்தையார் மதுரை எல்லிஸ் நகரில் ‘கொடி ஏத்தியாச்சா என்று கேட்டு விட்டு அமரரான நாள். அவருக்கு எங்கள் அஞ்சலி! – வெ.சந்தானம் குடும்பத்தினர்!

அன்னா கரீனா : எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அவர்கள் மொழி பெயர்த்த அற்புத நாவல்! -1

ச.நாகராஜன்

1

    லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா நாவல் ஒரு அற்புதமான நாவல். உலகப் புகழ் பெற்ற நாவல். இதை 1947ஆம் ஆண்டு தமிழ்ச் சுடர் நிலையம், திருவல்லிக்கேணி, சென்னை வெளியிட்டது.

இதை எனது தந்தையார் தமிழில் மொழி பெயர்த்தார்.

நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் 396 பக்கங்களைக் கொண்டது. இரண்டாம் பாகம் 348 பக்கங்களைக் கொண்டது. மொத்தம் 744 பக்கங்கள்.

நூலை வெளியிட்டவர் திரு அ.கி.கோபாலன், தமிழ்ச் சுடர் நிலையம், சென்னை.

அவர் நூலுக்கான பதிப்புரையைத் தந்துள்ளார்.

நூலுக்கு முகவுரை தந்துள்ளவர் பிரபல எழுத்தாளரான ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்கள்.

நூலுக்கு முன்னுரை தந்துள்ளவர் எனது தந்தையார்.

நூல் உருவான விதத்தையும் நூலின் தரம் பற்றியும், அன்னா கரீனாவின் கதைச் சுருக்கத்தையும் நான் விளக்குவதற்குப் பதிலாக இந்த நூலில் உள்ள முன்னுரை, பதிப்புரை மற்றும் முகவுரையே விளக்குவதால் அவற்றை இங்கே தருகிறேன்.

2

Mr V Santanam and Mrs Rajalakshmi Santanam in Madurai

முதலில் முன்னுரை இதோ:

முன்னுரை

     ஞானி டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனா வெறும் நாவல் மட்டும் அல்ல; பெரிய காவியம்; தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம். இதில் வரும் கதா பாத்திரங்களை முற்றிலும் கற்பனை ஜீவன்கள் எனக் கூற முடியாது; அவர் ஏட்டிலே தீட்டியுள்ள அன்னாவையும், ஆப்ளான்ஸ்கியையும் கரீனையும் விரான்ஸ்கியையும், கிட்டியையும், டாலியையும், லெவினையும் ரஷ்யாவில் மட்டுமின்றி இந்தத் தேசத்திலே, இந்த உலகத்திலே எங்கும் காணலாம். அத்தனை பேரும் இன்றும் என்றும் காணப்படக் கூடிய உயிர்ச் சித்திரங்கள். மனித சமுதாயத்துக்கு ‘அன்னா கரீனா ஒரு வரப்பிரசாதம்.

   மனோரஞ்சித மலருக்கு ஒரு விசேஷ குணம் உண்டென்று சொல்வார்கள். அந்த மலரை முகரும் போது எந்தப் புஷ்பத்தின் வாசனையை நினைத்துக் கொண்டு முகருகிறோமோ அந்த வாசனையைத் தருமாம் மனோரஞ்சிதம். அது போலத்தான் ‘அன்னா கரீனா என்ற இந்த சிருஷ்டியும்.

   இந்த நாவலைத் தமிழில் வெளியிட வேண்டுமென்று தமிழ் சுடர் நிலையத்தின் அதிபர் ஸ்ரீ அ.கி.கோபாலன் அவர்கள் துடியாய்த் துடித்தார். அவருடைய மகத்தான உற்சாகமும் பேரறிஞர் டால்ஸ்டாயின் காவியப் போக்குந்தான் நானே திடுக்கிடும்படியான அளவு வேகத்தில் மிகக் குறுகிய காலத்தில் இதை மொழிபெயர்த்து முடிக்க என்னை ஊக்கி ஓட்டியவை. அந்த வேகத்தின் காரணமாகக் குற்றங் குறைகள் என்னை அறியாது ஏற்பட்டிருக்கலாம். “இப்படி அவசரமாக எழுதுவானேன்? ‘குற்றங் குறைகளை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று சம்பிரதாயமான பல்லவியைப் பாடுவானேன்?” என்று அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. நண்பர் கோபாலன் அவர்களின் ஆசையும், அன்பும், ஊக்கமும், தமிழன்னைக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் என்னை அபாயமறியாத வேகத்தில் இந்தப் பணியைச் செய்யத் தூண்டி விட்டன. ஆகவே ‘அன்னா கரீனா’ தமிழ் மேடையில் ஏறிய பெருமை முற்றிலும் நண்பர் அ.கி. கோபாலன் அவர்களையே சாரும்.

   நான் மட்டும் தனியாக இருந்தேனாகில் இந்த முத்துக் கடலில் இறங்கும் துணிவு எனக்கு ஏற்பட்டிருக்காது. இந்தத் துணிவை ஏற்படுத்தி எனக்கு கைலாகு கொடுத்து உற்சாகமூட்டி உதவி செய்த அன்பர்கள் பலர். அவர்களில் விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய நண்பர், பல சிறு கதைகளும் நாவல்களும் எழுதியிருப்பவரும், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான “கலைமகள்” ‘ஆர்வி’ ஆகும். அவர் செய்த உதவி மகத்தானது. ‘உயிரைக் கொடுத்து உதவுகிறேன்’ என்று சில நண்பர்கள் உபசாரமாகக் கூறுவர். ஆனால் இந்தக் கோபுரத்தை எழுப்பி முடிக்க, இரவு பகலெனப் பாராமல் உயிரைக் கொடுத்து உதவி செய்த ’ஆர்வி’க்கு என்றும் நான் கடமைப்பட்டவன்.

   இந்தப் புத்தகத்துக்கு மனமுவந்து அருமையான முகவுரை எழுதியிருக்கும்

ஸ்ரீ ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்களுக்கு என் நன்றி உரியதாகும். தாம்ப்ஸன் அச்சகத்தைச் சேர்ந்த ஸ்ரீ துரைசாமியின் ஒத்துழைப்பையும் என்னால் மறக்கவியலாது. மற்றும் சில ஆப்த நண்பர்கள் புத்தகம் வெளிவரப் பேருதவி செய்திருக்கின்றனர். அவர்களுடைய பெயர்களைப் பிரஸ்தாபிப்பதற்கில்லை. அவர்களுக்கும் என் நமஸ்காரம்.

   இங்கே ஒரு விஷயத்தை வாசகர்களுக்கு அறிவிக்க வேண்டியது என் கடமை. மூல நூலில் உள்ள ‘அன்னா கரினினா’ என்ற பெயரை ‘அன்னா கரீனா’ என்று மட்டுமே படிக்கும் சௌகரியத்தை உத்தேசித்து நான் மாற்றியுள்ளேன். ‘கரினினாவுக்கு, கரினினாவுடைய, கரினினின்’ என்று இம்மாதிரி வரும் இடங்கள் எல்லாம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் சிரமமாக இருக்கிறது என்று உணர்ந்து இந்த மாறுதலைச் செய்தேன். இதை அன்பர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

   “பேணுமொரு காதலை வேண்டியன்றோ பெண்மக்கள்…” என்று மகா கவி பாரதி எழுதிய உண்மை துலங்கும் இந்த வாழ்க்கைச் சித்திரத்தைத் தமிழன்னையின் பிரதிநிதிகளான தமிழர் சந்நிதானத்தில் பக்தியுடனும், ஆர்வத்துடனும் சமர்ப்பிக்கிறேன். ஆசையில் செய்த பணி; அன்பர்கள் ஆசீர்வாதம் வேண்டி நிற்கும்

திருவல்லிக்கேணி

21-3-’47                                        வெ.சந்தானம்

**

அடுத்த பகுதிகளில் பதிப்புரை மற்றும் முகவுரையைப் பார்ப்போம்.

Tags – ‘அன்னா கரினினா’, வெ.சந்தானம், லியோ டால்ஸ்டாய்

Previous Post on Anna Karenina

Please Help to Find our Father’s Tamil Translation of Anna …

tamilandvedas.com › 2011/11/07 › p…

Translate this page

7 Nov 2011 – Anna Karenina was written by the famous Russian author Leo Tolstoy. My father Venkatraman Santanam translated it in to Tamil in the 1940s …

November | 2011 | Tamil and Vedas | Page 4

tamilandvedas.com › 2011/11 › page

11 Nov 2011 – 5 posts published by Tamil and Vedas during November 2011. … Please Help to Find our Father’s Tamil Translation of Anna Karenina.

to be continued………………………..

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்! (Post No.5322)

Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam

Written by S Nagarajan

 

Date: 15 August 2018

 

Time uploaded in London – 6-15 AM  (British Summer Time)

 

Post No. 5322

 

Pictures shown here are taken from various sources saved by my brothers S Srinivasan, S Suryanarayanan, S.Meenakshisundaram and articles written by S Nagarajan (posted by S Swaminathan)

 

 

நல்லவருக்கு அஞ்சலி

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!

 

ச.நாகராஜன்

நடுநிலை நாளிதழ் என்று போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் சார்ந்து எழுதுவது ஊடகங்களின் இன்றைய போக்காக மாறி விட்டது.

 

ஆனால் நடுநிலை நாளிதழான தினமணியின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய எனது தந்தையார் திரு வெ.சந்தானம் நடுநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

அலுவலகப் பணியில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அவர் கடைப்பிடித்த எள்ளளவும் பிசகாத, தராசு நுனி போன்ற நடுநிலை வியக்க வைக்கும் ஒன்றாகும்.

வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உரிய முறையில் உரிய விஷயத்தில் நடுநிலையுடன் நடக்கும் பாங்கு அவருக்கு இயல்பாகவே இருந்தது.

 

நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மனதில் நிழலாடினாலும் சில சம்பவங்களை இங்கு  குறிப்பிடுகிறேன்.

அரசியல் கட்சியில் எல்லா அணிகளையும் சம நோக்குடன் பார்ப்பார் அவர்.

 

 

With Swamiji Krishna of Aykkudi, near Tenkasi

காமராஜர் முதல் அமைச்சர்.

சுதந்திர தியாகிகளை அங்கீகரிக்க அவர்களுடன் சிறையில் கூட இருந்த ஒருவர் யாரேனும் அப்படி கூட இருந்ததைக் குறிப்பிட வேண்டுமென்ற விதி வந்தது.

 

இப்படி ஒருவரிடம் கடிதம் வாங்க வேண்டுமென்ற ஆசையோ அல்லது நினைவோ கூட இல்லாமல் இருந்தார் என் தந்தை.

ஆனால் பல தியாகிகளும் இதை ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

 

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு தமுக்கம் மைதானதில் நடந்தது.  இரவு நேரம்.

 

தினமணி நிருபராக வெகு காலம் பணியாற்றியவரும் என் தந்தையின் பால் மிக்க மரியாதையும அன்பும் கொண்டவரான திரு திருமலை மைதானத்தில் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த காமராஜரிடம் இந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்டார்.

 

இப்படி யார் வேண்டுமென்கிறார்கள் என்று கேட்டார் திரு காமராஜர். இது அரசால் கொண்டுவ்ரப்பட்ட ஆணை என்றவுடன் சிரித்தவாறே அந்த மைதானத்திலேயே அந்தக் கணமே ஒரு டைப்ரட்டரைக் கொண்டுவரச் சொல்லி அதில் ஒரே ஒரு வரி ஆங்கிலத்தில் அடிக்கச் சொன்னார்.

திரு வெ.சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார் என்பதே அந்த ஒரு வரி.

என் தந்தை அந்தக் கணமே அரசின் கணக்கின் படி ‘சுதந்திரப் போர் தியாகி’ ஆனார்.

ராஜாஜிக்கு என் தந்தை பால் பரிவும அன்பும் உண்டு. கல்யாண ரிஸப்ஷனில் என் தந்தையும் தாயும் நாற்காலியில் அமர்ந்திருக்க அந்தப் பெரிய்வர் பின்னால் நிற்கும் காட்சியைக் காண்பிக்கும் அதிசய போட்டோ எங்கள் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஒரு பொக்கிஷம்.

 

முத்துராமலிங்கத் தேவரின் தேச பக்தியும் தெய்வ பக்தியும் நாடறிந்த விஷயம். அவரது கூட்டங்களுக்கு மதுரையில் என் தந்தையார் தலைமை வகிப்பதுண்டு. அவர் என் தந்தையிடன் கொண்டிருந்த பேரன்பும் மரியாதையும்  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

 

அரசியலில் மட்டுமல்ல காஞ்சி பெரியவாள், சிருங்கேரி ஆசார்யாள் உரைகளை அவ்வப்பொழுது தினமணி ஏடு தாங்கி வரும்.

 

சிருங்கேரி ஆசார்யாளின் பக்தர்கள் எழுத்தை எண்ணிக் கொண்டு வருவார்கள். ஏன் காஞ்சி பெரியவருக்கு மட்டும் இரண்டு காலம் இருக்கிறது, ஏன் இத்தனை எழுத்துக்கள் சிருங்கேரி பெரியவரின் உரைக்கு குறைந்திருக்கிறது என்றெல்லாம் தீவிர பக்தியில் கேட்பார்கள்.

 

 

 

 

 

 

அவர்களுக்கு முக்கியத்திற்கு முதலிடம், விஷயத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் மனத்தை மகிழ்விப்பார். நடுநிலையுடன் எதையும் அணுகும் மனப்பாங்கை நாளடைவில் அனைவரும் புரிந்து கொண்டு வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்தனர். இரு ஆசார்யர்களின் அனுக்ரஹமும் எங்கள் குடும்பத்திற்கு ஏராளம் உண்டு.

சிருங்கேரி ஆசார்யர் வீட்டிற்கே வந்து அனுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சி மிக சுவாரசியமான ஒன்று.

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா என் தந்தையார் மீது மிகுந்த அன்பு கொண்டு அனுக்ரஹம் புரிந்தார். ஆபஸ்ட்பரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற பிரத்யேகமாக அழைப்பு விடுத்தார்.

அரசியல், ஆன்மீகம் மட்டுமல்ல, அன்றாடப் பொழுது போக்குகளுக்கும் கூட அவர் உரிய இடத்தைத் தருவார்.

இசை நிகழ்ச்சிகள் தவறாமல் தினமணியில் இடம் பெறும். இசைக் கலைஞர்கள் வெகுவாக மதிக்கப்படுவர் தினமணியில்.

 

கிங்காங் மல்யுதத நிகழ்ச்சிக்கென மதுரை வந்தவர் என் தந்தையைப் பார்க்க நேரில் வந்தார். அவருக்கு ஒரு பிரம்பு நாற்காலி போட அதில் உட்கார ஆரம்பித்தவுடன் அந்த நாற்காலி முறிந்து போக உடனே ஸ்ட்ராங்கான கட்டிலில் சிரித்தவாறே அமர்ந்து உரையாட ஆரம்பித்தார்.

 

தினமணியில் சென்னை ஆபீஸில் ஸ்ட்ரைக். சென்னைப் பதிப்பு சித்தூரிலிருந்து சில காலம் வந்தது.

எழுத்தாளர்களின் கதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மதுரைக்கு வந்தது.

அந்தக் கால கட்டத்தில் ஏராளமான புது எழுத்தாளர்கள் அறிமுகமாயினர்.

Kanchi Paramacharya in Madurai Dinamani office.

 

யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பார் என் தந்தை.

ஜியாவுடீன் என்ற இஸ்லாமிய இளைஞர் ஃபாரஸ்ட் ரேஞ்சராகப் பணியாற்றி வந்தார். அழகுற கதைகள் எழுதுவார். அவர் எழுத்து பிரசுரிக்கப்ப்ட்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பொங்கிய மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து தந்தையிடன் தன் வியப்பையும் அன்பையும் ம்கிழ்ச்சியையும் தெரிவித்தார்.இதே போல அலுவலகம் ஒன்றில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய சங்கர ராம் என்பவர் புனைபெயரில் நல்ல எழுத்தாளரானார். சேதுபதி பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய திரு ராமகிருஷ்ணன் அற்புதக் கவிஞர் ஆனார்.

 

நா.பார்த்தசாரதி அவருடன் கூடவே வரும் பட்டாபிராமன் ஆகியோரின் படைப்புகள் வெளி வரலாயின.

சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் எங்கள் இல்லத்தில் அமர்ந்து தினமணி பட்டிமன்றம் தலைப்பு குறித்து விவாதிப்பர். தினமணி பட்டிமன்றம் என்பது பட்டிமன்றத்திற்கான ‘ஸ்டாண்டர்ட்’ ஆனது!

Kanchi Shankaracharya Sri Jayendra Swamikal with Dinamani Team

இப்படி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைவருமே இறுதி வரை தந்தையின் பால் நேசத்தையும் பாசத்தையும் கொட்டினர்.

 

ஒரு பெரியவருடன் கூடப் பழகும் போது நாளுக்கு நாள் அது மெருகேறி வளர்பிறை போல வளர்ந்து கொண்டே போகும் என்பதை பற்பல ஆண்டுகள் பழகிய அனைவரும் அனுபவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.

 

அவரின் நினவைப் போற்றும் நாள் ஆகஸ்ட் 15.

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், 1998ஆம் ஆண்டு., ஆகஸ்ட் 15ஆம் தேதி.

மதுரை எல்லிஸ் நகரில் கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்ட பின் தன் இன்னுயிரை விண்ணுலகம் நோக்கி ஏக விட்டார்.

 

அவரை நினைத்து அஞ்சலி செய்வதில் ஒரு தனி அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?!

 

ARTICLES ON SANTANAM POSTED EARLIER:-

  1. திருவெ.சந்தானம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/திரு-வெ…

Posts about திரு வெ.சந்தானம் written by Tamil and Vedas

  1. வெ.சந்தானம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/வெ…

Posts about வெ.சந்தானம் written by Tamil and Vedas

–subham—

***

என் அப்பாவிடம் கற்றது!

Santanam Rajalakshmi 2

Srimati Rajalakshmi Santanam and Sri Venkataraman Santanam

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1274; தேதி: 8 செப்டம்பர் 2014

மதுரையில் பிரம்ம ஞான சபை என்ற கட்டிடம் சந்தைப் பேட்டைத் தெருவில் உள்ளது. அங்கே அரிய புத்தகங்களைக் கொண்ட லைப்ரரி (Theosophical Society Library) உண்டு. அதைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தார் கல்யாணம் என்பவர். எவ்வளவு கண்ணும் கருத்தும் என்றால் —- யாரையும் புத்தகத்தைத் தொடவே அனுமதிக்க மாட்டார்!!! ஆனல் என் அப்பா வேங்கடராமன் சந்தானம் மட்டும் விதிவிலக்கு!!

நாங்கள் போய் மாமா, இந்தப் புத்தகம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது ஆனால் வெளியே கொண்டு போகக் கூடாது என்பார். அத்தோடு நில்லாமல் பார், உங்கள் அப்பா படிக்காத புத்தகம் இந்த லைப்ரரியில் எதுவுமே இல்லை என்று என் அப்பா அந்தப் புத்தகங்களில் போட்ட Pink colour proof reading pencil பிங்க் கலர் பென்சில் மார்க்குகளைக் காண்பிப்பார். இது பத்திரிகையாளர்கள் ‘’ப்ரூப்’’ திருத்த பயன்படுத்தும் பென்சில்! மற்றவர்களைப் புத்தகத்தையே தொடவிட மாட்டாதவர் என் தந்தை கலர் பென்சில் கோடு போட்டாலும் பொறுத்துக் கொண்டது எனக்கும் என் சகோதரர்களுக்கும் வியப்பை உண்டாக்கும் . எங்கள் தந்தையிடம் சொல்லிச் சொல்லி சிரிப்போம். அவரோ தன்னைப் பற்றி எந்தக் காலத்திலும் ஒன்றுமே சொன்னதில்லை. வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டு ஒரு புன் சிரிப்பு சிரிப்பார்.

பிரம்ம ஞான சபையில் அவருக்கு அவ்வளவு உரிமை கொடுத்த காரணம் எங்களுக்குப் புரியும். என் தந்தை சம்பந்தப்படாத ஆன்மீக விஷயம் மதுரையில் எதுவுமே இல்லை! தமிழ் நாட்டின் ஆன்மீகத் தலைநகரம் மதுரை என்பதால் எல்லா மதத் தலைவர்களும் மதுரைக்கு வந்துதான் ஆக வேண்டும். அவர்களுக்கு அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்தி வெளியிட்டு ஆதரவு கொடுத்தவர் என் தந்தை ஒருவரே என்றால் அது மிகை இல்லை.

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘’இந்து’’ நாளேடு மட்டும் கடைசி பக்கத்தில் 4 அங்குலத்துக்கு ஆன்மீகச் செய்தி வெளியிட்ட காலம் அது. மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஆன்மிகச் செய்திகளைக் கிண்டல் செய்த காலம் அது. மதுரை தினமணி கொள்ளிடம் ஆற்றின் கரை வரை எட்டு ஜில்லாக்களை “கவர்” செய்ததால் தமிழ் நாட்டின் முக்கால் வாசி பகுதிக்கு எட்டிவிடும். அந்தக் காலத்தில் சென்னை தினமணி ஆர்க்காடு செங்கல்பட்டு, சென்னை, புதுவை மட்டும்மே சென்றது.

என் தந்தை புத்தகப் பிரியர். இசைப் பிரியர். மதுரை எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியையும் சத்குரு சங்கீத சமாஜம் (பிற்காலத்தில் இசைக் கல்லூரியாக மாறியது), ராகப்ரியா போன்ற பல அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

வீட்டில் மூன்று நான்கு காத்ரேஜ் (ஸ்டீல்) பீரோக்களை வாங்கிவைத்து அதில் 6000 புத்தகங்களைச் சேர்த்துவைத்தார். அதுதான் அவர்கள், எங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. பணமோ, வீடோ, வாசலோ, நிலபுலன்களோ வாங்கவில்லை.

வீட்டிற்கு வருபவர்கள் முதல் அறையிலேயே காட்ரேஜ் பீரோக்கள் இருப்பதைக் கண்டு வியப்பர். அதை என் தந்தை திறக்கும் போது கொல் என்று சிரித்துவிடுவர்.

“என்ன சார் இது! புத்தகங்களை வைக்கவா இப்படி மூன்று நான்கு காத்ரேஜ் பீரோக்கள்?” என்பார்கள். வழக்கம்போல் அவர் பேசமாட்டார், வெறும் புன்சிரிப்புதான் பதில்.

தினமணிப் பத்திரிக்கையில் புத்தக மதிப்புரை (Book Review) எழுதுவதற்காக பலர் எழுதிய புத்தகங்களைக் கொண்டுவருவர். எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு விதி உண்டு—அதாவது இரண்டு புத்தகங்களை ( Two Copies ) மதிப்புரைக்கு அனுப்ப வேண்டும். ஒன்று அந்த புத்தக மதிப்புரை எழுதுபவர் வைத்துக் கொள்வார். மற்றொன்று அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இதை அறிந்தவர்கள் முதலில் இரண்டு பிரதிகளைக் கொடுத்துவிட்டு “சார், இது உங்களுக்கு என்று வேறு ஒரு பிரதி கொடுப்பர். உடனே என் தந்தை அதற்குப் பணம் கொடுப்பார். அவர்கள் பதறிப்போய் “சார், உங்களிடம் விற்க வரவில்லை” என்பார். என் தந்தையோ நான் எழுத்தாளர் சங்கத் தலைவன். ஆகையால் ஒரு எழுத்தாளரை ஆதரிக்கும் ஒரு வழி அவருடைய புத்தகத்தை விலைக்கு வாங்குவதுதான் என்று சொன்னவுடன் அவர் மசிழ்ச்சியுடன் ஏற்பார்.

ஆனால் சுவாமி சித்பவானந்தர், அனந்த ராம தீட்சிதர், கிருபானந்த வாரியார் போன்ற பெரியோர்கள் கொடுக்கும்போது அவர்களிடம் பணம் கொடுப்பது அவமரியாதை என்பதால் அவர்கள் ஏற்று நடத்தும் அறப் பணிகளுக்கு நன்கொடை என்று புத்தக விலை போன்று பன்மடங்கு பணத்தைக் கொடுத்து விடுவார். நானும் எங்கும் இதுவரை விலை கொடுக்காமல் புத்தகம் வாங்குவதில்லை. சின்மயா மிஷன் சொற்பொழிவுகளுக்குப் போனால்கூட அங்கே வெளியே போகும்போது இலவச பிரதிகள் விநியோகிப்பர். அதற்கெல்லாம் சேர்த்து டொனேஷன் கொடுத்து விடுவேன்.

baba

சத்ய சாய் பாபாவின் அழைப்பு
ஒரு முறை புட்டபர்த்தியில் இருந்து ஒரு “போன் கால்” அழைப்பு வந்தது. பாபா, முன்னாள் ஆந்திர கவர்னர் தலைமையில் சென்னையில் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதில் நீங்கள் சிறப்புப் பேச்சாளராக வரவேண்டும் என்பது பாபாவின் விருப்பம் என்றனர். என் தந்தைக்கு ஒரே குழப்பம். அதற்கு முன் நாங்கள் எல்லோரும் 1963 ஆம் ஆண்டில் ஒரே முறைதான் சத்ய சாய்பாபாவத் தரிசித்து இருக்கிறோம். அதற்குப் பின் அவர் மதுரை வந்த போதெல்லாம் தனியாக அவரைச் சந்தித்தது இல்லை. லட்சத்தோடு ஒன்று, லட்சத்திஒன்று என்ற கணக்கில் நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக பஜனைக்குப் போவோம்.

என் தந்தையை முன்னாள் கவர்னர் கே. சந்தானத்துடன் பலரும் குழப்பிக்கொள்வர். என் தந்தைக்கு இது தெரியும். உடனே புட்டபர்த்திக்குப் போன் செய்து நீங்கள் தவறாக போன் செய்து விட்டீர்கள் போல இருக்கிறது. நான் முன்னாள் கவர்னர் கே சந்தானம் அல்ல என்றார். உடனே புட்டபர்த்தி அலுவலகம் எங்களுக்கு அது தெரியும். பாபா உங்களைத்தான் – மதுரை தினமணிப் பத்திரிக்கை ஆசிரியர் சந்தானத்தைக் கூப்பிடு – என்று குறிப்பாகச் சொன்னதால்தான அழைத்தோம் என்றனர்.

எனது தந்தை வெ. சந்தானம், ஆந்திர முன்னாள் கவர்னருடனும் பாபாவுடனும் பேசிய கூட்ட புகைப்படம் இன்றும் இந்தியாவில் எங்கள் வீட்டுச் சுவரை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் இருந்தனர் என்பதை சொல்லத் தேவை இல்லை.

புட்டபர்த்திக்குப் போனபோது என் கவலை எல்லாம் அடுத்த ஆண்டுவரும் எஸ் எஸ் எல் சி –யை நல்ல முறையில் பாஸ் செய்ய வேண்டும் என்பதுதான். பாபா என் கன்னத்தில் ஒரு அன்பான அடி கொடுத்து பாஸ் என்றார். அப்போது பாபா வரவழைத்துக் கொடுத்த புகைப்படத்தை என் தந்தை இறக்கும் வரை மணிபர்ஸில் வைத்திருந்தார்.

எழுபது வயதுக்குப் பின் என் தந்தை இறந்தார். அதுவரை எழுதிக் கொண்டே இருந்தார். தேவாரம், திருப்புகழ், திவ்வியப் பிரபந்தம், திருமந்திரம் முதலியவற்றை நோட்டு நோட்டாக எழுதுவார். எனக்கு வியப்பாக இருக்கும் புத்தகத்தில் இருப்பதை ஏன் இப்படித் திருப்பி அழகாக எழுதுகிறார்? அதற்கு பிரவுன் கலர் அட்டை போட்டு கலர் கலர் மைகளில் தலைப்பு எழுதுகிறார் என்று வியப்பேன். இப்போது காரணம் புரிகிறது. 65 வயதைத் தாண்டிவிட்ட எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் முதல் எதைப் படிக்கவும் புத்தகம் தேவைப்படுகிறது படித்த விஷயங்கள்—குறிப்பாக கவிதைகள், தோத்திரங்கள் நினைவில் நிற்பதில்லை. நானும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி உருப்போடும் காலம் நெருங்கிவருகிறது. கடை வரை அவர் எழுதிவந்த மற்றொன்று ஸ்ரீ ராமஜெயம்.

அடுத்த முறை இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள், காமராஜ் எழுதிக் கொடுத்த ஒரு சீட்டு, “டேய் சந்தானம் என்னை தினமணி ஆசிரியர் இல்லை என்கிறாண்டா! – என்று என் அப்பாவிடம் ஏ. என். சிவராமன் அடித்த ‘ஜோக்’, என் வீட்டிற்கு புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானத சுவாமிகள் வருகை, ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசம், மவுனகுரு சாமி வருகை, எங்கள் வீட்டில் கோபால கிருஷ்ண பாகவதரின் அஷ்டபதி பஜனை, ஏ.என். சிவராமனின் நால் வேத டேப்ரிகார்டிங், வார பஜனை பஜனை, சேதுராம் பஜனை மண்டலி பஜனை, திருப்புகழ் பஜனை, மீனாட்சி கோவில் பள்ளி அறை தீபாரதனை, ஆடி வீதி தெய்வ நெறிக் கழக பஜனை, காலையில் ஞானப் பால், கோயங்கா குடும்ப கோவில் விஜயம், மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்,உலகத் தமிழ் மாநாட்டு கலாட்டா, இந்தி மொழி எதிர்ப்புக் கிளர்ச்சி, கீமாயண கலாட்டா, ஆர். எஸ் எஸ் அடிதடி, அனந்தராம தீட்சிதர் உபந்யாசம், ஸ்ரீகாஞ்சி சுவாமிகள் மதுரை நாராயணபுரம் சதஸ், ஸ்ரீ சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தது, பிசிராந்தையார் போல சுவாமி சிவானந்தாவை தரிசிக்காமலேயே நட்பு ஆகியன பற்றியும் சுருக்க மாக வரைகிறேன்.

contact swami_48@yahoo.com