
Research Article written by london swaminathan
Post No. 2520
Date: 8th February 2016
Time uploaded in London 9-18 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது – “ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தமிழர்களா?” – என்ற தலைப்பில். அதைப் படித்துவிட்டு, இந்தக் கட்டுரையைப் படிப்பது நலம் பயக்கும்.
“பிறந்தனவெல்லாம் இறப்பது உறுதி
இறந்தனவெல்லாம் பிறப்பது உறுதி” – என்பது இந்து மதத்தின் தலையாய கருத்து. “புனரபி ஜனனம், புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்” – என்று இதையே ஆதி சங்கரர் அழகாகப் பாடி வைத்தார். அதற்கெல்லாம் முன்னதாக காலத்தால் அழியாத பகவத் கீதையில் கண்ண பிரானும், “ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச (பகவத் கீதை 2-27) – என்று சொல்லிவைத்தார். மறு பிறப்பில் நம்பிக்கை இலாதோருக்குக் கூட பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி – என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இதை எழுத்தில் வடிக்கும்போதுதான், ஒரு இனம் இதுபற்றி எவ்வளவு கவலைப் படுகிறது என்பது தெரியவரும். நான் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய மியூசியத்தில், பழங்குடி இனத்தின் பிரிவுக்குச் சென்றபோது, அவர்களுடைய நம்பிக்கைகளைப் படங்களுடன் போர்டு, போர்டாக எழுதி வைத்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் ஒரு போர்டின் வாசகம் பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி. இதற்கும் மேலே அவர்கள் எழுதிய விஷயமும் இந்து மதக் கருத்தே! இறந்த பின்னர் ஆவிகள் மேலுலகம் செல்லும், அதற்குச் சரியான பாதை காட்ட வேண்டும் என்பதாகும்.
ஒருவர் வீட்டில் மரணம் அடைந்த பின்னர், பிராமண புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும் இதையே சொல்கிறது. இறந்தவரின் ஆவி நல்ல நிலையை அடைய பல கடவுளர்களை வேண்டும் மந்திரங்கள் அவை. இதற்கும் மேலாக இறப்போர் பற்றி மேலும் ஒரு ஒற்றுமையையும் கண்டேன்.
பழங்குடி மக்கள், பல முகமூடிகளை அணிந்து நடனம் ஆடிவிட்டு, இறந்தோர் நினைவாக கம்பங்களை நட்டு வைக்கின்றனர். ஆதி காலத்தில் தமிழர்களும் நடு கல் நட்டு இறந்தோரை வழிபட்டனர். இந்தச் செய்தி நிறைய சங்கத் தமிழ் பாடல்களில் உள. கர்நாடகத்தில் மாஸ்தி கல் என்றும் ராஜஸ்தானில் கை சின்னங்களுடன் நினைவுச் சின்னங்களும் வைத்தனர். சாது சந்யாசிகள் இறந்தால் அவர்கள் சமாதிக்கு மேல் சிவலிங்கம் அல்லது, துளசி மாடம் எழுப்பினர். பிராமணர்கள், இறந்தோர் நினைவாக ஒரு கல்லை தோட்டத்தில் புதைத்து வைப்பர். இப்போது இது எல்லாம் அருகிவிட்டது. ஆக ஆதி காலத்தில் எல்லோரும் பின்பற்றிய வழக்கங்கள் பின்னர் கூனிக் குறுகி அறவே மறைந்துவிட்டன என்று கொள்ளல் பொருந்தும்.

இறந்தவர்களைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்துமத்தில் உள்ளது போல வேறு எந்த மத்திலுமில்லை. தென்புலத்தாரை தினமும் வழிபடும் ஐவேள்வி (பஞ்ச யக்ஞம்) பற்றி வள்ளுவனும், மனுவும் பாடி வைத்தனர். இது இந்துக்கள் தினமும் செய்வது நின்று இப்பொழுது மாவாசை தர்ப்பணம் என்று மாதமொரு சடங்காக மலிந்துவிட்டது.

சம்ஸ்கிருதச் சொற்கள்
ஆதி மக்களிடையே பல சம்ஸ்கிருத சொற்களும், தமிழ்ச் சொற்களும் புழங்குவது அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களே என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள்வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லும் வாசகமும் மியூசியத்திலுள்ளது. நேற்று அணங்கு என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கண்டோம். மற்ரஒரு மக்கள் பெயர் துர்கா இன மக்கள். இறந்தோர் நினைவாக எழுப்பும் கம்பங்களை துங்கம் என்பர். இது வடமொழிச் சொல். உயரமான, உஅய்ர்த்தப் பட்ட என்பது இதன் பொருள்.
இப்படி நிறைய சம்ஸ்கிருதச் சொற்களை – ஆனால் மாறுபட்ட பொருளுடன் வழங்குவதைக் காணலாம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி….
பாரத தேசம் பற்றிப் பாரதியார் பாடினார்:-
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே (அவரும் கூட இந்தப் பாட்டில் ‘துங்கம்’ என்ற சொல்லைப் பயிலுகிறார்!)
இப்படிப்பட்ட தேசபக்தப் பாடல்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. பூ சூக்தம் என்ற பாடலில் பூமியை மிக விரிவாகப் போற்றிப் புகழ்கின்றனர் வேத கால ரிஷிகள். ஆஸி. பழங்குடி மக்களும் பூமி பற்றி இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இயற்கைச் சக்திகளை அவர்களும் போற்றுகின்றனர். நாடு, மண், காற்று, மரம் ஆகியவற்றை உடலின் உறுப்பாக உணருகின்றனர்.
தைத்ரீய ஆரண்யகத்தில் உள்ள வேத மந்திரம் சொல்கிறது (மது வாதா ருதாயதே….)
“காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையாகப் பெருக்கெடுத்து ஓடட்டும். செடி, கொடிகள் இனிமை அளிப்பவையாக இர்க்கட்டும். வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும் – தைத்ரீய ஆரண்யகம்

எனைத்தானும் நல்லவை கேட்க…
மூத்தோர் சொல் அமிர்தம்- என்பது தமிழ்ப் பொன்மொழி. ஏதேனும் கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்கள் (திருக்குறள் 416) என்கிறார் வள்ளுவர். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். இவையெல்லாம் வேதத்திலுளது. எல்லா இடங்களிருந்தும் எங்ளுக்கு நல்ல கருத்துக்கள் வரட்டுமென்று உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் (1-89-1) கூறுகின்றது.
ஆஸி. பழங்குடி மக்க: இதை ‘இங்காரா’ என்பர். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு ‘இங்காரா’வைச் சொல்லித்தந்துவிட்டனர். நாங்கள் முதியோர் சொல்லைக் கேட்போம். நாலு பேர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்போம். எங்களுடைய செயல்கள் உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிவோம். அறிவு, ஞானம், விவேகம் அடையவும் உயிர் பிழைக்கவும் ஒரே பாதை ‘இங்காரா’தான். எங்கள் முன்னோர்கள் அறிவியல், தொழில்நுட்ப அறிவின் உறைவிடம்”
இது போன்ற சிந்தனை ஒரு குழுவின் மத்தியில் தோன்றவேண்டுமானால் அவர்கள் பக்குவம் அடைந்த, முன்னேறிய ஒரு இனம் என்றே நாம் கருதுவோம். இவை அனைத்தும் வேதத்திலும் உள்ளது.

வான சாத்திர நிபுணர்கள்
ஆஸி. பழங்குடி மக்களின் பூகோள அறிவு அபாரமானது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மூலை, முடுக்கெல்லாம் தெரியும். அவர்கள் உதவியுடந்தான் வெள்ளைக்கார குடியேற்றக்காரர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் வானில் இயங்கும் கிரகங்கள், நட்சத்திரங்களை நன்கு அறிவர். அவைகளின் இயக்கத்தைக் கணகிட்டே அவர்கள் காலத்தை அளந்தனர். பெரிய வட்டக் கற்கள் அமைத்து காலம் முதலியவற்றை அளந்தனர். வேதங்களிலும் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டே ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும் ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்கள். பழங்குடியினர் நட்சத்திரங்கள் பற்றி கதைகள் சொல்லி, அவைகளுக்குப் பெயரிட்டது போல நாமும் துருவன் , அகஸ்தியன், சப்த ரிஷிக்கள், சந்திரனின் 27 மனைவியர், திரிசங்கு நட்சத்திரக் கூட்டம் என்றெல்லாம் பெயரிட்டோம். இப்படிக் கதை சொன்னால் பாமரர்களும் நினைவு வைத்துக் கொண்டு, அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் எது வடதிசை, எது தென் திசை என்று இரவு நேரத்தில் வழி கண்டுபிடித்துவிடுவார்கள். ஆஸி. பழங்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தெரியாத இடமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கே வெள்ளைக் காரர்கள் வந்தனர். பழங்குடியினரோ 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் வழியாக அங்கே சென்று, சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.
ஆஸி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் விரிவடைய, விரிவடைய அவர்களுடைய அபூர்வ திறமைகளை உலகம் உணரத் துவங்கியுள்ளது.


தொடரும்………………………………..
You must be logged in to post a comment.