
Article Written by S NAGARAJAN
Date: 12 December 2016
Time uploaded in London:- 10-47 am
Post No.3440
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 80.
வசந்த காலத்தில் போதிமண்டலம் என்னும் ஒரு விசேஷ ச்டங்கு இறந்தவர்கள் நற்கதி அடைவதற்காகவும் அடுத்த பிற்வியில் நல்ல பிறவி பெறுவதற்காகவும் செய்யப்பட்டது.
கொள்ளைக்காரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதோடு மிருகங்களை பலியிடுவதும் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது.
கவர்னர் டாங் வூவுடனும் அவ்ர் சகாவுடனும் பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகளை அனுப்பினார். அவர்கள் இருவரும் ராணுவ கமாண்டர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஒரு குறிப்பிடத்தகுந்த அதிசய விஷயம் என்னவென்றால் இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட போது பல இடங்களிலும் ஆரமபத்தில் பல மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அந்த மெழுகுவர்த்திகளின் ஜ்வாலைகள் எல்லாம் வெவ்வேறு விதமான மலர்களின் வ்டிவைக் கொண்டிருந்தன!
சில ஜ்வாலைகள் தாமரை வடிவிலும் வேறு சில வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தோன்றின!
ஆலயத்தில் வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் இந்த அதிசய வண்ண வடிவங்களைப் பார்த்து பிரமித்தனர். பரவசமாயினர்.

49ஆம் நாள் சடங்கு முடியும் போது வானத்தில் மேகங்கள் பெரிய பந்தல் வடிவிலும் ரத்தின தோரணங்கள் போன்றும் தோன்றின!
சடங்குகள் முடிந்த பின்னா கவர்னர் டாங் ஸு யுன்னை அவரது இல்லத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு இறந்து போன டாங்கின் உறவினர்களுக்கு சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.
இதனால் அவருக்கு தர்மத்தில் அதிக நம்பிக்கையும் பற்றும் ஏற்பட்டது.
அவருடன் சேர்ந்திருந்த அனைவரும் புத்த தர்மத்திற்கு மாறி விட்டனர்.
குளிர்காலம் வந்தது, ஸு யுன் குன்மிங்கிலேயே தங்கினார்.
ஸு யுன்னுக்கு இப்போது வயது 81
கவர்னர் டாங் ஸு யுன்னிடம் இன்னொரு போதி மண்டலம் நடத்துமாறு வேண்டிக் கொண்டார்.
ஹூவா டிங் மடாலயம் குன்மிங்கின் மேற்குப் பக்கம் உள்ள மலையில் இருந்தது, அருமையான அந்த ஆலயத்தை அங்குள்ள துறவிகள் சரியாகப் பராமரிக்கவில்லை. ஆகவே அது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை அவர்கள் ஐரோப்பியர்களுக்கு விற்கத் தீர்மானித்திருந்தனர்.
ஐரோப்பியர்களோ அங்கு ஒரு க்ளப்-ஹவுஸ் கட்ட முடிவு செய்திருந்தனர். இதற்கு உரிய அனுமதியையும் அரசு அதிகாரிகளிடமிருந்து அவர்கள் பெற்று விட்டனர்.
இதையெல்லாம் அறிந்த ஸு யுன் மிகவும் வருத்தமுற்றார்.
கவ்ர்னர் டாங்கைச் சந்தித்து அந்தப் புனிதத் தலத்தை அப்படியே நன்கு பராமரிக்குமாறு வேண்டிக் கொண்டார்.
ஸு யுன் சொன்னதை உன்னிப்புடன் கேட்ட டாங் உள்ளூர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அந்த அதிகாரிகளுள் ஒருவரான ஜாங் ஸு ஸியான் என்பவர் ஸு யுன்னை ஒரு சைவு உணவு விருந்திற்கு அழைத்தார்.
அங்கு அவரிடம் ஒரு சிவப்புத் தாளில் ஒரு அழைப்பிதழ் தரப்பட்டது.
ஹூவா டிங் மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை புனருத்தாரணம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.
மூன்று முறை இதை அவர்கள் வாய்மொழியாகவும் சொன்ன பின்னர் ஸு யுன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
உபாசகர் ஜாங் இரண்டு வாத்துகளை வாங்கி ம்டாலயத்தில் விட்டார். அவற்றிற்கு முன்னர் ஸு யுன் அகதிகள் சூத்திரத்தை இசைத்தார். அதை அவை மௌனமாகக் கேட்டன.
அன்றிலிருந்து துறவிகளுடன அவையும் பிரதான ஹாலில் சூத்திரங்கள் இசைக்கப்படும் போது அதைக் கேட்க வந்து விடும்.
மூன்று வருடங்கள் இது தவறாமல் நடந்து வந்தது,
துறவிகளுடன அவையும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டு புத்தரின் சிலைகளை பிரதக்ஷிணம் செய்யும்.
ஆலயத்தில் இருந்த ஒவ்வொருவரும் அவற்றை அன்புடன் நடத்தினர்.
ஒரு நாள் பெண் வாத்து பிரதான ஹாலின் வாயிலில் வந்து நின்று பார்த்தது. பின்னர் மூன்று முறை பிரதக்ஷிணம் செய்தது. தனது தலையை உயர்த்தி புத்த சிலையைப் பார்த்து உயிரை விட்டது. அதன் இறக்கைகள் ஒளியுடன் இருந்தன. அது ஒரு பேழையில் வைத்து புதைக்கப்பட்டது.
அதன் இணையான் ஆண் வாத்து தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் சில நாட்கள் கழித்து பிரதான ஹாலுக்கு வந்து நின்று சிலைகளைப் பார்த்தத்து. இறகுகளை விரித்துப் பின்னர் இறந்தது.
அது ஒரு பேழையில் வைக்கப்பட்டு பெண் வாத்துக்கு அருகில் புதைக்கப்பட்டது
(அரசியல் நிலைமையோ வேறு விதமானது.இலையுதிர்காலத்தில் கவர்னர் டாங்கை வீழ்த்த ஒரு சதி நடந்தது. அவர் ஸு யுன்னின் ஆலோசனையைக் கேட்டார்.
மக்கள் மனதில் நீங்கள் இருந்தாலும், பலம் பொருந்திய ராணுவப் படையை உங்களால் எதிர்கொள்ள முடியாது. ஆகவே இப்போது இங்கிருந்து சென்று விடுங்கள். காலம் கனியும் போது திரும்பலாம் என்றார் ஸு யுன். அதைக் கேட்டு அவர் நகரிலிருந்து வெளியேறினார்.
இந்த விவரம் பத்து வருடங்களுக்குப் பின்னர் ஸு யுன் தனது சிஷ்யரிடம் கூறினார்.)
*****