
Post No. 8094
Date uploaded in London – – –3 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 56 – இரு மணிகள் – ஜானி வாக்கர்!
R. Nanjappa
ஜானி வாக்கர்!

இந்திய திரைப்படங்களில் காமெடி நடிகருக்கு சிறப்பிடம் உண்டு. இது நமது காவிய இலக்கிய மரபும் கூட, நாயகனுடன் விதூஷகனும் இருப்பான்! ஆனால் அவனால் பல முக்கிய வேலைகள் நடைபெறும்!
ஹிந்தித் திரையில் காமெடியில் தனி முத்திரை பதித்தவர் ஜானி வாக்கர். (1926-2003) இவர் ஒரு காலத்தில் மிகப் பிரபலமடைந்து அவர் பெயரிலேயே ஒரு படம் வந்தது!
இவர் நாசூக்காக விரசமில்லாமல் நடிப்பார். இவருக்கு ஒரு அதிருஷ்டம்: பல படங்களில் இவருக்கு நல்ல பாடல்கள் அமைந்து ஹிட் ஆயின! முஹம்மது ரஃபியின் குரல் இவருக்கு மிகவும் பொருந்தும் அல்லது ரஃபி அப்படிப் பாடுவார்! இவருக்கு ரஃபி பாடிய இரு பாடல்களைப் பார்க்கலாம்.
ஜங்கல் மே மோர் நாசா
जंगल में मोर नाचा
किसी ने ना देखा हाय
हम जो थोड़ी–सी पी के ज़रा झूमे
हाय रे सबने देखा
जंगल में मोर नाचा…
गोरी की गोल–गोल अँखियाँ शराबी
कर चुकी हैं कैसे–कैसों की खराबी
इनका ये ज़ोर ज़ुल्म किसी ने ना देखा
हम जो थोड़ी सी…
किसी को हरे–हरे नोट का नशा है
किसी को बूट–सूट कोट का नशा है
यारों हमें तो नौ टांक का नशा है
हम जो थोड़ी सी…
ஜங்கல் மே மோர் நாசா கிஸீ நே நா தேகா ஹாய்
ஹம் ஜோ தோடீ ஸீ பீகே ஃஜரா ஜூமே
ஹாய் ரே ஸப்னே தேகா
ஜங்கல் மே மோர் நாசா….
காட்டில் மயில் ஆடியது – யாரும் பார்க்கவில்லை
நான் ஏதோ சிறிது ‘சரக்கை” உள்ளே தள்ளி சிறிது ஆடினேன்
எல்லோரும் பார்த்து விட்டார்கள்!
காட்டில் மயில் ஆடியதை யார் பார்த்தார்கள்?
கோரீ கீ கோல் கோல் ஆங்கியா ஷராபீ
கர் சுகீ ஹை கைஸே கைஸே கோ கராபீ
இன் கா யே ஜோர் ஜுல்ம் கிஸி னே நா தேகா
ஹம் ஜோ தோடீ ஸீ….
அழகியின் உருண்ட கண்கள் போதை தருவன
யார் யார் மனதை எல்லாமோ கெடுத்துவிட்டன
இவளின் இந்த பொல்லாங்கை யாரும் கண்டுகொள்ளவில்லை!
நான் ஏதோ சிறிது குடித்துவிட்டு சிறிது ஆடினேன்–
எல்லோரும் பார்த்துவிட்டார்கள்!
கிஸீ கோ ஹரே ஹரே நோட் கா நஷா ஹை
கிஸீ கோ பூட்– ஸூட்–கோட் கா நஷா ஹை
யாரோ ஹமே தோ நௌடாங்க் கா நஷா ஹை
ஹம் ஜோ தோடீஸி…
சிலருக்கு புதிய புதிய ரூபாய் நோட்டின் மீது போதை!
சிலருக்கு பூட்–சூட்–கோட் என்று போதை
அரே, எனக்கென்னவோ சிறிது ஆட்டம்–பாட்டம் என்றால் போதை
நான் ஏதோ சிறிது குடித்துவிட்டு சிறிது ஆடினால் எல்லோரும் பார்க்கிறார்கள்!
காட்டில் மயில் ஆடியதை யார் பார்த்தார்கள்!
Song: Jungle mein mor nacha Film: Madhumati 1958 Lyrics: Shailendra
Music : Salil Chaudhury Singer. Mohammad Rafi
YouTube link: https://www.youtube.com/watch?v=Ut60A4vwHlE
இந்தப் பாட்டில் ரஃபியின் குரலும் ஜானி வாக்கரின் குரலும் நடிப்பும் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள்!
இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் ரஃபி, ஜானி வாக்கர் இருவருமே பாட்டிலைத் தொடாதவர்கள்!
[“Jungle mein more nacha kis ne dekha” is a Hindi proverb. It means that even good things should be widely known to get appreciation.]

ஸர் ஜோ தேரா சக்ராயே
सर जो तेरा चकराये या दिल डूबा जाये
आजा प्यारे पास हमारे
काहे घबराये, काहे घबराये
तेल मेरा है मुस्की
गंज रहे ना ख़ुस्की
जिसके सर पर हाथ फिरा दूँ
चमके क़िस्मत उसकी
सुन सुन सुन, अरे बेटा सुन
इस चम्पी में बड़े–बड़े गुण
लाख दुखों की एक दवा है
क्यूँ ना आजमाये
काहे घबराये, काहे घबराये
सर जो तेरा चकराए…
प्यार का होवे झगड़ा
या बिज़नस का हो रगड़ा
सब लफड़ों का बोझ हटे
जब पड़े हाथ इक तगड़ा
सुन सुन सुन, अरे बाबू सुन
इस चम्पी में बड़े–बड़े गुण
लाख दुखों की एक दवा है
क्यूँ ना आजमाये
काहे घबराये, काहे घबराये
सर जो तेरा चकराए…
नौकर हो या मालिक
लीडर हो या पब्लिक
अपने आगे सभी झुके हैं
क्या राजा, क्या सैनिक
सुन सुन सुन, अरे राजा सुन
इस चम्पी में बड़े–बड़े गुण
लाख दुखों की एक दवा है
क्यूँ ना आजमाये
काहे घबराये, काहे घबराये
सर जो तेरा चकराए…
தேல் மாலிஷ், சம்பீய்!
ஸர் ஜோ தேரா சக்ராயே யா தில் டூபா ஜாயே
ஆஜா ப்யாரே, பாஸ் ஹமாரே
காஹே கப்ராய், காஹே கப்ராய்
தேல் மேராஹை முஸ்கீ
கஞ்ச் ரஹே நா குஸ்கீ
ஜிஸ்கே ஸிர்பர் ஹாத் ஃபிரதூ(ன்)
சம்கே கிஸ்மத் உஸ்கீ
ஸுன் ஸுன் ஸுன், அரே பேடா ஸுன்
இஸ் சம்பீமே படே படே குன்
லாக் துகோ(ன்) கீ ஏக் தவாஹை
க்யூ(ன்) நா ஆஜ்மாயே
காஹே கப்ராயே, காஹே கப்ராயே
தலைக்கு மாலிஷ் செய்துகொள்ள வேண்டுமா?
தலை சுற்றுகிறதா? மனம் நொந்துபோயிருக்கிறதா?
அப்பனே, என்னிடம் வா! ஏன் பயப்படுகிறாய்!
என் தைலம் மருந்து போன்றது
அரிப்பெல்லாம் போய்விடும், வரட்சியும் போய்விடும்!
யார் தலையில் தான் கைவைத்து மாலிஷ் செய்கிறேனோ,
அவர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிடும்!
அரே பேட்டா, சொல்வதைக் கேள்
இந்த மாலிஷ் நல்ல குணமுள்ளது!
லட்சம் தொந்தரவுகளுக்கு இது ஒரே மருந்து!
நீ ஏன் செய்து பார்த்துக்கொள்ளக்கூடாது?
ஏன் பயப்படுகிறாய்?
ப்யார் காஹோவே ஜக்டா
யா பிஸினஸ் கா ஹோ ரக்டா
ஸப் லஃப்டோ(ன்) கா போஜ் ஹடே
ஜப் படே ஹாத் இக் தக்டா
ஸுன் ஸுன் ஸுன், அரே பாபு ஸுன்
இஸ் சம்பீ மே படே படே குன்
லாக் துகோ(ன்) கீ ஏக் தவாஹை
க்யூ(ன்) ஆஜ்மாயே
காஹே கப்ராய்….
காதல் விவகாரத்தில் சண்டையா?
பிஸினஸ் பிரச்சினையா?
என் வலிய கை தலைமேல் பட்டால் போதும்–
அத்தனை தொந்தரவுகளும் ஓடிப்போய்விடும்!
அரே பாபு, நான் சொல்வதைக் கேள்
இந்த மாலிஷுக்கு நல்ல குணமுண்டு
லட்சம் பிரச்சினைகளுக்கு இது ஒரே தீர்வு
நீ ஏன் இதைச் செய்து பார்க்கக்கூடாது?
ஏன் பயப்படுகிறாய்?
நௌகர் ஹோ யா மாலிக்
லீடர் ஹோ யா பப்லிக்
அப்னே ஆகே ஸபீ ஜுகே ஹை
க்யா ராஜா க்யா ஸைனிக்
ஸுன் ஸுன் ஸுன், அரே ராஜா ஸுன்
இஸ் சம்பீமே படே படே குன்
லாக் துகோ கீ ஏக் தவாஹை
க்யூ(ன்) நா ஆஜ்மாயே
காஹே கப்ராயே..
வேலைக்காரனோ, எஜமானோ,
தலைவனோ, தொண்டனோ
என் முன் எல்லோரும் தலை குனிகிறார்கள்!.
ராஜாவும் சிப்பாயும் அப்படித்தான் தலை குனிகிறார்கள்!
ராஜா, நான் சொல்வதைக் கேள்,
இந்த மாலிஷில் நல்ல பயன் உண்டு
லட்சம் பிரச்சினைகளுக்கு இது ஒரே மருந்து
நீ ஏன் செய்து பார்க்கக்கூடாது?
ஏன் பயப்படுகிறாய்?
Song: Sar jo tera chakraaye Film: Pyaasa, 1957 Lyrics: Sahir Ludhianvi
Music : S.D.Burman Singer: Mohammad Rafi
YouTube link: https://www.youtube.com/watch?v=rJiohcg-gKo
This is a legendary, truly iconic song.

இங்கும் பாருங்கள்- குரல் ஒற்றுமை! ஜானி வாக்கரின் முக பாவனைக்கும் சேஷ்டைகளுக்கும் ஏற்ப ரஃபியின் குரலில் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள்!
ரஃபி, ஜானி வாக்கர் இருவரும் Made for each other என்று தோன்றுகிறது!
இதற்கு இசை எஸ்.டி. பர்மன் என்று போட்டாலும், இந்த மெட்டு முதலில் ஆர்.டி பர்மனுக்கே உதித்தது என்று சொல்கிறார்கள்!
ஜானி வாக்கருக்காக ரஃபி அனேக ஜன ரஞ்சகமான பாட்டுக்கள் பாடியிருக்கிறார்.
ரஃபி, ஜானி வாக்கர் இருவரும் சொந்த வாழ்க்கையிலும் நல்லவர்கள். புகழின் உச்சியில் இருக்கும் போது, காமெடி அசிங்கப்படுவது கண்டு ஜானி வாக்கர் நடிப்பதை நிறுத்தினார். ‘குழந்தை குட்டிகளுடன் படம் பார்க்க வருகிறாகள் என்று தெரியும், அதற்குத் தகுந்தபடிதான் காமெடி இருக்கவேண்டும், அப்படி இல்லாத இடம் எனக்கு வேண்டாம்’ என்று ஒதுங்கி விட்டார்.
தமிழில் “ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்” படத்தில் இப்பாடலின் கருத்தில் ஒரு பாட்டு இருந்தது என்று நினைவு.
This is a tribute to a great actor and good person.
Attachments area
Preview YouTube video Madhumati -Jangal Mein Mor Nacha
Madhumati -Jangal Mein Mor Nacha
Preview YouTube video Sar Jo Tera Chakraye – Johnny Walker, Mohammed Rafi, Pyaasa Song
Sar Jo Tera Chakraye – Johnny Walker, Mohammed Rafi, Pyaasa Song