அதிசய புத்த துறவி ஸு யுன்! – Part 12 (Post No.3183)

buddha

WRITTEN BY S.NAGARAJAN

Date: 24 September 2016

Time uploaded in London: 5-13 AM

Post No.3183

Pictures are taken from various sources; thanks.

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 12

ச.நாகராஜன்

 

 

மலையிலே தனியாக க்வாரண்டைனில் விடப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்திற்கும் மேலாகவே இருக்கும். அவர்களுக்கு தங்க சரியான இருப்பிடம் இல்லை. பகலில் வெயிலிலும் இரவில் கடும் குளிரிலும் மழையிலும் அவர்கள் கஷ்டப்பட்டனர்.

 

 

ஒவ்வொருவருக்கும் ரேஷன் அள்வாக சிறிது அரிசியும் இரண்டு காரட் துண்டங்களும் தரப்பட்டன, அவர்களே அதைச் சமைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒரு நாளைக்கு இரு முறை ஒரு டாக்டர் வந்து அவர்களை சோதித்துக் கொண்டிருந்தார்.

ஏழு நாட்களுக்குள் அவர்களின் பாதிப் பேர் விடுவிக்கப்பட்டனர். ,ஸூ யுன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ப்த்தாம் நாள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

 

 

ஸு யுன் மட்டும் மலையிலே தனியாக் இருந்தார். அவருக்கோ உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை.

பதினெட்டாம் நாளன்று ஒரு டாக்டர் வந்து அவரை காலியாக இருந்த ஒரு வீட்டிற்குச் செல்லுமாறு ஆணையிட்டார். ஸு யுன்னும் சந்தோஷமாக அந்த வீட்டில் புகுந்தார்.

 

 

அங்குள்ள வயதான காவலாளியிடம் அவர் பேச ஆரம்பித்தார். அந்த காவலாளி ஜுயான் ஜூ என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

அவர் பெருமூச்சு விட்டவாறே ஸு யுன்னிடம் கூறலானார்: “இந்த அறை இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்படும் அறை! நீங்கள் இங்கு அனுப்பப்பட்டதற்கான காரணம் நீங்கள் இறந்த பிறகு பிரேத பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதற்காகத் தான்!”

 

ஜி லூ மடாலயத்திற்கு வருகை புரிய வேண்டி தான் வந்ததை ஸு யுன் அவரிடம் தெரிவித்தார்.

அவர் நெகிழ்ந்து போனார்.

 

“நான் உங்களுக்கு ஒரு ம்ருந்தைத் தருகிறேன்” என்று சொன்ன அவர்  ஷென் கு என்ற மருந்தைத் தயார் செய்து அதை ஒரு கிண்ணத்தில் ஸு யுன்னிடம் கொடுத்தார்.

 

 

அதை இரண்டு வேளை சாப்பிட்ட பின்னர் ஸு யுன் சற்றுத் தெம்பாக இருப்பதாக உணர்ந்தார்.

 

காவலாளி அவரிடம் வந்து கூறலானார்: “இப்போது டாக்டர் வருவார். நான் இருமுவேன். உடனே மிகவும் நன்றாகத் தேறியது போல உற்சாகத்துடன் இருங்கள். அவர் எந்த மருந்தைக் கொடுத்தாலும் அதைச் சாப்பிடாதீர்கள்”

 

டாக்டர் வந்தார். காவலாளி சொன்ன படியே ஏதோ ஒரு மருந்துக் கலவையைத் தயார் செய்து அதை விழுங்குமாறு ஸு யுன்னிடம் கூறினார்.

buddha01

 

அவரது வார்த்தையை மறுக்க முடியாமல் ஸு யுன் அதைத் தயங்கித் தயங்கி அருந்தினார்.

 

டாக்டர் சென்ற பிறகு காவலாளி ஓடி ஸு யுன்னிடம் வந்தார்:” அடடா, அந்த மருந்தை ஏன் சாப்பிட்டீர்கள்? நீங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவீர்கள். டாக்டர் உங்கள் உடலை அறுத்துப் பார்க்க மீண்டும் நாளை வருவார்.”

 

ஸு யுன்னுக்குக் கண்கள் திறந்திருந்த போதிலும் எதையும் பார்க்க முடியவில்லை. தரையெங்கும் இரத்தம்

அந்தக் காவலாளி மீண்டும் மருந்தை கொண்டு வந்து கொடுத்தார். ஸு யுன் அதை அருந்தினார்.

 

 

“இன்னொருவராக இருந்திருந்தால் இந்நேரம் செத்திருப்பார். ஆனால் நீங்கள் சாகும் வேளை வரவில்லை போலும். புத்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். டாக்டர் நாளை வரும் போது நான் இருமுவேன். நீங்கள் நல்ல திட்த்துடன் இருப்பது போலக் காண்பியுங்கள்.”

 

மறு நாள் டாக்டர் வந்தார். ஸு யுன் உயிருடன் இருப்பதைப் பார்த்தார்.

 

 

ஒரு விரலை அவர் முன் நீட்டியவாறே சிரித்தார்.  பின்ன்ர் சென்று விட்டார்.

‘ஏன் டாக்டர் அப்படிச் சிரித்தார்’ என்று கேட்ட ஸு யுன்னிடம், “ ஏனெனில் நீங்கள் சாகும் விதி இல்லை என்பதால் தான்!” என்றார் காவலாளி.

 

உபாசகர் காவ் கொஞ்சம் பணத்தை ஸு யுன்னிடம் கொடுத்திருந்தார். அவர் டாக்டரிடம் கொஞ்சம் டாலரைக் கொடுக்குமாறு காவலாளி மூலம் ஸு யுன்னிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.

 

ஸு யுன் நாற்பது டாலரை டாக்டருக்குத் தருமாறு கூறவே காவலாளி அதை வாங்கிக் கொண்டார். உதவி செய்ததற்காக இன்னொரு இருபது டாலரை ஸு யுன் காவலாளிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

“இன்று வரும் டாக்டர் ஐரோப்பிய் டாக்டர். அவர் பணத்தை வாங்க மாட்டார். நாளை வரும் டாக்டரிட்ம பணத்தைத் தருகிறேன். உங்கள் விடுதலை நிச்சயம்” காவலாளி கூறியது போலவே மறு நாள் ஸு யுன் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கென் காத்திருந்த படகில் ஏறி பயணப்பட்டு குவாங்-பு என்னுமிடத்தை அடைந்தார்.

 

அங்கு உபாசகர் காவ் அவரை வரவேற்க அனுப்பி இருந்த பிட்சு அவரை வரவேற்றார்.

அவருக்காக நெடு நாட்களாகக் காத்திருப்பதாக அந்த பிட்சு சொல்லவே ஸு யுன் தனக்கு நேர்ந்தது அனைத்தையும் விவரித்தார்.

 

 

அவர் மிகவும் வருத்தப்பட்டார். உடல் நலம் தேறிய பின்னர் அங்கு ஸு யுன் லோடஸ் சூதார்வை விவரித்துச் சொல்ல ஆரம்பித்தார். ஒரே கூட்டம்.

மலேசிய நகரங்களில் வரிசையாக அவர் சொன்ன சூத்திர விரிவுரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

பத்தாயிரம் சிஷ்யர்கள் உருவாயினர்.

 

சீனாவுக்குத் திரும்பி வருமாறு தந்தி மேல் தந்தி வந்து கொண்டிருந்தது. குளிர்காலமும் தொடங்கியது.

வருடம் முடியப் போகிறது. புது வருடக் கொண்டாட்டத்தின்போது கோலாலம்பூரில் ஸு யுன் இருந்தார். நாட்கள் கழிந்து கொண்டிருந்தன..

 

*************