
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8472
Date uploaded in London – 8 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் ; இது எத்தனை கண்களுக்கு வருத்தம்’
எங்க சார், இந்தப்பக்கம் ?
சும்மா, கோர்ட்டுக்கு வந்துட்டு போறேன்.
எதற்கோ?
மூன்று மாதத்துக்கு முன், என் பெண் , எங்க விருப்பத்துக்கு மாறாக கல்யாணம் பண்ணிக்கிட்டாள். இப்ப வேண்டாம்னு சொல்றாள். அவள் ஆபிசுக்கு போய்விட்டாள். நான்தான் வக்கீல் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும்னு அலையறேன்.
நீங்கள் சென்னையில் இருந்தால் தயவு செய்து சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு போய்ப் பாருங்கள். எல்லாம் இளசுகள். சோகத்துடன் டீ சாப்பிட்டுக்கொண்டே , தாயார், தகப்பனார், வக்கீல்களுடன், கும்பல் கும்பலாக வரும் பரிதாபக் காட்சியைக் காணலாம்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். முகத்தை முகம் பார்த்து செய்து கொள்வதல்ல நுற்றுக்குப் பத்து பேருக்குத் தான் லவ் மேரேஜ் சக்ஸஸ் (Love Marriage success) என்று விஞ்ஞான முறையிலான கணக்கெடுப்பு காட்டுகிறது. இதை ஆங்கிலத்தில் இம்பேசுவேஷன் (INFATUATION) என்று சொல்லுவார்கள். “முத்துக்களோ பற்கள் , தித்தித்ததே சொற்கள், சந்தித்த வேளை , சிந்திக்கவே இல்லை , தந்து விட்டேன் என்னை” என்று பாடி விட்டு மூன்றே மாதங்களில் டைவர்ஸ். (Divorce)!

அந்தப் பத்துப் பேரில் ஐந்து ஜோடிகளுக்கு குழந்தை இல்லை.அது சரி , பொருத்தம் பார்த்து நடந்த எல்லாக் கல்யாணங்களும் சரியா? அதுவும் இல்லை. பொருத்தம் பார்த்து, திருமணம் செய்து, டைவர்ஸ் (Divorce) வரைக்கும்போன பிறகு ஜோதிடர் மேலே ‘கேஸ்’ போட்டதாக சரித்திரமே இல்லை.
‘என் கண்ணை மறைத்து விட்டது.மன்னிக்கவும்’
‘நீங்கள் கொண்டுவந்த ஜாதகம் சரியானதா ?’ அல்லது ‘மாற்றிக் கொடுத்துவிட்டார்களா?’ அல்லது ‘மாற்றிக் கொண்டு வந்துவிட்டீர்களா? ‘ ‘ஒரு வேளை சரியான நேரத்தைக் குறித்து, சரியானபடி ஜாதகம் கணித்திருக்க மாட்டார்களோ?’ —
என்றெல்லாம் பதில் சொல்லி ஜோதிடர்கள் தப்பித்து விடுவார்கள்.
போகட்டும்; மீண்டும் ஜோதிட விஷயங்களுக்கு வருவோம்.
பஞ்சாங்கத்தில் ‘திருமணப் பொருத்தங்கள் பத்து’ என்று போட்டிருக்கும். அது எப்பாடியெல்லாம் பொருந்தும் எனவும் போட்டிருப்பார்கள்.இந்த பத்துப் பொருத்தங்களும் ஆண் நட்சத்திரத்துக்கும் பெண் நட்சத்திரத்துக்கும் இடையேயான பொருத்தங்கள்தான். ஆண் ‘ஜாதகத்துக்கும்’ பெண் ‘ஜாதகத்துக்கும்’ இடையேயான பொருத்தங்கள் இல்லை
இது என்ன புதிய குண்டு? ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட பெரிய குண்டாக இருக்கிறதே ! என்கிறீர்களா ?
உண்மையில் சொல்லப் போனால் மொத்த திருமணப் பொருத்தங்கள் 24 .
அவை என்னென்ன ?
அந்தக் கால ராஜ்யங்களில் அரசாங்க ஜோதிடர்கள் என்று பத்துப் பேர் இருப்பார்கள். ஒருவர் கணக்குப் போடுவதில் தவறு செய்திருந்தாலும் மற்றவர் கண்டு பிடித்து விடுவார். மற்றவர் செய்த ‘மிஸ்டேக்’கை சரி செய்துவிடுவார். ஜோதிடர் குழுவின் தலைவர்தான் முடிவை அறிவிப்பார். இந்த நாட்டு இளவரசருக்கும் அந்த நாட்டு இளவரசிக்கும் பொருத்தம் உள்ளது என ‘டிக்ளேர்’ செய்வார். அதில் தவறு இருந்தால் தலைமை ஜோதிடரின் ‘தலை’ இருக்காது ! குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் கூட இதே முறையில்தான் ஜோதிடம் பார்த்து இருக்கிறார்கள் .

அந்த 24 பொருத்தங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்
1.தினம், 2.கணம்,3.மாகேந்திரம், 4.ஸ்திரீ தீர்க்கம் ,
5.யோனி, 6.ராசி, 7.ராசி அதிபதி, 8.வசியம்,
9.ரஜ்ஜு,10. வேதை, 11.நாடி, 12.விருட்சம்,
13பட்சி 14.ஆயுள் சோதனைப் பொருத்தம் ,
15.ஜாதிப் பொருத்தம்,
16.ஊர்ப் பொருத்தம்,
17.சேவுகப் பொருத்தம்
18.கூட்டாளிப் பொருத்தம்
19.கணிதப் பொருத்தம்
20.பூதப் பொருத்தம்
21.ரிஷிப் பொருத்தம்
22.ஆயப் பொருத்தம்
23.கோத்திரப் பொருத்தம்
24.சந்திர யோகப் பொருத்தம்
இந்த 24 பொருத்தங்களுக்கும் பிறகும் பார்க்கவேண்டிய அம்சங்கள் :–
1.செவ்வாய் தோஷம்
2.மாங்கல்ய தோஷம்
3.சர்ப்ப தோஷம்
4.ஷஷ்டாஷ்டக தோஷம்
5.துவாதச தோஷம்
குடும்பம்/ புத்ர பாக்யம்/ஆயுள்/ களத்திர ஸ்தனங்களையும் பார்க்க வேண்டும்
அந்தக் காலத்தில், இவைகளை எல்லாம் பார்த்துக் கல்யாணம் செய்தார்கள் .
வம்சம் தழைத்தது , நாடும் செழித்தது .
இதையெல்லாம் விவரித்தால் அது பெரிய ‘ஜோதிட புராணம்’ ஆகிவிடும்
சில விளக்கங்களை மட்டும் பின்னால் தருகிறேன்.
–தொடரும் …………………..
tags – 24 பொருத்தங்கள் , தோஷங்கள் ,உனக்கும் எனக்கும் தான் , டைவர்ஸ் ,விவாக ரத்து