Post No. 9999
Date uploaded in London – 20 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில நாவல் ஆசிரியர் சி. எஸ். லூயிஸ்
2500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் உலவிய தேவதை, பூதம், பேய், பிசாசு, மிருகங்களின் கதைகளை ‘காப்பி’ COPY அடித்து ‘பழைய மதுவை புதிய பாட்டிலில்’ விற்கும் ஒரு கும்பல் இப்பொழுது கோடிக் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கின்றது ; ஹாரி பாட்டர் கதைகளைப் படிப்போர் அதன் அடிப்படை அந்தக் கால அம்புலி மாமா (சந்த மாமா) பத்திரிகை கதைகள்தான் என்பதை அறிவார்கள். ஆனால் இப்படிக் காப்பி அடிக்கும் விஷயத்தை முதல் முதலில் சொல்லிக் கொடுத்தது புத்த மதத்தினரே. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பல அணில், கீரி , எறும்பு, கருடன் கதைகள் வருகின்றன .
உலகிலேயே முதல் முதலில் பிராணிகள் பெயர்களில் புராணங்கள் இயற்றியவர்களே இந்துக்கள்தான். மச்ச புராணம், கூர்ம புராணம், கருட புராணம் என்பன சில எடுத்துக்காட்டுகள். பவுத்த மதத்தினர் பழைய கதைகள் அனைத்தையும் திரட்டி அவற்றை போதி சத்துவரின் பூர்வ ஜன்ம அவதாரங்கள் என்று கதை கட்டி, அவற்றை 550 ஜாதகக் கதைகளாகத் தொகுத்தனர். அதை இந்தோனேஷியா, கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகளில் சிற்பங்களாகவும் வடித்தனர். அவர்கள் நமது இந்து மத கதைகளைத் திருடியதிலும் ஒரு நன்மை. அவை உலகெங்கும் பரவின.
இந்து மதக் கதைகளை ஈசாப் என்னும் கிரேக்கன் எகிப்தில் வேலை செய்தபோது ‘காப்பி’ அடித்து எழுதிய ஈசாப் நீதிக் கதைகளும் 2500 ஆண்டுப் பழமையானது என்று சொல்லுவார்கள் (ஆனால் ஆதாரம் இல்லை).
இவற்றுக்கெல்லாம் மூலக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகள் பமையான ரிக் வேதத்தில் உள்ளன. சோம லதா என்ற மூலிகையை பருந்து கொண்டு வருதல், கபிஞ்சலா என்ற பறவை சகுனம் எழுப்புதல், ததிக்ராவன் என்னும் பறக்கும் குதிரைகள், இதுவரை என்னவென்றே தெரியாத பல பறவைகள், பூதங்கள் கதைகள் ரிக் வேதத்தில் உள்ளன .
இப்பொழுது அயர்லாந்தில் பிறந்து ஆங்கிலத்தில் சிறுவர் கதை எழுதி புகழ் பெற்ற கிளைவ் ஸ்டேபிள்ஸ் லூயிஸ் CLIVE STAPLES LEWIS எப்படிக் காப்பி அடித்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார் என்பதைக் காண்போம்.
இருபதாம் நூற்றாண்டின் நாவல் ஆசிரியர் சி.எஸ். லூயிஸ் புகழ் அடைந்ததற்குக் காரணம் அவர் எழுதிய நார்னியா தேவதைக் கதைகள் THE CHRONICLES OF NARNIA ஆகும். இவற்றில் 2500 ஆண்டுகளாக இந்தியாவில் படிக்கப்படும் பஞ்ச தந்திர, வேதாளக் கதைகளைக் காணலாம். ஆனால் அவர் இதை கிறிஸ்தவ மதக் கொள்கைகளைப் பரப்ப பயன்படுத்தினார் . சிறுவற்கான கதை என்ற முறையில் அவை சிறந்த கதைகளே.
இப்பொழுது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் BELFAST நகரில் லூயிஸ் பிறந்தார். ஒன்பது வயதில் அவர் தாயாரை இழந்தார். இதனால் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் ‘போர்டிங் ஸ்கூலு’க்கு BOARDING SCHOOL அனுப்பப்பட்டார். தாயாரை பறிகொடுத்த வருத்தம் ஒரு பக்கம்; குடும்பத்தைப் பிரிந்து ஹாஸ்டலிலேயே வாழும் அவலம் மறுபக்கம். ‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்ற பழமொழிக்கேற்ப போர்டிங் பள்ளியின் கடுமையான கட்டுப்பாடுகளும் அவரை வாட்டி வதைத்தன.
இளைஞராக இருந்தபோது முதல் உலகப் போரில் கட்டாய ராணுவ சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். போரில் பலதத காயம் அடைந்து நீண்ட காலம் சிகிச்சை பெற்றார். பின்னர் 1918ம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் OXFORD பல்கலைக் கழகத்தில் கற்கச் சென்றார். அதே ஊரில் 35 ஆண்டுகள் தங்கி பணி புரிந்தார். சிறந்த அறிவாளி. ஆகையால் 27 வயதிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் ஆனார். 30 வயதுக்குப் பின்னர் கிறிஸ்தவ மதத்தில் பற்றுக்கொண்டு, மதக் கொள்கைகளைப் பரப்பும் கதைகளை எழுதினார். கிறிஸ்தவ மதக் கொள் கைகளுக்கு விஞ்ஞானப் பூச்சுக் கொடுத்து மூன்று தொகுதிகளாக OUT OF THE SILENT PLANET ‘அவுட் ஆப் தி சைலன்ட் பிளானட்’ என்ற நாவலை 1938ல் வெளியிட்டார்.
50 வயதுக்குப் பின்னர் கிறிஸ்தவ மதக் கொள்கைகளைப் போற்றும் சிறுவர் கதைகளை THE CHRONICLES OF NARNIA ‘தி க்ரானிக்கிள்ஸ் ஆப் நார்னியா’ என்ற பெயரில் 7 தொகுதிகளாக வெளியிட்டார் . இந்தக் கதைகள் ஒரு சிறுவர், சிறுமியர் அணி மாயாஜால உலகில் பயணம் செய்யும்போது மிருகங்களை சந்தித்து பேசுகின்றனர். இந்தக் கதைகள் அக்காலத்தில் மிகவும் புகழ் அடைந்தன. இப்பொழுதும் சிறுவர் சிறுமியர்களுக்கு பெற்றோர்கள் அந்தக் கதைப் புஸ்தகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர்.
இந்தியாவில் புகழ் பெற்ற மயில், காகம் முதலிய பறவைகளை ஈசாப் பயன்படுத்தினார். அதே போல இந்தியாவில் புகழ் பெற்ற சிங்கம் முதலியன லூயிஸ் கதைகளிலும் வருகின்றன.
பிறந்த தேதி — நவம்பர் 29, 1898
இறந்த தேதி — நவம்பர் 22, 1963
வாழ்ந்த ஆண்டுகள் — 64
எழுதிய கதைகள் , நாவல்கள்
1926- DYMER
1938 – OUT OF THE SILENT PALNET
1942- THE SCREWTAPE LETTERS
1943- PARELANDRA
1945 – THE HIDEOUS STRENGTH
1950 – THE LION, THE WITCH, AND THE WARDROBEE
1954- THE HORSE AND HIS BOY
1955- THE MAGICIAN’S NEPHEW
1956 – THE LAST BATTLE
–SUBHAM–
tags- ‘காப்பி’ அடித்த, சி.எஸ்.லூயிஸ், C S Lewis, Chronicles of Narnia