QUIZ முடிஞ்சா கண்டு பிடி! இல்லேன்னா ‘காப்பி’யடி !!!! (Post No.8563)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8563

Date uploaded in London – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

QUIZ முடிஞ்சா கண்டு பிடி! இல்லேன்னா ‘காப்பி’யடி !!!!


ஏதாவது 4 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால்  புத்திசாலி!!!
எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். கத்துக்குட்டியின் விடைகள் கீழே உள்ளன

1.இப்போது நடக்கும் காலத்தின் பெயரென்ன???
இது கூட தெரியாமலா??? என்ன முட்டாள்தனமான கேள்வி
“நிகழ்காலம்”இது கூட தெரியாதா…..
என்ன கல்பம்??? (காலத்தை அளக்கும் நேரம் இது)
விட்டுத்தள்ளு இன்னம் 9 கேள்விகள் இருக்கே….



2)உயிரினம்  தோன்றி எவ்வளவு வருடங்களாகின்றன???


3)ஒரு மன்வந்திரத்திற்கும் இன்னோரு மன்வந்திரத்திற்கும்
உள்ள இடை வெளியின் பேரென்ன???


சரி சரி இவன் கேட்கிற கேள்விக்கெல்லாம்’ கூகுள்’ (GOOGLE) தான் பதில்
சொல்லும்!

சரி ,அதைத்தான் பாருங்களேன், பதில் எழுதுங்களேன்


4)கணவனை இழந்த பெண்ணை விதவை என்கிறோம்
மனைவியை இழந்த ஆணுக்கு என்ன பெயர்???


5)ஒரு வருடம் என்பது எவ்வளவு நாள் சரியாக????
இது கூட தெரியாதா??? சும்மா 5 ம்கிளாஸ் பாடத்தையெல்லாம்
கேட்டுகிட்டு…….365 1/4 என்றால் 2 மார்க் தான்
கேள்வியை கவனியுங்கள் துல்லியமாக……
என்ன தலையுல குத்திகிறீங்களா???


6)சுவானம் என்றால் என்ன???அது யாருடைய வாகனம்???


7)தர்பையிலிரந்து பிறந்தவர் யார் யார்??
சரி சரி கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு உங்க மூஞ்சிய
பார்க்க…….ஒண்ணே ஒண்ண நான் சொல்லிடறேன் இன்னொண்ண
நீங்க சொல்லுங்க பார்போம்
தர்ப்பையிலிருந்து வந்த ஒருவன் லவன்,குசன் (TWINS) .
இன்னொருத்தர் யார்???
உங்க வீட்ல பெரிய வயதானவர்  யாராவது இருந்தா கேட்டு
பாருங்களேன்…….


8)வானத்தில் பெருங்கரடி கூட்டம் (GREAT BEAR- URSA MAJOR)  என்று ஒன்று,7 முனிவர்கள்
சேர்ந்தது….அவர்கள் யார் யார்…????


9)கிருஷ்ணரின் 8 பட்ட மகிஷிகளின் பெயர்கள் என்னென்ன ?


10)ஒரு மண்டலம் இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும்.
ஓரு மண்டலம் விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று
சுவாமி அய்யப்பனைக் காண வேண்டும்……
ஓரு மண்டலம் எனபது எவ்வளவு நாள்??? எப்படி கணக்கிடப்
படுகிறது????


11)சிவனுக்கு எத்தனை பிள்ளைகள்???
அதான் ஊருக்கே தெரியுமே…….வினாயகர்,முருகன்….தப்பு


12)(பாற் )கடலின் மேல் உள்ள தெய்வம்- நாராயணன்
மலை மேல் உள்ள தெய்வம் சிவன்,முருகன்.
பாதாளத்தில் உள்ள பாம்பின் பெயெரென்ன???


13)உலகில் தோன்றிய முதல் மொழி எது???
உடனே ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி…தமிழ்’!!!
இது இல்லை விடை- உடனே நீ ஒரு தமிழ் விரோதி பார்ப்பன
கைக்கூலி…சரியப்பா சமஸ்கிருதமும் இல்லை
ஓஹோ நீ கிருஸ்துவனா இயேசு பேசிய அராமியமா???
இல்லை தெரிந்து விட்டது ஹீப்ரூ??? இல்லை பாலி! இல்லை;
இலத்தீன்;இல்லை , கிரேக்கம்….பின்னெ என்னதாய்யா அது???
கண்டுபிடி கண்டுபிடி……


14)”கண்ணாடி முன் நின்று நீ உனது வலது கரத்தை தூக்கினால்
அது இடது கரத்தை தூக்கும்”
இந்த ஸ்டேட்மெண்ட் (STATEMENT)  சரியா????
சரி என்றால் எப்படி ??? இல்லை என்றால் எப்படி???


15)மொத்த எண்கள் எத்தனை 1, 2, 3, ???
அப்பாடா செத்தான்டா சேகரு….சிலர் மற்றவனை மாட்டி விட்டு
சிரிப்பது, அல்லது கண்டு பிடித்து விட்டோம்; அவன் வாயில மண்
என்று சந்தோஷப்படுவது!!


சரி, கடைசீ கேள்விக்கு வருவோம்

கடவுளே, கடவுளே இந்த கேள்வியாவது ஈஸியாக இருக்க
வேண்டுமே…..

16)அக்னி நடசத்திரம் எப்போது ஆரம்பிக்கும் எப்போது முடியும்?
உடனே பஞ்சாங்கத்தை தேடி போகாதீங்க ஒவ்வொரு வருஷமும்
எப்படி கணக்கிடப்படுகிறது???


*****

சரி,ஓவ்வொன்றுக்கும் 10 மார்க் போட்டுக் கொள்ளுங்கள்
150 க்கு 40 வாங்கினாலே நீ ங்க இன்டலிஜென்ட் தான்!!!
இந்த tamilandvedas -ஐ அடமின் செய்கிற திரு .சாமி நாதன்
லண்டன் B.B.C யில் இருக்கும் போது இது மாதிரி நிறைய
கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அவர் 30 வருடங்களுக்கு 

முன் எழுதிய புத்தகம் “ வினவுங்கள் விடை தருவோம்”.

நன்றி வணக்கம்

*****

ANSWERS

1.விடை -சுவேத வராக கல்பம்

2.விடை- 1,972,944,460 வருடங்கள்;சுமார் 198 கோடி.

3.  விடை- ஸந்த்யா காலம்

4. விடை- விதுரன்

5.விடை-365 நாள்,15 நாழிகை,31 வினாடி 15 தற்பரை

6.விடை- நாய் பைரவர்

7.விடை- கருப்பண சாமி

8. அத்ரி ,பிருகு, குத்ஸர், வசிஷ்டர் கவுதமர், காஸ்யபர், ஆங்கீரசர் (சப்த ரிஷிக்கள்)

9. ருக்மணி,,சத்யபாமா,ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா
சத்மயி, பக்ரா , லக்ஷ்மணா

10. 48 நாள் = 27+12+9 (27 நட்சத்திரங்கள்,12 மாதங்கள், 9 கிரகங்கள்)

11. விடை- 4 ; வினாயகர்,வீர பத்ரர், அய்யப்பன் முருகன்

12. விடை வாசுகி என்னும் பாம்பு

13.விடை சைகை (SIGN LANGUAGE)

14.விடை தவறு.கண்ணாடி, தன் முன் இருப்பதை பிரதிபலிக்கிறதே
தவிர, கண்ணடிக்கு இடது, வலது தெரியாது.இடது,வலது
என்று வைத்துக்கொண்டது நீ தான்,சரியா????

15.விடை- 10;  பூஜ்யத்தைச் சேரக்க மறந்தீர்களா???

16. விடை சூரியன் பரணி நட்சத்திரத்திறகுள் நுழையும் போது 

ஆரம்பித்து பரணி நட்சத்திரத்தை விட்டு. போகும்போது முடிவடைகிறது

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags– முடிஞ்சா கண்டு பிடி!,, kattukuty quiz,