
Post No. 8323
Date uploaded in London – – –11 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
உலகின் அனைத்துக் கலைகளையும் தொழில்நுட்பங்களையும், இலக்கியங்களையும், ஆன்மீகா பொக்கிஷத்தையும் கொண்டுள்ள ஒரு அறிவுக் களஞ்சியம் பாரதம் என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. நமது நாட்டு அறிஞர்களால் எழுதப்பட்ட சுமார் 12 கோடி கைப்பிரதிகள் உலகெங்கும் உள்ளன.
ஒரே ஒரு கைப்பிரதியை உரிய முறையில் அறிஞர் ஒருவர் படித்து அதை உலகிற்குத் தந்தார் என்றாலேயே அற்புதங்கள் விளையும்.

உதாரணமாக வேதிக் மேத்ஸ் பற்றிச் சொல்லலாம்.
வேத கணிதத்தின் சில சூத்திரங்களே கணிதம் கற்கும் முறையில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கி இருப்பதை அனைவரும் அறிவர். உலகின் பல நாடுகளிலும் இப்போது வேத கணிதம் கற்பிக்கப்படுகிறது. (செகுலர் இந்தியாவில் வழக்கம் போல எதிர்ப்புகள் உண்டு!)
நேஷனல் மானஸ்க்ரிப்ட்ஸ் மிஷன் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 50 லட்சம் கைப்பிரதிகளும், ஐரோப்பிய நாடுகளில் சுமார் 60000 கைப்பிரதிகளும், தென் கிழக்கு ஆசியாவில் ஒன்றரை லட்சம் பிரதிகளும் உள்ளன.
70 நூலகங்களில் உள்ள பத்து லட்சம் நூல்களைப் பற்றிய அட்டவணை இப்போது தயாராக உள்ளது.
ஆனால் இன்னொரு கருத்தின் படி சுமார் 12 கோடி கைப்பிரதிகள் நமது நாட்டின் கோவில்கள், தனிப்பட்ட நபர்கள், அரசர்களின் அரண்மனைகள் அல்லது நூலகங்கள் மற்றும் இதர இடங்களில் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
இவற்றில் வேதங்கள், ஜோதிடம், கணிதம், இலக்கியம், விஞ்ஞானம், 64 கலைகள், யுத்த சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நூல்கள் உள்ளன.
இந்த 12 கோடி நூல்களில் 67 சதவிகிதம் சம்ஸ்கிருத நூல்கள்! அதாவது 8,04,00,000 – எட்டு கோடியே நான்கு லட்சம் நூல்கள் – சம்ஸ்கிருத நூல்கள்!
25 சதவிகிதம் இதர இந்திய மொழிகளில் உள்ள நூல்கள்! அதாவது 3 கோடி நூல்கள் இதர இந்திய மொழிகளில் உள்ள நூல்கள்
8 சதவிகிதம் அராபிய/பெர்சிய/ திபெத்திய மொழியில் உள்ள நூல்கள்! அதாவது 96,00,000 தொண்ணூற்றி ஆறு லட்சம் நூல்கள் அராபிய பெர்சிய/ திபெத்திய மொழியில் உள்ள நூல்கள்!
சில முக்கியமான நூலகங்களை இங்கு குறிப்பிடலாம் :
Germany Preusiche States Bibliothek, Leipzig
Universitat Bibliothek, Marburg
Bayeriche staats Bibliothek, Munchen
Denmark Royal Library, Copenhagen
France Bibliotheque Nationale, Paris
United Kingdom British Library, London
Royal Asiatic Society, London
Bodleian Library, Oxford
Cambridge University Library, Cambridge
Nepal Darbar Library, Kathmandu
Pakistan Punjab University Library, Lahore
Sri Lanka Museum Library, Colombo
No of Sanskrit manuscripts 12 crores!!!!
பேரறிஞர் டாக்டர் ராகவன் பெரு முயற்சி செய்து பல நாடுகளுக்கும் சென்று அரிய சம்ஸ்கிருத நூல்களின் பட்டியலைத் தயாரித்துள்ளார்.

ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்டு நல்ல அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அந்தக் குழுவிற்கு போதுமான பொருளாதார வளத்தை நல்கி பாரத அறிவுச் செல்வத்தை மீட்க வேண்டும்.
பாரத நாடு வல்லரசாக மிளிரும் இந்தக் கால கட்டத்தில் இது அவசியமான தேவை! அவசரமானதும் கூட!
***

குறிப்பு : இந்த தகவல்களைத் தரும் தளம் : http://himsanskriti.blogspot.in/2008/05/influence-of-rama-on-himalaya.html
ஆனால் மேலதிக விவரங்களுக்காக இந்தத் தளத்தை அணுக முயற்சித்த போது இது இயங்கவில்லை என்ற குறிப்பு கிடைக்கிறது. பல இணைய தளங்களில் கிடைக்கும் நல்ல தகவல்களை நகல் எடுத்து நமது கணினியில் பதிய வைத்துக் கொள்வது எப்போதுமே ஒரு நல்ல வழி தான். பல்வேறு காரணங்களால் பல நல்ல தளங்களை நாட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது!

tags – இந்தியா, 12 கோடி, கைப்பிரதிகள், Palm leaf, Manuscripts