
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9407
Date uploaded in London – –21 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று மார்ச் 21-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
xxxx
இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைகள் கடந்த ஆண்டு நடந்த நிலையில், அங்கு பிரமாண்ட கோவிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த கோவில் கட்டுமான பணிக்கு இலங்கையில் சீதையை சிறை வைத்திருந்த சீதா எலியா என்ற பகுதியில் இருந்து கல் எடுத்து வரப்படுகிறது. இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், ‘ராமர் கோவிலுக்காக இலங்கையின் சீதா எலியாவில் இருந்து ஒரு கல் எடுத்து வரப்படும். இது இருநாட்டு உறவை வலுப்படுத்தும் தூணாகவும் விளங்கும். இந்த கல்லை மயூரபதி அம்மன் கோவிலில் வைத்து இலங்கைக்கான இந்திய தூதரின் முன்னிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள மிலிண்டா மரகோடா பெற்றுக்கொண்டார்’ என்று கூறியுள்ளது.
இந்த கல்லை மிலிண்டா மரகோடாவே இந்தியாவுக்கு கொண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் சீதையை சிறைவைக்கப்பட்ட இடத்தில், அவருக்கு கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
xxxxx
ஜூன் 28-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை

தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற அமர்நாத் குகைக் கோயில். ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கோயிலுக்கு யாத்திரையாக வந்து பனிலிங்கத்தை தரிசித்து செல்வது வழக்கம்.
நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை குறித்து அந்தக் கோயிலின் வாரியக் குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில், வரும் ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை மொத்தம் 56 நாட்களுக்கு அமர்நாத் யாத்திரையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையின் போது கரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும் என்று அமர்நாத் கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் உருவாகும் இந்த பனிக்கட்டி லிங்கம் பின்னர் சுருங்கி மறைந்துவிடும். இது ஒரு இயற்கை அதிசயம். முன்னர் பெரிய லிங்கமாக உருவான பனிக்கட்டி இப்பொழுது புறச் சூழல் வெப்ப அதிகரிப்பால் அளவில் சுருங்கிவிட்டது.
Xxxx
ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா:

பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா
உலக பிரசித்தி பெற்ற ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
உலகிலேயே மத நிகழ்வில் அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்ற பெருமை கொண்டது கும்பமேளா. இந்தியாவில் பிரயாக்ராஜ் (அலகாபாத்), ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய 4 ஊர்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனித நிகழ்வான கும்பமேளாவில் சாதுக்கள், பொதுமக்கள் என கோடிக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஆறுகளில் புனித நீராடுவர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் இந்த ஆண்டு கும்பமேளா நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
கும்பமேளாவில் சாதாரண நாட்களில் 10 லட்சம் பேரும், முக்கிய நாட்களில் 50 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
xxxx
மாசிக்கொடை விழா
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு கிராமம். இங்கு புற்றிலிருந்து தோன்றிய புகழ்பெற்ற பகவதியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பெண்களுக்கான சிறப்பான ஆலயமாகப் போற்றப்படுகிறது.
இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது.
xxxxx
ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு புதிய செயலர்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அடுத்த சர்கார்யவாஹ் ஆக (பொதுச் செயலாளராக) தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதான சுரேஷ் பய்யாஜி ஜோஷி கடந்த 2009 முதல் 12 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்து சாதனை படைத்தார். வயது காரணமாக இனியும் இப்பதவி வேண்டாம் என்று கூறியதால் புதிய பொதுச் செயலர் ஏக மந்தகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதவி மாற்றத்தை உறுதிப்படுத்தியது. பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபையில் இதற்கான தேர்தல் நடந்தது.
சர் கார்யாவாஹ் பதவி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பர் 2 பதவியாகக் கருதப்படுகிறது.தற்போது மோகன் பகவத் உள்ள சர்சங்க்சலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) பதவிக்குப் பிறகு இதுதான் முக்கியப் பொறுப்பு.
இதன் பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலக்கு குறித்து தத்தாத்ரேயா பேசியதாவது: பசு பாதுகாப்பு, குடும்ப கவுன்சிலிங், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அநீதியை அகற்றுதல், கிராமப்புற வளர்ச்சி ஆகியவை, ஆர் எஸ் எஸ் அமைப்பின் இலக்குகளாக இருக்கும். என தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் நிருபர்களிடையே பேசிய அவர், லவ் ஜிஹாத் என்னும் வலுக்கட்டாய மதம் மாற்றத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பதாகக் கூறினார். மத்தியப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் இயற்றிய லவ் ஜிஹாத் தடைச் சட்டங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பதாகவும் கூறினார். ஜா தி இன வேறுபாடுகளை அகற்ற ஆர் எஸ் எஸ் பாடுபடுகிறது என்றும் சொன்னார்.
தத்தாத்ரேயா ஹோசாபலே கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சோராபில் எனும் பகுதியில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், 1968’இல் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் பின்னர் 1972’இல் வித்யார்த்தி பரிஷத்தி லும் சேர்ந்தார்.
இந்திய அவசர நிலைப் பிரகடன காலங்களில், உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
Xxxx
உலக பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்கு கேரள அரசு ‘திடீர்’ அனுமதி

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இதில் நடக்கும் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்ளும் குடை மாற்றும் நிகழ்ச்சி, செண்டை மேளம் மற்றும் பஞ்ச வாத்திய நிகழ்ச்சி, வாணவேடிக்கை உள்ளிட்டவைகளை கண்டு களிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பூரம் திருவிழா நடத்தப்படவில்லை.
பூரம் விழாவை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அடுத்தமாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி பூரம் திருவிழா நடக்கிறது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும். இ-டிக்கெட் மூலம் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
Xxxx

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
உத்திரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28- ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.
xxxxxx
பங்களாதேஷில் இந்து கிராமம் மீது தாக்குதல்
பங்களாதேஷில் உள்ள இந்து கிராமம் ஒன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. பயங்கரவாதிகள் 80 வீடுகளை அடித்து நொறுக்கினர், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கிராமத்திலிருந்து தப்பிச் சென்றனர்
பங்களாதேஷில் உள்ள ஹிபசாத்-இ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத அமைப்பின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புதன்கிழமை இந்துக்கள் கிராமத்திற்கு புகுந்து ஆயுதங்களுடன் தாக்கி சுமார் 80 வீடுகளை, அடித்து நொறுக்கி சூரையாடினர். அடிப்படைவாதக் குழுவின் இணைச் செயலாளர் மவுலானா முப்தி மாமுனூலின் கருத்தை ஒரு இந்து இளைஞர் விமர்சித்ததை அடுத்து கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டனர்.
இந்து இளைஞர்கள் செய்த விமர்சனத்தால் கோபமடைந்த ஹிபாசத்-இ-இஸ்லாத் அமைப்பின் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் போராட்டம் செய்து வருகின்றனர். பேஸ்புக் (Facebook) பதிவு ஒன்றில் மத உணர்வுகள் தூண்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் ஏற்கனவே இந்து இளைஞர்களை கைது செய்திருந்த போதிலும், பயங்கரவாதிகள் இந்துக்கள் உள்ள கிராமத்தை தாக்கினர்.
இந்து மதத்தை சேர்ந்த நபர், வங்க தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை நிறுவுவதை எதிர்த்த மவுலானா முப்தி மாமுனூலின் கருத்தை விமர்சித்து பேஸ்புக்கில் (Facebook) பதிவிட்டார். இதனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் இந்து கிராமமான நவு கான் மீது புதன்கிழமை தாக்கினர்.
பல இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அடிப்படைவாதிகள் பல வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர். வீடுகளையும் அடித்து நொறுக்கினர். தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் ஏராளமான போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tgas- Tamil hindu, news roundup1321