Quiz on Saivaite Saints சைவம் க்விஸ்

Quiz on Saivaite Saints சைவம் க்விஸ்

by london swaminathan

 

1)கண்களைக் கடவுளுக்கே அர்ப்பணம் செய்த நாயன்மார் யார்?

2)யானை மாலை போட்டு அரசன் ஆக்கிய நாயனார் யார்?

3)தண்ணீர் பந்தல் வைத்து அதற்கு திருநாவுக்கரசர் என்று யார் பெயர் சூட்டினார்?

4)தனது மகளின் கருங் கூந்தலை ஈசனுக்கு ஈந்தவர் யார்?

5)கழுத்தை அரிவாளால் அரிந்த அன்பர் யார்?

6)நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனுடன் வாதாடிய சங்கப் புலவன் யார்?

7)தனது இல்லக் கிழத்தியை மனமுவந்து சிவனுக்கு அளித்தவர் யார்?

8)கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே என்று பாடியவர் யார்?

9)புராணங்களின்படி காவிரி நதி உற்பத்தியாகக் காரணமான பறவை எது?

10)தன் தவப் புதல்வனைக் கொன்று கறி சமைத்தவர் யார்?

11)மலரை நுகர்ந்ததற்குத் தண்டணையாக அந்த மூக்கினைக் கொய்தவர் யார்?

12)மதுரையில் எந்தப் புலவனுக்கு சிவன் கவிதை எழுதிக் கொடுத்தார்?

13)ஆண்டவனுக்கு விளக்கேற்ற கையில் காசு இல்லாததால் முடியையே விளக்குத் திரியாக திரித்தவர் யார்?

14)கண்ணப நாயனாரின் இயற்பெயர் என்ன? 15)விதைத்த நெல் முளைகளைக் கொண்டுவந்து விருந்து வைத்தவர் யார்?

16)தன் எடைக்கு நிகராகப் பொன் கொடுத்தவர் யார்?

17)தந்தையின் கால்களைத் துண்டித்த சிவத் தொண்டர் யார்?

18)உத்தரகோச மங்கை என்னும் தலத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய சிவனடியார் யார்?

19)பெண் இன்பத்தைத் துறந்தவர் யார்?

20)தன் தோழருக்காக தன் துணைவியரின் கையை வெட்டியவர் யார்?

21)நடுக் கடலில் அரிதாக கிடைத்த மீனையும் ஆண்டவனுக்குரியது என்று கைவிட்டவர் யார்?

22)தன் குற்றத்திற்காக தலையை முட்டிக் கொண்டு உடைத்துக் கொண்டவர் யார்?

23)பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானுக்கு புட்டு விற்ற கிழவியின் பெயர் என்ன?

24)குற்றம் செய்த சுற்றத்தாரை அழித்த வீரன் யார்?

25)பக்தி இலக்கியத்தில் அடிபடும் பெண்மணிகள் திலகவதி, புனிதவதி யார்?

26)சைவ சமயத்தில் நால்வர் என்பது எந்த 4 பெரியார்களைக் குறிக்கும்?

27)திருப்புகழ் பாடியவர் யார்

 

ANSWERS : 1. கண்ணப்ப நாயனார் 2. மூர்த்தி நாயனார் 3.அப்பூதி அடிகள் 4.மானக் கஞ்சாற நாயனார் 5. அரிவாட்ட நாயனார் 6. நக்கீரன் 7. இயற்பகை நாயனார் 8. அப்பர் 9. காகம் 10. சிறுத்தொண்ட நாயனார் 11. செருந்துணை நாயனார் 12. தருமி 13. கனம்புல்ல நாயனார் 14. தின்னன் 15. இளயான்குடி மாற நாயனார் 16. அமர்நீதி நாயனர் 17. சண்டேச நாயனார் 18. மாணிக்கவாசகர் 19. திருநீலகண்ட நாயனார் 20. கலிகம்ப நாயனார் 21. அதிபத்த நாயனார் 22. திருக்குறிப்பு நாயனார் 23. வந்தி 24. கோட்புலி நாயனார் 25. திலகவதி அப்பர் பெருமானின் சகோதரி; புனிதவதி, பிற்காலத்தில் காரைக்கால் அமையார் என்று அழைக்கப் பட்ட சிவனடியார் 26. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் 27.  அருணகிரிநாதர்

contact swami_48@yahoo.com