

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9896
Date uploaded in London –26 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
ஸ்காட்லாந்து நாவல் ஆசிரியர் SIR WALTER SCOTT சர் வால்டர் ஸ்காட்
பிரிட்டனிலுள்ள ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நாவல் ஆசிரியர், கவிஞர் வால்டர் ஸ்காட் SIR WALTER SCOTT ஆவார் பல காதல் கதைகளையும், துணிகர, சாகசக் கதைகளையும் எழுதியவர். இவருடைய எழுத்துக்கள் இவருக்குப் பின்னர் வந்த அலெக்சாண்டர் துமா, அலெக்சாண்டர் புஷ்கின், கூப்பர் முதலியோர் எழுதிய வரலாற்றுப் புதினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
ஸ்காட் , எடின்பர்க் EDINBURG நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஒரு டாக்டரின் மகள். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 26 வயதில் திருமணம் செய்துகொண்டு ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையும் ஆனார்.
இரு நுறு ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்காட் லாந்தின் நாட்டுப்புற மக்கள் பாடிய நாடோடிப் பாடல்களையும் (BALADS) கதைகளையும் அவர் ஒய்வு நேரத்தில் சேகரித்தார். வக்கீல் தொழில் போக எஞ்சியுள்ள நேரத்தில் கிராப்புறங்களுக்குச் சென்றுவிடுவார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இதில் ஒரு ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்த்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் அவர் அதிகம் உலாவினார்.
அவருக்கு 31 வயதாகும் போதே அவர் தொகுத்த பாடல்கள் மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. பின்னர் தனது சொந்தக் கவிதையையும் வெளியிட்டார். இது எல்லைப்புற மனிதனின் வரலாற்றுக் கதையாகும். நீண்ட கவிதை வடிவில் எழுதினார். 40 வயதில் மேலும் இரண்டு வரலாற்றுக் கவிதைகளை எழுதியவுடன் அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது.
இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் கொஞ்சம் நிலத்தை வாங்கி ஒரு மாளிகையும் கட்டினார். அது ட்வீட் TWEED என்னும் நதிக்கரையில் அமைந்த இடம்.
அவர் எழுதிய 27 நாவல்களில் முதல் நாவல் WAVERLY வேவர்லி ஆகும்.அந்த நாவலின் கதை என்னவென்றால் ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தை பிரிட்டிஷ் சிம்மாசனத்தில் அமரவைக்க நடந்த புரட்சி பற்றியதாகும். ஒரு வீரன் எந்த ஆட்சிக்கு விசுவாசம் செலுத்துவது என்று திண்டாடும் நிலையை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அவருடைய மற்ற நாவல்களிலும் இதே போல இரட்டை விசுவாசம் உடைய கதாநாயகர்களைக் காண முடியும்.
காணாமற்போன ராஜாங்க ரத்தினை க்ரீடங்கள் (CROWN JEWELS) நகைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பிரின்ஸ் ரீஜெண்ட் (பின்னர் நாலாம் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்ட மன்னர்) இவருக்குத் தந்தார். இவர் 100 ஆண்டுக்கு காலம் மறைந்திருந்த அந்த பொக்கிஷத்தைத் தேடிக்கண்டுபிடித்தார். பின்னர் இவர் ஒரு பிரபு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லண்டனிலும் பிரபுக்கள் சபையில் இடம்பெற்று ‘ஸர்’ பட்டம் பெற்றார்.
இவர் நாடகங்களையும் எழுதியுள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனம் பெரிய கடனில் சிக்கிக் கொண்டது. அதைத் திரும்பிச் செலுத்துவதில் முனைப்பு காட்டியதில் அவர் உடல் நலம் குன்றினார்.
பிறந்த தேதி – ஆகஸ்ட் 15, 1771
இறந்த தேதி – செப்டம்பர் 21, 1832
வாழ்ந்த ஆண்டுகள் – 61

அவர் எழுதிய நூல்கள்
1802- MINSTRELSY OF THE SCOTTISH BORDER
1805- THE LAY OF THE LAST MINSTREL
1808 – MARMION
1810- THE LADY OF THE LAKE
1814- WAVERLY
1815- GUY MANNERING
1816- OLD MORTALITY
1817 – ROB ROY
1818- THE HEART OF MIDLOTHIAN
1819- IVANHOE
–SUBHAM–
TAGS- ஸ்காட்லாந்து, நாவல் ஆசிரியர், சர் வால்டர் ஸ்காட் , SIR WALTER SCOTT






