சுவாமி ஓம்காரானந்தாவுக்கு அஞ்சலி(Post.9609)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9609

Date uploaded in London – –15 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Pranams to Swami Omkarananda Ji

சுவாமிஜியின் அன்பர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பல அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் ZOOM, FACEBOOK.COM வழியாககலந்து கொண்டு சுவாமிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

 லண்டனிலிருந்து சனிக்கிழமை மே 15-ம் தேதி ஒளி பரப்பான ஸ்ரீ ஓம்காராநந்தா அஞ்சலி நிகழ்ச்சியில் எனது  இரண்டு பழைய கட்டுரைகளை வாசித்தேன் (இணைப்பில் காண்க)

லண்டனில் நான் கற்ற பாடம் – என்ற தலைப்பில் 2017-ம் ஆண்டில் இந்த பிளாக்கில் எழுதிய விஷயத்தையும் ZOOM (Z சூம்) ஒளிபரப்பில் சொன்னேன் .

லண்டனில் நான் கற்ற பாடம்………..

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம்எவ்வளவு நேரம் பேச வேண்டும்என்ன வயதுக்கார ர்கள்எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.

தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந்தால் போதும்அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.

அதுவாநம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.

எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளேஅவர் பெரிய அறிஞர். வேதங்கள்உபநிஷத்துகள்கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.

அவரோ நிதானமாக ,

தம்பிநீங்கள் அவர் ஒரு நல்ல உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத்  திரைப்படங்களில் வரும் நடிப்பு சந்யாசிகளைத் தான் பார்த்திருக்கிறார்கள்நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.

என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால்ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.

சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.

–SUBHAM–

tags-  Sri Omkarananda, in London, ஓம்காராநந்தா ,அஞ்சலி,