
Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 5 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –4-39 am
Post No. 6978
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
புதிர்கள் : இப்பகுதியில் கட்டுரை எண்கள் 6575 -வெளியான தேதி 20-6-19 மற்றும் 6609 வெளியான தேதி 28-6-19; 6680 – வெளியான தேதி 26-7-19; 6755 – வெளியான தேதி 10-8-19 ஆகியவற்றைத் தொடர்ந்து ஐந்தாம் பகுதி இதோ:-
லட்சம் புதிர்கள், விடுகதைகள், மாயாஜால மாஜிக்குகள், புதிர்க் கணக்குகள்! – 5 (41 முதல் 60 முடிய)
ச.நாகராஜன்
சில புதிர்களை மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ கேட்கும் போது அதை ‘கடி ஜோக்’ என்றும் கூறுவதுண்டு. அதையும் இங்கு பார்த்து விடுவோமே!
- இனிஷியல் உள்ள நாய் எது?
- பால் எப்போது வெட்கப்படும்?
- நேரு, படேல் சிலை பக்கம் போகின்ற காகம், காந்தி சிலையின் பக்கம் மட்டும் போகாதது ஏன்?
- படகு ஏன் ஆடுகிறது?
- இரண்டு இளைஞர்கள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாசலிலும் மற்றொருவர் தெருவிலும் நின்று படிக்கின்றனர். ஏன்?
- செவண்டீபைவ் காபீஸை 12 பேருக்கு எப்படிப் பகிர்ந்து கொடுப்பது?
- ஆப்போஸிட் எதிர்ச்சொல் என்ன?
- ஒருவர் பஸ்ஸுக்குள் ஏறுகிறார். பஸ்ஸில் இடமிருந்தும் உட்காராமல் நின்று விட்டு ஸ்டாப் வந்ததும் இறங்கிக் கொள்கிறார். ஏன்?
- குடிக்க முடியாத காபி எது?
- ஒரு ஆபீஸின் 5வது மாடியில் சந்தனம் பூசி இருக்கிறார்கள். ஏன்?
- ஒரு குடையில் 3 பேர் இடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் நனையவில்லை. ஏன்?
- கடல் அருகில் கொசு போகாது. எதற்காக?
- காந்தியடிகள் தலைவரில்லை. ஏன்?
- நாய் போல இருக்கும் ஆனால் அதற்கு 3 கால் இருக்கும். அது என்ன?
- கையில் ஊசியை வைத்துக் குத்தினால் ரத்தம் வருகிறது. ஏன்?
- தண்ணீர் இல்லாத ஆறு எது?
- What is always coming, but never arrives?
- What can be broken, but is never held?
- What is it that lives if it fed, and dies if you give it a drink?
- What would you use to describe a man who does not have all his fingers on one hand?

Answers : விடைகள்
- ஒநாய்
- அதற்கு ஆடையை எடுக்கும் போது!
- அவர் கையில் கம்பு வைத்திருக்கிறாரே!
- அது ‘தண்ணி’யில் இருப்பதால்
- ஒருவர் ‘எண்ட்ரன்ஸ்’ எக்ஸாமுக்குப் படிக்கிறார். இன்னொருவரோ ‘பப்ளிக்’ எக்ஸாமுக்குப் படிக்கிறார்!
- செவன் டீ யும் ஃபைவ் காபீ யும் இருக்கிறது. ஆகவே 7 பேருக்கு டீயும் 5 பேருக்குக் காப்பியும் கொடுத்து விடலாமே!
- ஆப்போ ‘ஸ்டாண்ட்’
- ‘நின்றபின் இறங்கவும்’ என்று பஸ்ஸில் எழுதி இருக்கிறார்களே, அதனால் தான்!
- ஜெராக்ஸ் காபி
- அது ‘மொட்டை’ மாடி!
- மழையே பெய்யவில்லை
- கடலில் ‘டார்டாய்ஸ்’ இருக்கு!
- அவர் ‘சாந்தியை’ விரும்புகிறாரே
- நொண்டி நாய்
- யார் குத்தியது என்று பார்ப்பதற்காகத் தான் ரத்தம் வெளியே வருகிறது!
- 5க்கும் பின் வரும் 6
- Tomorrow
- A Promise
- Fire
- Normal, because people usually have half their fingers on one hand.
Credit & நன்றி
17 முதல் 20 முடிய : https://icebreakerideas.com/trick-questions/
***