
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 November 2018
GMT Time uploaded in London –15-31
Post No. 5663
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
மரத்தடியர்களுக்கு ஒரு Quiz க்விஸ் + சொல் தேடும் Word search போட்டி (Post No.5663)
மரத்தின் மீது காதல்கொண்டு அதன் அடியில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பவர்கள் மரத்தடியர்கள்
‘மரத்’துக்கு ‘அடி’யில் இருப்பவர் மரத்தடியர்
கீழ் கண்ட கட்டத்தை குறுக்கெழுத்துப் CROSS WORD போட்டியாகவோ, கேள்வி பதில் QUIZ நிகழ்ச்சியாகவோ அல்லது சொல் தேடும் WORD SEARCH போட்டியாகவோ மூன்று மட்டங்களில் விளையாடலாம்.
கேள்வி பதில் எளிமையான level லெவல்
சொல் தேடும் போட்டி (Word search) அதைவிடக் கொஞ்சம் கடினம்.
கேள்விக்கான எண்களையும் விளக்கங்களையும் மட்டும் பார்த்து மரங்களின் பெயர்களைக் கண்டு பிடிப்பது குறுக்கெழுத்துப் போட்டி (Croos word puzzle)— மிகவும் கடினமான வேலை.
குறைந்து 36 மரங்கள் உள.
இதோ அவற்றைக் கண்டுபிடிக்க உதவும் TIPS துப்புகள்.
இந்த விளக்கங்களுடன் எது? என்ன? என்ற கேள்வியைச் சேர்த்துக் கொண்டால் இதை கேள்வி-பதில், QUIZ வினா-விடை நிகழ்ச்சியாக நடத்தலாம்.
குறுக்கே
2.அண்மைக் காலமாக பிரபலமாகி வரும் டானிக், க்ரீம் , பூச்சு ; மணம் தரும் மலர்; கைதை என்றும் அழைப்பர்
3.‘பரம்பரை பரம்பரையாக’– என்று சொல்லப் பயன்படும் மரம். திருப்பழனம், திருக்குடவாசல், திருப்பைஞ்ஞீலி முதலிய கோவில்களில் தல மரம்
4.நமது நாட்டிற்கே பெயர் தரும் மரம்
5.முக்கனிகளில் ஒன்று; கிளிகளுக்குப் பிடித்தமானது
6.முக்கனிகளில் ஒன்று; மலையாளத்தில் பாயஸம் வைப்பர்.
- நெருப்பு என்று பெயர்;பஞ்ச பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த மரம்.
8.அதியமான் அவ்வைப் பாட்டிக்கு கொடுத்த கனியுடை மரம்
9.-நுங்கு தரும் மரம்
- -நாரைக் கொண்டு கயிறு திரிப்பர்
12.நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி…….,……, பல்லுக்கு உறுதி என்று சொல்லும் இரண்டு மரங்களில் ஒன்று.
15.நம்மாழ்வார் ஞானோதயம் பெற்ற மரம்; தான்ஸேனுக்கு குரல் கொடுத்த மரம்
16.வெற்றி பெற்றவர் சூடும்………………. பூவுடை மரம்
17.நாநிலத்தில் ஒரு நிலத்திற்கு தமிழர்கள் பெயர் வைத்த மரம்; XXXX மலை கோவில் தல மரம்; அர்ஜுன என்ற பெயர் பெற்ற மரம்; ஊர் பெயர்களில் இடம்பெற்ற மரம்
18.ஸம்ஸ்க்ருதத்தில் மரத்தின் பெயர்; ஆங்கிலச் சொல் TREE ட் ரீ கொடுத்த மரம்; கற்பகம், பாரிஜாதம் முதலிய 5 மரங்களைக் குறிக்கும் மரம்
19.அவிநாசி, கொரநாட்டுக் கருப்பூர் முதலிய கோவில்களில் தல மரம்; பாடலம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; ஊருக்கும் பெயராக அமைந்த மரம்
21.விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ‘உடும்பரா’ என்ற பெயருடன் வரும் மரம்; பூவாது காய்க்கும் மரம்
21.சீதையின் சோகம் போக்கிய மரம்
23.இந்தியாவிலேயே மிகப்பெரிய மரம்
27.திருவிடைக்கழலி கோவிலின் தல மரம்; சமணர்களும் போற்றும் மரம்
கீழே
1.மதுரை மீனாட்சி கோவிலின் தல மரம்
11.ராம பிரானுக்கு சபரி கொடுத்தாளாம்; அவ்வைக்கு முருகன் கொடுத்த பழம் உடைமரம் என்றும் செப்புவர்.
- கசப்பாய் கசக்கும்; ஆனால் அருமருந்து உடைய மரம்
12.புலியின் பெயருடைத்து; சங்க இலக்கியத்தில் பெண்கள் ‘புலி புலி’ என்று கூவி ஆண்களின் கவனத்தை ஈர்த்த மரம்
13.மாணிக்கவாசகர் குரு அமர்ந்த மரம்- அவர் ஞானோதயம் பெற்ற மரம்
14.மூவிலை மரம்; சிவனுக்குப் பிரியமானது
- மயிலம் முருகன் கோவில் தல வ்ருக்ஷம்
- சுடு மணல் நிறைந்த பிரதேசத்தில் விளைவதால் அந்தப் பெயர் உடைத்து
20.அதியமானின் முன்னோர்கள் கொணர்ந்த மரம்; இக்ஷ்வாகு வம்சத்துக்குப் பெயர் தந்த மரம்.
20.பாக்கு தரும் மரம்
- புத்தர் ஞானோதயம் பெற்ற மரம்
- மாட்டுக்குக் கொடுத்தால் புண்ணியம்; துவாதஸி பாராயண உணவு; ஒரு நட்சத்திரம், முனிவரின் பெயருடைத்து
22.சிதம்பரத்தின் பெயருடைத்து.
24.வாசனை தரும், சோப்பு செய்யலாம்; சென்ட் போடலாம்
25.பெண்களின் கூந்தலுக்கு மணம் ஊட்டிய புகை என தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் புகழும் மரம்
26.திருவொற்றியூர், திருவண்ணாமலை முதலிய பல கோவில்களில் தல மரம்- வகுளம், பகுளம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; நேமிநாதர் என்ற சமண தீர்த்தங்கரர் முக்திபெற்ற மரம்
XXXXXXXXXXXXXXXX



ANSWERS
1.கடம்ப மரம்- மதுரை மீனாட்சி கோவிலின் தல மரம்
2.தாழை- அண்மைக் காலமாக பிரபலமாகி வரும் டானிக், க்ரீம் , பூச்சு ; மணம் தரும் மலர்; கைதை என்றும் அழைப்பர்
3.வாழை- ‘பரம்பரை பரம்பரையாக’– என்று சொல்லப் பயன்படும் மரம். திருப்பழனம், திருக்குடவாசல், திருப்பைஞ்ஞீலி முதலிய கோவில்களில் தல மரம்
4.நாவல் (நாவலந்தீவு, ஜம்பூத்வீபம்) – நமது நாட்டிற்கே பெயர் தரும் மரம்
5.மா – முக்கனிகளில் ஒன்று; கிளிகளுக்குப் பிடித்தமானது
6.பலா – முக்கனிகளில் ஒன்று; மலையாளத்தில் பாயஸம் வைப்பர்.
7.வன்னி – நெருப்பு என்று பெயர்;பஞ்ச பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த மரம்
8.நெல்லி- அதியமான் அவ்வைப் பாட்டிக்கு கொடுத்த கனியுடை மரம்
9.பனை மரம் –நுங்கு தரும் மரம்
- தென்னை மரம் -நாரைக் கொண்டு கயிறு திரிப்பர்
11.இலந்தை- ராம பிரானுக்கு சபரி கொடுத்தாளாம்; அவ்வைக்கு முருகன் கொடுத்த பழம் உடைமரம் என்றும் செப்புவர்.
12.வேல- நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி…….,……, பல்லுக்கு உறுதி என்று சொல்லும் இரண்டு மரங்களில் ஒன்று
12.வேப்ப மரம் – கசப்பாய் கசக்கும்; ஆனால் அருமருந்து உடைய மரம்
12.வேங்கை – புலியின் பெயருடைத்து; சங்க இலக்கியத்தில் பெண்கள் ‘புலி புலி’ என்று கூவி ஆண்களின் கவனத்தை ஈர்த்த மரம்
13.குருந்த மரம் – மாணிக்கவாசகர் குரு அமர்ந்த மரம்- அவர் ஞானோதயம் பெற்ற மரம்
14.வில்வ மரம் – மூவிலை மரம்; சிவனுக்குப் பிரியமானது
15.புளிய மரம்- நம்மாழ்வார் ஞானோதயம் பெற்ற மரம்; தான்ஸேனுக்கு குரல் கொடுத்த மரம்
15.புன்னை மரம் – மயிலம் முருகன் கோவில் தல வ்ருக்ஷம்
16.வாகை -வெற்றி பெற்றவர் சூடும்………………. பூவுடை மரம்
17.மருத மரம் – நாநிலத்தில் ஒரு நிலத்திற்கு தமிழர்கள் பெயர் வைத்த மரம்; XXXX மலை கோவில் தல மரம்; அர்ஜுன என்ற பெயர் பெற்ற மரம்; ஊர் பெயர்களில் இடம்பெற்ற மரம்
18.தரு – ஸம்ஸ்க்ருதத்தில் மரத்தின் பெயர்; ஆங்கிலச் சொல் TREE ட் ரீ கொடுத்த மரம்; கற்பகம், பாரிஜாதம் முதலிய 5 மரங்களைக் குறிக்கும் மரம்
19.பாதிரி – பாதிரி மரம்- அவிநாசி, கொரநாட்டுக் கருப்பூர் முதலிய கோவில்களில் தல மரம் ; பாடலம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; ஊருக்கும் பெயராக அமைந்த மரம். பாடலிபுத்ரம், திருப்பாதிரிப்புலியூர்
- பாலை- சுடு மணல் நிறைந்த பிரதேசத்தில் விளைவதால் அந்தப் பெயர் உடைத்து
20.கரும்பு – அதியமானின் முன்னோர்கள் கொணர்ந்த மரம்; இக்ஷ்வாகு வம்சத்துக்குப் பெயர் தந்த மரம்
20.கமுகு – பாக்கு தரும் மரம்
21.அரச – புத்தர் ஞானோதயம் பெற்ற மரம்
21.அத்தி- விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ‘உடும்பரா’ என்ற பெயருடன் வரும் மரம்; பூவாது காய்க்கும் மரம்
21.அகத்தி- மாட்டுக்குக் கொடுத்தால் புண்ணியம்; துவாதஸி பாராயண உணவு; ஒரு நட்சத்திரம், முனிவரின் பெயருடைத்து
21.அசோக – சீதையின் சோகம் போக்கிய மரம்
22.தில்லை – சிதம்பரத்தின் பெயருடைத்து
23.ஆல்- இந்தியாவிலேயே மிகப்பெரிய மரம்
24.சந்தன மரம் — வாசனை தரும், சோப்பு செய்யலாம்; சென்ட் போடலாம்
25.அகில்- பெண்களின் கூந்தலுக்கு மணம் ஊட்டிய புகை என தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் புகழும் மரம்
26.மகிழ மரம்- திருவொற்றியூர், திருவண்ணாமலை முதலிய பல கோவில்களில் தல மரம்- வகுளம், பகுளம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; நேமிநாதர் என்ற சமண தீர்த்தங்கரர் முக்திபெற்ற மரம்
27.குரா மரம்- திருவிடைக்கழலி கோவிலின் தல மரம்; சமணர்களும் போற்றும் மரம்