காடுகள் பற்றி இந்துமதம்—-கேள்வி&பதில்

tapovan3

Tapovan area

Post No. 732 by London swaminathan

1.அர்ஜுனனும் கண்ணனும் அழித்த வனத்தின் பெயர் என்ன?
2.சீதையை ராவணன் சிறைவைத்த வனத்தின் பெயர் என்ன? அது எங்கே இருக்கிறது?
3. பிருந்தாவனத்துடன் தொடர்புடைய கடவுள் யார்?
4.முனிவர்கள் சுகப்பிரம்மத்திடம் புராணம் கேட்ட காடு எது? அது எங்கே உள்ளது?
5. எந்தக்காட்டுக்கு அப்பரும் சம்பந்தரும் சென்றனர்?

6. ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் காட்டின் பெயராலுள்ள பிரிவுகளின் பெயர் என்ன என்ன?
7.தண்டகாரண்யத்துக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு?
8.மனித வாழ்வின் நான்கு கட்டங்களில் வனத்துக்குச் செல்லும் கட்டத்துக்கு என்ன பெயர்?
9. காட்டின் பெயர் உடைய பெரிய உபநிஷத் எது?
10. புத்தர் முதல் பிரசங்கத்தை எங்கே நடத்தினார்?

gangotri glacier2

11. தமிழில் நாநிலப் பாகுபாட்டில் காடு, காட்டை சேர்ந்த இடத்துக்கு என்ன பெயர்?
12. தாருகாவனத்தில் என்ன நடந்தது?
13. ஸ்வேதாரண்யம் எங்குள்ளது?
14. பதரிவனத்தில் யாருடைய கோவில் இருக்கிறது?
15. வேதத்தில் காட்டிற்கு அதிதேவதை யார் என்று கூறப்பட்டுள்ளது?

16. காட்டில் உருவாக்கப்பட்ட வேதத்தின் பகுதிகளுக்கு என்ன பெயர்?
17. தபோவனம் எங்கே இருக்கிறது?
18. கோவில்களுக்காகப் பூச் செடிகளை வளர்க்கும் இடத்துக்கு என்ன பெயர்?

dandakaranya
Dandakaranya

ANSWERS:

1.காண்டவ வனம்
2.அசோக வனம்; இலங்கையில் இருக்கிறது
3. கிருஷ்ணன்
4. நைமிசாரண்யம். அது தற்போதைய டில்லியைச் சுற்றியுள்ள பகுதி. இதே பெயரில் ஒரு புனிதத் தலம் இப்போது உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது.
5. வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு. இதைச் சுற்றியுள்ள காடுகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது ஒர் ஊரின் பெயராக இருக்கிறது.

6. ராமாயணத்தில் ஆரண்ய காண்டம், மஹா பாரதத்தில் ஆரண்ய / வன பர்வம்
7.தண்டகாரண்யத்தில்தான் அரக்கர்களை வதம் செய்தான் ராமன். கர தூசணர்களை வதைத்தான்; சூர்ப்பநகையை அவமானப்படுத்தினான்.
8. வானப்ரஸ்தம் என்பது வனத்துக்குச் செல்லும் நிலை. அதற்கு முன் பிரம்மசர்யம், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற இரண்டு நிலைகளும் வானப்பிரஸ்தத்திற்கு அடுத்தபடியாக சந்யாசம் என்ற துறவு நிலையும் உண்டு.
9. பிருஹத் ஆரண்யக உபநிஷத் (ஆரண்யம், வனம் என்றால் காடு என்று பொருள்)
10. மான்கள் பூங்காவில் (ம்ருக வனம்) நடத்தினார்
naimisaranya-pKS-543020

Naimisaranya

11. முல்லை என்பது காடும் காட்டைச் சேர்ந்த பகுதியும் ஆகும்; குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சேர்ந்த பகுதியும் ஆகும்
12. தாருகாவனத்தில் செருக்குற்ற முனிவர்களை இறைவன் அடக்கினான். சிவன் பிட்சாடனராகவும் விஷ்ணு மோகினி உருவத்திலும் சென்று அவர்களுடைய பலவீனத்தை உணரச் செய்தனர்.
13. ஸ்வேதாரண்யம் என்பதன் தமிழ்ப் பெயர் திருவெண்காடு. இது மயிலாடுதுறை- பூம்புஹார் இடையே இருக்கிறது
14. இமய மலையில் பதரிவனத்தில் பத்ரி நாராயணர் ( நர நாராயணர் ) கோவில் இருக்கிறது. பத்ரிவனம் என்றால் இலந்தைமரக் காடு என்று பொருள். வியாசர் வசித்த இடம்
15. வேதக் கடவுள் அரண்யானி

16. ஆரண்யகம் (சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கும் வேதத்தின் பகுதிகள்)
17. தபோவனம் என்பது தவம் செய்யக்கூடிய எந்தக் காட்டையும் குறித்தாலும் புகழ்பெற்ற தபோவனம் இமயமலையில் கங்கை நதி உற்பத்தியாகும் கங்கோத்ரி பனிக்குகைக்கு மேலாக இருக்கிறது. இதன் அருகில் நந்தவனம் என்ற பகுதியும் இருக்கிறது.
18. நந்தவனம். இது இந்திரன் தோட்டத்துக்கும் பெயர் ஆகும்.

Earlier Quiz posted by me:

27 Star Quiz (In English and Tamil)
Hindu Picture Quiz-1 (In English and Tamil)
தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
Hindu Tamil Quiz (in Tamil)
Hindu Tamil Quiz (in Tamil)-2
Hindu Tamil Quiz (in Tamil)-3
Hindu Tamil Quiz (in Tamil)-4
Hindu Quiz–1
Hindu Quiz–2
Hindu Quiz–3
Hindu Quiz–4

For more of the same contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

Leave a comment

Leave a comment