
Mahabalipuram: Bhageerathan Penance also called Arjunan Penance.
Written by London Swaminathan
Post No. 1123; Dated 22 June 2014.
N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from now on wards. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com
பிரிட்டனில் உள்ள லண்டனில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிக்கைகளில் இன்று (21/6/2014) காலையில் ஒரு சுவையான செய்தி வெளியாகி இருக்கிறது. பகீரதனும் பார்வதியும், அர்ஜுனனும் காமாக்ஷியும் நின்றுகொண்டே தவம் செய்ததற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. லண்டன் ‘’டெய்லி மெயில்’’ வெளியிட்ட செய்தியின் தலைப்பு:
நீண்ட நாள் வாழ ஆசையா? நாள்தோறும் 3 மணி நிற்கவும்!!
“WANT TO LIVE LONGER? STAND UP FOR THREE HOURS A DAY”.
பகீரதன் கங்கை நதியைக் கொண்டுவரவும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெறவும், உமாதேவி சிவ பெருமானை அடையவும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததை நாம் அறிவோம். கும்ப மேளாவுக்குப் போனால் பல சாது சந்யாசிகள் பலவித கோலங்களில், நிலைகளில் தவம் செய்வதை இன்றும் காண்கிறோம். அசுரர்களும் கூட சிவனிடம் வரம் பெற இப்படித்தான் தவம் செய்தனர்!
((அசுரர்கள், ராக்ஷசர்களை ‘திராவிடர்’ என்று இனம் பிரித்துப் பிரிவினை பேசும் அறிவிலிகளுக்கு குட்டு வைக்குக்கும் ‘பாயிண்ட்’ இது என்பதையும் நிணவு படுத்த விரும்புகிறேன்))

kaamakshi penance on one leg.
ஒரு மனிதன் நாள் தோறும் மூன்று மணி நேரம் நின்றால் அவனுடைய ஆயுள் குறைந்ததபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கும். இவ்வாறு நிற்பது ஆண்டுதோறும் பத்து மராத்தன் ஓட்டம் ஓடுவதற்குச் சமம் என்று டாக்டர் மைக் லூஸ்மோர் கூறுகிறார். விளையாட்டுக் கல்விக் கழகத்தில் பயிற்சி சாதனப் பிரிவு நிபுணர் இவர். சென்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைக் குழுவின் தலைமை மருத்துவர் பொறுப்பையும் வகித்தவர்.
மூன்று மணி நேரம் நிற்பதற்கே இவ்வளவு பலன் என்றால், நூற்றாண்டுக் காலம் நின்று தவம் செய்த நம் முனிவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததில் வியப்பேதும் இல்லை. அது மட்டுமல்ல. நம் முனிவர்களும் யோகிகளும் வெறுமனே நில்லாமல், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளையும் செய்தனர். காற்றைத் தவிர வேறு எதையும் உண்ணவும் இல்லை. ஆகையால உடலில் வளர்-சிதை மாற்றமும் மிகக் குறைவு. இப்படி இருந்தால் மிக மிக நீண்ட காலம் வாழலாம்!
டாக்டர் மைக் லூஸ்மோர் கூறுகிறார்: நிற்பதால் சர்க்கரை வியாதி, புற்று நோய், இரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் எதுவுமே வராது தடுக்கலாம்.
2013- ஆம் ஆண்டில் செஸ்டர் பல்கலைக் கழகத்தில் டாக்டர் ஜான் பக்லி தலைமையில் ஒரு ஆய்வு நடந்தது. அவர்கள், சில பேருடைய உடலில் எல்லா நவீன கருவிகளையும் பொருத்தி ஆய்வு செய்ததில் ஒரு நாளைக்கு 750 கலோரி வீதம்– ஆண்டுக்கு 30,000 கலோரி வரை– எரிக்க முடியும் என்றும் இதனால் ஒருவர் எட்டு பவுண்டு வரை எடையைக் குறைக்க முடியும் என்றும் கண்டு பிடித்தனர்.
வின்ஸ்டன் சர்ச்சில், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, பெஞ்சமின் ப்ராங்லின் போன்ற பல்துறை வல்லுநர்கள் நின்று கொண்டே வேலை செய்வதற்காக உயரமான ‘டெஸ்க்’குகளை விசேஷமாக செய்து உபயோகித்தனர்!!!

பஸ் கண்டக்டர்கள், பஸ் டிரைவர்களைவிட குறைவான இருதய நோய்களுடன் வாழ்ந்தது இன்னொரு ஆய்வில் கண்டறியப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் நிற்பவர் வாழ்வர்; உட்காருபவர் ஒழிவர். படுக்கையில் எட்டு மணிநேரமும், கம்ப்யூட்டர், டெலிவிஷன் முன் பத்து மணி நேரமும் உடலைக் கிடத்துவது நல்லதல்ல.
நாமும் பகீரதன், அர்ஜுனன் போல கொஞ்சம் நிற்கப் பழகினால் அவர்கள் போல நீடூழி வாழலாம்! ஒற்றைக் காலில் இல்லா விட்டாலும் இரட்டைக் காலிலாவது நிற்கலாம்.. இதன் மூலம் ‘பேஸ்புக்’ வியாதி, ‘இன் டெர்நெட்’ வியாதி, டெலிவிஷன் ‘சீரியல்’ வியாதி ஆகிய தீராத நோய்களையும் தீர்க்கலாம்!!!
lordsiddhar
/ January 28, 2015AUM, namaskar. Is it possible to have post 1122 about heath,’ Want to live longer? Stand up for 3 hours a day”, in English.
Aham Brahmasmi