
Already posted in English
Research Article written by London swaminathan
Date: 25 November 2015
Post No. 2360
Time uploaded in London :– 8-24 AM
( Thanks for the Pictures )
ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே என்பதற்கு 3000 ஆண்டுகளாக நமது இலக்கியத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்தப் பதிவில் நான் மேற்கோள் காட்டும் எல்லா கதைகளும் எனது பிளாக்குகளில் உள்ள 2300 கட்டுரைகளில் ஏற்கனவே உள்ளதால் மீண்டும் கதைகளைச் சொல்லாமல் தலைப்புகளை மட்டும் காட்டுவேன்.
முன் காலத்தில் குருகுலத்துக்குச் சென்ற சிறுவர்களுக்கு முதல் நாள் கற்றுக் கொடுத்த பாடம், “சத்யம் வத” (உண்மையே பேசு). ரிக் வேதத்தின் ஆணி வேறே சத்தியம்தான். அதுதான் இந்தியாவின் தேசிய சின்னத்திலும் இருக்கிறது (சத்யமேவ ஜயதே).எதற்காக இவ்வளவு பீடிகை என்றால் நமது வேத, இதிஹாசக் கதைகள் எல்லாம் உண்மையே. அவை அத்தனையிலும் சம்ஸ்கிருதம் பேசியது பற்றி எண்ணற்ற குறிப்புகள் வருகின்றன.
வேதத்தில்
இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு புத்திரன் வேண்டுமென்று வேண்டப்போய், இந்திரனால் கொல்லப்படக்கூடிய ஒரு மகன் வேண்டும் என்று தவறாகக் கூறிய பின்னர், விருத்ராசுரன் பிறந்தான்; இறந்தான்.

உபநிஷதத்தில்
அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசினார்கள். உடனே மூவரும் இடி முழக்கத்தை சம்ஸ்கிருதச் சொற்களாக எடுத்துக்கொண்டனர் (இந்தக் கதையை மட்டும் பின்னால் இணைத்துள்ளேன்)
இதிஹாசத்தில்
ராமாயணத்தில் கும்பகர்ணனுக்கு நீண்ட நித்திரை வந்ததற்கும் காரணம் அவன் சம்ஸ்கிருதத்தில் தவறாக வேண்டியதே என்பதை நாம் அறிவோம்.
அஸ்வத்தாமா ஹத: என்ற தர்மனின் வாசகம்தான் மஹாபாரதப் போரின் போக்கையே மாற்றியது. இதனால் துரோணர் மனமுடைந்து இறக்க நேரிட்டது. போர்க்களத்திலும் சம்ஸ்கிருதமே பேசப்பட்டது. அர்ஜுன- கிருஷ்ண உரையாடல் சம்ஸ்கிருதத்தில் நடந்ததால்தான் நாம் இன்று பகவத் கீதையைப் படிக்க முடிகிறது.
சிலப்பதிகாரத்தில்
ஒரு பார்ப்பனப் பெண், தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு, வீட்டில் நுழைகையில், அவளை வாசலில் வரவேற்க வந்த கீர்ப் பிள்ளையின் வாயில் ரத்தம் இருப்பதைக் கண்டு அவசரப்பட்டு அதன் தலையில் தண்ணீர் குடத்தைப் போட்டு அதைக் கொன்றவுடன் அவளது கணவன் ஓலைச் சுவடியில் சம்ஸ்கிருத வாசகத்தை எழுதிக் கொடுத்துவிட்டு யாத்திரை சென்றபோது, ரோட்டில் நின்று கதறிய அந்தப் பாப்பாத்திக்கு கோவலந்தான் சம்ஸ்கிருத வாசகத்தைப் படித்து வழிகாட்டுகிறான். வைஸ்யனாகிய கோவலனுக்கும் சம்ஸ்கிருதம் தெரியும்.(கீரிப் பிள்ளை கொன்றது குழந்தையை அல்ல; குழந்தை அருகே வந்த பாம்பைக் கொன்றது)
ஊர்ப் பெயர்கள், தெருப்பெயர்கள், அப்பா, அம்மா பெயர்கள்
இந்தப் பெயர்கள் எல்லாம் எல்லா குடும்பங்களிலும் இன்றுவரை சம்ஸ்கிருத்த்திலேயே இருப்பதும் சம்ஸ்கிருதம் பேச்சுவழக்கில் இருந்ததைக் காட்டுகிறது.சங்க இலக்கியத்தில் நிறைய புலவர்களின் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் முன்னரே பட்டியல் போட்டுக் காட்டிவிட்டேன்.
புராணத்தில்
நகுஷன் இந்திர பதவி வகித்த காலத்தில் குள்ளமான அகத்திய முனிவர் பல்லக்குச் சுமக்கையில் ஒரு பக்கம் சய்ய்ந்து இருப்பதைக் கண்டு “சர்ப்ப, சர்ப்ப” என்று சம்ஸ்கிருதத்தில் கட்டளையிடவே அவனை சர்ப்பமாக(பாம்பாக)ப் போகும்படி சபித்த கதையை நாம் அறிவோம். அங்கும் மன்னனும், முனிவரும் சம்ஸ்கிருதமே பேசினர்.
அகத்தியருக்கு நர மாமிசம் சமைத்துப் போட்ட இல்வலனிடம் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வாதாபியை வயிற்றில் கரைத்தபோது அகத்தியர் சொன்னதும் சம்ஸ்கிருதமே.
காதா சப்த சதி தோன்றக் காரணம்
காதா சப்த சதி என்னும் அருமையான பிராக்ருத நூல் தோன்றக் காரணமும் ராணியின் ஒரு சம்ஸ்கிருதக் கட்டளையைத் தவறாகப் புரிந்த ராஜா வெட்கப்பட்டு படிக்கத் துவங்கியதே என்பதையும் முன்னரே எழுதிவிட்டேன். (சம்ஸ்கிருதமும் பிராக்ருதமும் வேறு வேறு மொழிகளல்ல; ஒன்று இலக்கிய வழக்கு, மற்றொன்று பேச்சு வழக்கு; இதையும் முன்னரே எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டேன்)
எனது பிளாக்கில் நான் முன்னர் எழுதிய ஒரே ஒரு கட்டுரையை மட்டும் கீழே இணைத்துள்ளேன்:

த………………….த…………………..த……………………. கதை
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 850 தேதி 19 பிப்ரவரி 2014
Translation of my Post posted in English on 19th February 2014 in this blog.
த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.
முதலில் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய சம்ஸ்கிருதப்பாடலும் அதன் மொழி பெயர்ப்பும். இதை 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக அவர் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு எழுதிக் கொடுத்தார்:
மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
இந்த கீதத்தின் தமிழாக்கம்:
அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.
கதை என்ன?
இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துய்ப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.
மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.
ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார். –(பாடலின் தமிழ் வடிவம் கல்கி பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது;நன்றி)
அமெரிக்க கவிஞர் டி.எஸ்.எலியட்டுக்கு இந்துமதத்தில் பேரார்வம் உண்டு. அவர் கீழை—மேலை நாட்டு கருத்தொற்றுமை காணும் முகத்தான் அவரது நீண்ட தத்துவக் கவிதையான தி வேஸ்ட்லாண்டின் இறுதிப் பகுதியில் இந்த தாம்யத, தத்த, தயத்வ என்ற சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே சேர்த்து சாந்தி, சாந்தி, சாந்தி, என்று சொல்லி கவிதையை முடிக்கிறார்.
எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க.
(இந்தக் கதையானது அக்காலத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இருந்ததையும், அதை அரக்கர், மானுடர், தேவர் மூவரும் பேசினர் என்பதையும் காட்டும் என்பது எனது துணிபு.)
You must be logged in to post a comment.