
Written by London swaminathan
Date: 27 December 2015
Post No. 2431
Time uploaded in London :– 6-55 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
வித்வான் (அறிஞன்), நற்குணம் பற்றிய 31 பழமொழிகள்
விழா நாட்கள் :- 1- ஆங்கிலப் புத்தாண்டு; 14- போகிப் பண்டிகை; 15- தைப் பொங்கல்; 16- கனு, மாட்டுப் பொங்கல், வள்ளுவர் தினம்; 23- ஸ்ரீரங்கம் தேர்; 24-தைப்பூசம்/வடலூரில்ஜோதி தரிசனம் 26- இந்தியக் குடியரசு தினம்; 29-தியாகராஜ ஆராதனை;30 சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி 31- சுவாமி விவேகாநந்தர் ஜயந்தி
முகூர்த்த நாட்கள்:- 20, 29
அமாவாசை:- 9
பௌர்ணமி:- 24 (தைப்பூசம்)
ஏகாதசி:- 6, 20

ஜனவரி 1 வெள்ளிக் கிழமை
வித்யா விநய சம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
சுனிசைவ ஸ்வபாகே ச பண்டிதா: சமதர்சின: – பகவத் கீதை 5-18
கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்திலும், பசுக்களிடத்தும் யானைகளிடத்திலும், நாயிடத்திலும், நாயை உண்ணும் புலையனிடத்திலும் ஆத்ம ஞானிகள் சமதரிசனம் கொள்கிறார்கள்.
ஜனவரி 2 சனிக்கிழமை
பலிப்யோ பலின: சந்தி – வால்மீகி ராமாயணம்7-33-22
பலவானைவிட பலம் மிக்க வீரர்கள் உண்டு.
ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை
சர்வநாசே சமுத்பன்னே அர்த்தம் த்யஜந்தி பண்டித: – பஞ்சதந்திரம்
எல்லாம் போகக்கூடிய நிலையில் பாதியை விட்டுக் கொடுப்பவன் அறிஞன்.
ஜனவரி 4 திங்கட்கிழமை
வித்வானேவ விஜானாதி வித்வத் ஜன பரிஸ்ரமம் – குவலயானந்த:
அறிஞனுக்குதான் மற்றொரு அறிஞனின் கஷ்டங்கள் புரியும்
ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை
விகாரஹேதௌ சதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்சி த ஏவ தீரா: – குமார சம்பவம்
ஒருவனுடைய புத்தியை பேதலிக்கக்கூடிய விஷயங்கள் இருந்தபோதிலும், புத்தி தடுமாறாதவனே வீரன்.
புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்- அவ்வையார்

ஜனவரி 6 புதன் கிழமை
பலவதபி சிக்ஷிதானாம் ஆத்மன்யப்ரத்யயம் சேத: – சாகுந்தலம்
நன்கு கற்றவர்களும்கூட தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.
ஜனவரி 7 வியாழக்கிழமை
பண்டிதே ச குணா: சர்வே மூர்கே தோஷா ஹி கேவலம்
தஸ்மான மூர்க சஹஸ்ரேஷு ப்ராக்ஞ ஏகோ விசிஷ்யதே – சாணக்கியநீதி தர்பணம்
அறிஞர்களிடத்தில் நற்குணங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; முட்டாள்களிடத்திலோ கெட்ட விஷயங்களே உள்ளன. ஆகையால ஆயிரம் முட்டாள்களைவிட ஒரு அறிஞனே மேல்.
ஜனவரி 8 வெள்ளிக்கிழமை
அனுக்தமப்யூஹதி பண்டிதோ ஜன:- ஹிதோபதேசம்—பஞ்சதந்திரம்
அறிஞன் என்பவன் , எதையும் ஊகித்தறிவான்.
ஜனவரி 9 சனிக்கிழமை
ஸ்வதேசே பூஜ்யதே ராஜா, வித்வான் சர்வத்ர பூஜ்யதே – பஞ்சதந்திரம்
கல்விகற்றவனை உலகமே போற்றும்; ராஜாவையோ அந்த நாடு மற்றுமே பூஜிக்கும்
ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை
ஜடிதி பராசயவேதினோ ஹி விக்ஞா: – நைஷதீய சரிதம்
விரைவில் பிறருடைய உள்ளக் கிடக்கையை அறிந்தவன் அறிஞன்.
ஜனவரி 11 திங்கட்கிழமை
ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்
அறிவுள்ளவனுக்கு தெரியாத விஷயம் ஏதேனும் உளதோ!
ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை
ந்யாயாத் பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: – பர்த்ருஹரி நீதி சதகம்
புத்திமான்கள், நியாயமான பாதையிலிருந்து விலகுவதில்லை.
ஜனவரி 13 புதன் கிழமை
அஜராமரவத் ப்ராக்ஞோ வித்யாமர்தஞ்ச சிந்தயேத் – ஹிதோபதேசம்
வயதான ஒருவன் எப்படி மூப்பு, இறப்பு இல்லாத நிலைக்கு ஆசைப்படுவானோ, அப்படி ஒரு அறிஞன் கல்வியையும், செல்வத்தையும் நாடவேண்டும்.
ஜனவரி 14 வியாழக்கிழமை
அகுலீனோஅபி சாஸ்த்ரக்ஞோ தைவதைரபி பூஜ்யதே – ஹிதோபதேசம்
நற்குலத்தைச் சேராதவனாயினும், சாஸ்திர அறிவுடையவன், தேவர்களாலும் பூஜிக்கப்படுகிறான்.

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை
குணா: ப்ரியத்வே அதிக்ருதா ந சம்ஸ்தவ:- கிராதர்ஜுனீயம்
ஒருவரை நாம் விரும்புவதற்குக் காரணம்- அவரது நற்குணமே; உண்மையிது, வெறும் புகழ்ச்சியன்று.
ஜனவரி 16 சனிக்கிழமை
குணீ ச குணராகீ ச விரல: சரலோ ஜன: – சு.ர.பா.
நற்குணமும் நற்குணத்தை நாடுபவரும் அபூர்வமே.
ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை
குணீ குணம் வேத்தி ந வேத்தி நிர் குண: – மனு
நற்குணமுடையோர், நல்லதையே காண்பர்; அவர்களுக்கு குறைகளே கண்களில் தென்படாது (தர்மன் துரியோதனன் கதை)
ஜனவரி 18 திங்கட்கிழமை
குணா: சர்வத்ர பூஜ்யந்தே ந மஹத்யோபி சம்பத: – சாணக்யநீதி
நற்குணமுள்ளவரிடத்தில் அதைப் போற்ற வேண்டும்; இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயதோ ஒரு தடையல்ல.
ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை
குணா குணக்ஞேசு குணா பவந்திதே நிர்குணம் ப்ராப்ய பவந்தி தோஷா: – ஹிதோபதேசம்
நற்குணமானது, நல்லோரிடத்தில் குணமாகத் தெரியும்; மற்றவர்களிடத்தில் அது ஒரு குறையாகத் தென்படும்.
ஜனவரி 20 புதன் கிழமை
கமீசதே ரமயிதும் ந குண: – கிராதர்ஜுனீயம்
நற்குணமானது யாருக்குதான் மகிழ்ச்சி தராது?
ஜனவரி 21 வியாழக்கிழமை
ஏகோ ஹி தோஷோ குணசந்நிபாதே நிமஜ்ஜதீந்தோ: கிரணேஷ்விவாங்க: – குமார சம்பவம்
சந்திரனிடத்தில் ஒரு களங்கமிருந்தாலும் அதன் ஒளி (பெருமை) குன்றவில்லை; பல நற்குணங்கள், ஒரு குறையை மறைத்துவிடும்.
ஜனவரி 22 வெள்ளிக்கிழமை
இந்த்ரோ அபி லகுதாம் யதி ஸ்வயம் ப்ரக்யாபிதைர் குணை: — சாணக்யநீதி
கெட்ட செயல் செய்கையில் இந்திரனும் கூட சிறுமை அடைகிறான்
ஜனவரி 23 சனிக்கிழமை
ஏகோ குண: கில நிஹந்தி சமஸ்த தோஷான் – சாணக்யநீதி
ஒரு நல்ல குணமானது, எல்லா தோஷங்களையும் (குறைகளையும்) அழித்துவிடும்.

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை
அகுணஸ்ய ஹதம் ரூபம் – சு.ர.பா.
குணமில்லாத இடத்தில் அழகு இருந்து என்ன பயன்?
ஜனவரி 25 திங்கட்கிழமை
சஹநாவவது, சஹநௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹை: – யஜூர் வேதம்
நம்மிருவரையும் கடவுள் காப்பாற்றுவாராக;
நம்மிருவருக்கும் அவர் உணவு படைப்பாராக:
நாமிருவரும் பெரும் சக்தியுடன் செயல்படுவோம்;
ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை
சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா:
சர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவேத்
எல்லோரும் சுகமாக இருக்கட்டும்
எல்லோரும் நோயற்றவர்களாக வாழட்டும்
எல்லோரும் நல்லனவற்றையே காணட்டும்
ஒருவரும் துயர் அடையக்கூடாது.

ஜனவரி 27 புதன் கிழமை
யத்ர விஸ்வம் பவத்யேகநீடம் – யஜுர்வேதம்
பிரம்மத்தில் இந்த உலகம் முழுதும் ஒரு பறவைக் கூடு போல இருக்கிறது. (கடவுளின் முன்னால் உலகமே ஒரு குடும்பம்.)
ஜனவரி 28 வியாழக்கிழமை
க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம் – ரிக் வேதம்
உலகம் முழுவதையும் பண்பாடு உடையோராக்குக.

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை
ஆத்மவத் சர்வ பூதேஷு ய: பஸ்யதி ச பண்டித: – ஹிதோபதேசம்
தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் பார்ப்ப்வனே பண்டிதன்/ அறிஞன் ஆவான்.
மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை

ஜனவரி 30 சனிக்கிழமை
க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம் – ரிக் வேதம்
உலகம் முழுவதையும் பண்பாடு உடையோராக்குக.
ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை
கோவிதேச: சவித்யானாம் – சாணக்கிய நீதி —பஞ்சதந்திரம்
கல்வி கற்றவனுக்கு வெளிநாடு என்று எதுவுமில்லை (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).
கம்பன் சோழ மன்னன் மோதல்:
(கற்றவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு
உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?)

–சுபம்-
You must be logged in to post a comment.