
Date: 3 January 2016
Post No. 2455
Time uploaded in London :– 7-41 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
செல்லும், செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்!
(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நூலிலிருந்து; புத்தகம் தந்தவர்: ச.சீனிவாசன், சென்னை).
திருடனுக்குப் பயந்து ஒரு ரோட்டின் ஓரத்தில் மணியகாரன் ஒருவனும், செட்டியார் ஒருவனும் கத்தாழைப் புதருக்கு மறைவில் படுத்திருந்தார்கள். திருடர்கள் அவ்வழியே வேகமாகச் செல்லுகையில் படுத்திருந்த மணியக்காரன் காலில், திருடனின் காலிடறியது.
அப்போது இவர்கள் படுத்திருப்பதையறியாத திருடன், ‘இதென்ன பாதையில் கட்டை விழுந்து கிடக்கிறது? என்றான். அதற்கு மணியகாரன் சும்மாவிராமல், “உங்கள் வீட்டுக் கட்டை இப்படித்தான் ஐந்து பணத்தை முடித்துக்கொண்டு படுத்திருக்குமோ?’ என்றான். இதைக் கேட்ட திருடர்கள், அவனிடமிருந்த ஐந்து பணத்தை அபகரித்துக்கொண்டனர்.
இது செல்லுமோ, செல்லாதோ? என்று ஒரு திருடன் கேட்கப் பறிகொடுத்த மணியகாரன், “செல்லும், செல்லாததைப் பார்க்க இதோ செட்டியார் படுத்திருகிக்கிறாரே; அவரிடம் கேட்டால் போச்சு “ என்றான். உடனே திருடர்கள், அந்த செட்டியையும் பிடித்து அவனிடமிருந்த நூறு பவுன்களையும் அடித்துப் பறித்துக்கொண்டு இருவரையும் செம்மையாய்ப் புடைத்துவிட்டுச் சென்றார்கள்.
“நுணலும் தன் வாயால் கெடும்” – தமிழ்ப் பழமொழி (நுணல்= தவளை)
-சுபம்-
You must be logged in to post a comment.