உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்! (Post No 2504)

psychic_final

Written by S Nagarajan

 

Date: 3 February 2016

 

Post No. 2504

 

Time uploaded in London :–  8-42  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 P_DD_home_depic_lev_1868

 

22-1-2016 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை. பாக்யா வார இதழ் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்!

.நாகராஜன்

 

நீங்கள் சொல்லியிருந்தால், எதை நான் நம்பி இருக்க மாட்டேனோ அதை நானே நேரில் பார்த்தேன். ஆகவே நான் அதைச் சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை” – ஹோமின் நிகழ்ச்சியைப் பார்த்த ராபர்ட் பெல் மற்றவர்களுக்கு கூறிய முதல் வாக்கியம்

 

ஹோமின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்கான காரணம்  பல்வேறு அசகாய செயல்களை ஏராளமான பேர்களின் முன்னால் சர்வ சகஜமாக அவர் செய்தது தான்.

 

இந்த வகையில் உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அவரது செய்கை பலரையும் வியக்க வைத்து அது பற்றி ஆராய வைத்தது!

 

Elongation  என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நீட்டிப்பு சாதாரண விஷயம் அல்ல. நீண்ட பயணம் செய்யும் போது  நாம் ‘ஸ்ட்ரெச்’  செய்து கொண்டு உடம்பை நீட்டித்து கை கால்களை உதறிக் கொள்கிறோம். அது போன்றதல்ல ஹோம் செய்த நீட்டிப்பு.

 

அவர் ஒரு நிகழ்வில் திடீரென உயரமாகிக் காண்பித்தார்! மாஸ்டர் ஆஃப் லிண்டேஸேயின் (Master of Lindsay) வாக்குமூலப்படி  50 பேர்களுக்கு முன்னால், ஹோம் 11 அங்குலம் வரை உயர்ந்தார். டைஎலக்ட்ரிகல் கமிட்டி என்ற ஆய்வுக் குழு இது பற்றி தீர விசாரித்தது.

ஹோம் இந்த நிகழ்வை முடித்தவுடன் உடல்நலமில்லாமல் படுத்து விட்டார்.

 

அவரது இடுப்பு எலும்பும் விலா எலும்புகளும் தனியே தனியே பிரிந்ததாகவும் தெரிய வந்தது. இந்தப் பிரிவு முதுகெலும்பில் உள்ள முள்ளெலும்புகள் தனித் தனியாகப் பிரிவதால் ஏற்பட்ட ஒன்று அல்ல; அல்லது மார்பை மூச்சை உள்ளே இழுத்து மார்பை அகலமுறச் செய்வது போன்றதும் அல்ல; அவரது தோள்கள் அசையவே இல்லை. அருகிலிருந்து 50 பேர்களும் உன்னிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். யாரோ அவரின் கழுத்தை மேலே இழுத்தது போல அவர் உயர்ந்தார் என்று அனைவரும் கூறினர்.

 

ஹோமை விட அதிக உயரமாக இருந்த ஜென்கன் (Jencken) என்பவர் அவர் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். “ஹோமின் பாதம் பூமியிலேயே பாவி இருந்தது. அவரது கோட்டுக்கும் இடுப்பில் இருந்த டிரவுசருக்கும் இடையே இடைவெளி தெரிந்தது. சுமார் எட்டு அங்குலமாவது அவர் உயர்ந்திருக்க வேண்டும்” என்று  லார்ட் அடேர் (Lord Adare) என்பவர் கூறினார்.

 

 

அவரது அகலத்திலும் வித்தியாசம் தெரிந்தது. எல்லா அங்கங்களின் அளவுகளும் கூடி இருந்தது. ஏதோ ஒரு கை அவர் இடுப்பில் வந்திருந்து அவரைத் தூக்கியது போல நாங்கள் உணர்ந்தோம் என்று குழுமியிருந்தோர் கூறினர்.

 

 

இப்படி இரண்டு நீட்டிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நீட்டிப்பு முடிந்தவுடன் ஹோம் மிகவும் சுருங்கிக் காட்டினார். அவர் இடுப்பு எலும்பு பழைய இடத்தில் வந்து அமர்ந்து மிகவும் சுருங்கி விட்டது என்று லார்ட் அடேர் கூறினார்.

கையை மட்டும் கூட ஹோமால் நீட்டித்துக் காண்பிக்க முடிந்தது! முதலில் பென்சிலால் ஒரிஜினல் அளவு குறிக்கப்பட்டது. பின்னர் ஹோம் முதலில் தனது வலது கையை ம்ட்டும் நீட்டித்தார். சுமார் ஒன்பது அங்குலம் அது அதிகமானது. பின்னர் இடது கையை நீட்டித்தார். நீட்டித்த பின்னர் பென்சில் குறியீட்டை வைத்துப் பார்க்கும் போது அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

 

 

ஹெச்.டி. ஹம்ப்ரீஸ் என்ற நடுநிலைப் பத்திரிகையாளர் தான் நேரில் கண்டதைப் பெரிய கட்டுரையாக் எழுதி வெளியிட்டார். ஹெச்.டி. ஜென்கன் ‘ஹ்யூமன் நேச்சர்’ என்ற நூலில் ஹோம் பற்றிய அதிசய தகவல்களை எழுதினார்.

 

ஒரு முறை தன்னுடன் இருந்த மீடியம் பெண்மணியான மிஸ் பெர்டோலச்சி (Miss Bertolacci) என்பவரையும் சேர்த்து நீட்டித்துக் காண்பித்தார்.

 

இப்படி உடல் அளவை நீட்டித்தும் சுருக்கியும் காட்டிய ஹோமின் அடுத்த சாகஸ செயல் படிக்கக் கூட நம்ப முடியாத ஒன்றான லெவிடேஷன்!

 

லெவிடேஷன் என்று கூறப்படும் அந்தரத்தில் மிதக்கும் தன்மையை அவர் சுலபமாகச் செய்து காண்பித்தார். சாதாரணமாக தரையிலிருந்து மேலெழும்பி அறையில் உயரமான் இடத்தில் மிதப்பது அவர் வழக்கம். இதைப் பலரும் பார்த்ததுண்டு.

 

home

அவர் செய்த அதிசய செயல்களில் ஒன்று தனது அகார்டியனை அறையின் மேலே அந்தரத்தில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்வார். அது சுற்றி வரும் போது “ஹோம் ஸ்வீட் ஹோம்” (HOME SWEET HOME)  என்ற பாட்டை இசைத்தவாறே சுற்றிச் சுற்றி வரும்.

1869ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு அதீதச் செயல் மிக விரிவாக ஒரு கமிட்டி முன் விவரித்து பதிவு செய்யப்பட்டது.

ஹோம் இந்த நிகழ்வில் முதலில் தரையிலிருந்து ஆறு அங்குலம் உயர்ந்தார். சந்திர ஒளி அறையெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று இன்னும் மேலே எழும்பிய ஹோம். அறையில் இருந்த ஒரு ஜன்னல் வழிய அந்தரத்தில் வெளியே போக ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்தோர் பிரமித்து அலற, அவர் சற்று தூரம் சென்று அறையின் இன்னொரு ஜன்னல் வழியே திரும்பி வந்து உள்ளே இறங்கினார்.

 

 

பிரபல மாஜிக் நிபுணரான ஹௌடினிக்கு இதெல்லாம் சாதாரணமான செயல் என்று சவால் விடுவதே வழக்கம். தனது 1920ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதியிட்ட டயரிக் குறிப்பில் இது பற்றி விரிவாக ஹௌடினி எழுதியுள்ளார்.

 

 

ஹோ செய்த அதே ‘ஸ்டண்டை’, அவர் செய்த அதே இடத்தில்  அவரும் செய்வதாக சவால் விட்டார். எப்போதுமே இது போன்ற மாஜிக் சாகஸ செயல்களில் ஈடுபடும் முன்னர் ஹௌடினி முதல் நாள் அந்த இடத்தை நன்கு ஆராய்வது வழக்கம். இந்த நிகழ்வுக்கு ‘ஜி’ என்பவரின் ஒத்துழைப்பை அவர் நாடினார். ஆனால் நிகழ்ச்சிக்கு சற்று முன்பு ‘ஜி’ பயந்து போய் பின் வாங்கி விட்டார். அதனால் ஹௌடினியால் இதை நடத்த முடியவில்லை.

 

 

தனது சுயசரிதையில் அனைத்தையும் விலாவாரியாக ஹோம் எழுதி வைத்துள்ளார். லெவிடேஷனைப் பற்றிக் குறிப்பிடுகையில் “மேல் கூரை வரை எழும்பி அதைத் தொடும்போது சாதாரணமாகத் தான் எனக்குத் தோன்றும். காலில்  மட்டும் ஒரு மின் சக்தி பாய்வது போன்ற உணர்வு ஏற்படும்” என்று அவர் எழுதியுள்ளார்.

 

 

ஹோம் வாழ்ந்து வந்த காலம் முழுவதும் அவர் செய்வதெல்லாம் மோசடி வேலை என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால் ஒருவராலும் அப்படி நிரூபிக்க முடியவில்லை.

அவர் மறைந்த பிறகும் இன்றும் கூட அவர் செய்த அபூர்வ செயல்களைப் பற்றி அறிவியல் ரீதியாக விவாதித்த போதிலும் அந்த அதீத உள்வியல் ஆற்றல் செயல்களின் மர்மம் விடுபடவில்லை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல நினைவாற்றல் நிபுணர் க்ரெகார் வான் ஃபைனேஜில் (Gregor Von Feinagile பிறப்பு 22-8-1760 மறைவு 27-12-1819)

நினைவாற்றலுக்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தவர். தனது வழிகளை ஆங்காங்கு சொற்பொழிவுகள் மூலம் அனைவருக்கும் கற்பித்து வந்தார். 15 அல்லது 16 லெக்சர்களுக்கு வகுப்புக் கட்டணமாக அவர் மிக மிகக் குறைந்த தொகையையே வாங்கியதால் மாணவர்கள் கூட்டம் அலை மோதும். 1812இல் வெளியான தி நியூ ஆர்ட் ஆஃப் மெமரி (The new art of memory)  அவரது வழிகளை விளக்கும் நூலாகும்.

 

 

ஒரு முறை அவர் ஹோட்டல் ஒன்றில் தனது சொற்பொழிவை முடித்து விட்டு உணவருந்தினார். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே கிளம்பிய அவரை சர்வர் ஓடி வந்து தடுத்தார்.

“பிரபல நினைவாற்றல் நிபுணர் தனது குடையை மறந்து விட்டார்” என்று கூறியவாறே அவர் டேபிளில் மறந்து வைத்து விட்ட குடையைப் பணிவுடன் தந்தார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் – ஃபைனேஜில் உட்படத்தான்!

******

 

Leave a comment

Leave a comment