
மிதிலை தந்த செல்வம்! (Post No.2519)
Written by S Nagarajan
Date: 8 February 2016
Post No. 2519
Time uploaded in London :– 5-17 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
ஹிந்து சரித்திர பொற்காலம்
மிதிலை தந்த செல்வம்!
ச.நாகராஜன்

ஹிந்து சரித்திரத்தை எழுத வேண்டுமெனில் பல கோடானு கோடி பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அதில் ஒரு முக்கிய பங்கை மிதிலாபுரி வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
அங்கல்லவா சீதா தேவி தோன்றி வாழ்ந்து வந்தாள். இராமாயண நாயகியின் சரிதம் ‘சீதாயா சரிதம் மஹத்’ – சீதையின் மஹத்தான சரிதம் – என்று கூறி புகழப்படுகிறது.
விதேஹம் என்று இன்னொரு பெயரும் மிதிலைக்கு உண்டு. அதன் மன்னனான ஜனக புத்ரிக்கு வைதேஹி என்ற பெயர் இதனால் தான் ஏற்பட்டது. மிதிலா புத்ரி என்பதால் மைதிலி!
இந்த விதேஹம் பற்றி உலகின் மிகப் பண்டைய நூலான சதபத ப்ராஹ்மணம் கூறுகிறது. இங்கு சதாநீரா நதி ஓடியதாக அது தெரிவிக்கிறது. இந்த நதியே கோசல நாட்டையும் மிதிலாபுரியையும் பிரிக்கும் எல்லைக் கோடாகத் திகழ்ந்தது. சதாநீரா என்று பழைய காலத்தில் வழங்கப்பட்ட இந்த நதியை இன்று நாம் கண்டகி நதி என்று குறிப்பிடுகிறோம். நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் இந்த நதி கங்கையைச் சேர்கிறது. இதைப் பற்றிய அற்புதக் கதைகள் கேட்கத் தெவிட்டாதவை.
விதேஹம் பல ராஜ்யங்களை உள்ளடக்கி இருந்தது. வைசாலி அதில் ஒன்று. இங்கு தான் புத்த பிரான் பிறந்தார்.
ஆக மிதிலைச் செல்வமான மைதிலி – சீதா பிராட்டி இராமாயணத்தைத் தர கௌதம புத்தரோ ஒரு புதிய வழிகாட்டுதலை உலகிற்குத் தந்திருக்கிறார். அதற்கான இடமும் இந்த அழகிய பிராந்தியம் தான்!
மிதிலையும் அதன் அருகில் உள்ள வைசாலியும் சோனா மற்றும் கங்கை நதியின் அருகில் உள்ள ராஜ்யங்களாக வரலாறு விளக்குகிறது!
இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கையில் நான்கு நாட்கள் நடைப் பயண்மாக நடந்து விதேகத்தை அடைந்தார் என்ற குறிப்பு வருகிறது. இடையில் ஒரு நாள் இரவு அவர்கள் வழியில் இளைப்பாறுகின்றனர்.
ஆக, இவை இரண்டும் மிக அருகில் இருந்த நகரங்கள் என்பது தெளிவு.

மிதிலையைச் சேர்ந்த அந்தணர்களை மைதிலி பிராம்மணர்கள் என்று கூறுவது வழக்கம்.
இங்கு யாகங்களும் பண்டித சபை விவாதங்களும் அன்றாடம் நடை பெற்று வந்திருக்கின்றன.
சடங்குகளையும் யாகங்களையும் எதிர்த்த புத்தர் தன் கடுமையான பிரச்சாரத்தை இங்கு மேற்கொண்டது இயல்பே.
ஹிந்து தத்துவம் தழைத்து ஓங்கி இருந்த இடம் விதேஹம்.
மஹாபாரதம் விளக்கும் சுகதேவர் மற்றும் மைதில தர்மவியாதன் கதையை நாம் அறிந்து பிரமிக்கிறோம்.
மீமாம்சை என்னும் தர்ம சாஸ்திர பிரிவைச் சொல்பவர்களை மீமாம்ஸகாரிகா என்பர். அப்படிப்பட்ட மீமாம்ச சாஸ்திர நிபுணர்கள் 1400 பேர்கள் ஒரே சமயத்தில் இங்கு இருந்துள்ளர்.
இந்த 1400ன பேரை வைத்து ராஜா பைரவசிம்மன் என்னும் ஒரு மன்னன் யாகம் ஒன்றை நடத்தியுள்ளான். இதை 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
புகழோங்கிய பண்டைய நகரம் இன்று … இருக்கிறது.
இன்றும் இருக்கிறது. அவ்வளவு தான்!
ஹிந்து சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால் உத்வேகம் எழும். பழைய தத்துவ தரிசனங்கள் நமக்குப் புலப்படும். ஆனால் இன்றைய பீஹார் நிலையோ சொல்லவே தேவை இல்லை.
பழைய காலத்தில் சுமார் 1255 சதுர மைல் பரப்பைக் கொண்டிருந்த மிதிலாபுரி இன்று பீஹாரிலுள்ள 38 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் அடங்கிக் கிடக்கிறது.
மதுபானி, தர்பங்கா,சமஸ்திபூர், வைசாலி, முஸாபிர்பூர்ம் சம்பாரன், மொங்கைர், ஸஹர்ஸா, பூர்னியா ஆகிய மாவட்டங்களில் அடங்கி உள்ள பண்டைய பிரம்மாண்டமான ராஜ்யம் பழைய கதையை ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு இதிஹாஸ சொல்லிலும் இங்கு சொல்கிறது.
ஹிந்து பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு தேசீய உணர்வு செகுலர் அடிப்படையில் அழிக்கப்பட்டு வந்தாலும் ஒரு பழம் பெரும் வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கவாவது இந்த மிதிலாபுரியையும் அதன் செல்வங்களையும் பாதுகாக்கலாம் அல்லவா! காலம் கருணை செய்ய வேண்டும்; ஹிந்துக்கள் புகழோங்கிய பண்டைய நாளின் வீரத்தையும், தத்துவதர்சனத்தையும், சீலத்தையும் மீண்டும் கொண்டு எழ வேண்டும்.
அயோத்தியின் அருகில் உள்ள …
மிதிலாபுரி இதற்கு அஸ்திவாரமாக அமையுமா?
*******
Raghavan Narayanasamy
/ February 8, 2016Sir please visit janakpur in nepal. Seethas birth place . Still they
preserve the place where the marriages of all the four held
On Monday, February 8, 2016, Tamil and Vedas
wrote:
> Tamil and Vedas posted: ” மிதிலை தந்த செல்வம்! (Post No.2519) Written
> by S Nagarajan Date: 8 February 2016 Post No. 2519 Time uploaded in
> London :– 5-17 AM ( Thanks for the Pictures ) DON’T REBLOG IT AT
> LEAST FOR A WEEK! DON’”
>