
Written by S Nagarajan (Radio Talk)
Date: 19 February 2016
Post No. 2554
Time uploaded in London :– 8-33 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க உள்ள ஏராளமான வழிகளில் ஒரு பயனுள்ள வழி வீடுகளில் தோட்டம் வளர்ப்பதாகும்.பச்சைப் பசேலென பசுமைக் காட்சிகளைத் தருவதோடு உயிரைக் காப்பதிலும், ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் மூலிகைகள் தனி ஒரு இடத்தைப் பெறுகின்றன. இவற்றை அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போர் கூட வளர்க்க முடியும். தனி வீட்டில் வாழ்வோர் தங்களின் வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ பயனுள்ள கறிகாய் வகைகளையும் மூலிகைகளையும் பயிரிட்டு வளர்க்கலாம்.
மூலிகைகள் மருத்துவ குணங்கள் உள்ளவை. அழகைப் பராமரிப்பவை. சமையலுக்கும் உபயோகப்படுபவை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இவற்றை சமுதாய நலனுக்காக ஆங்காங்கே வளர்த்து வந்தனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர் என்பது தெரியவரும்.
சந்தையிலே வாங்கும் கெமிக்கல் கலந்த உரத்தினால் உற்பத்தியாகும் கறிகாய்களைத் தவிர்த்து நம் வீட்டிலேயே இவற்றைப் பயிரிட்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்படும். செலவு குறையும். முக்கியமாக நமது வீட்டில் நம்மால் வளர்க்கப்பட்டவை என்ற ஆத்ம திருப்தி தோன்றி எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும்.

அனைத்து செடிகளுக்குமே பொதுவாக சூரிய ஒளியும் ஈர மண்ணும் தேவை. சிறு சிறு ஓட்டைகள் உள்ள நல்ல பானைகளை வாங்கி உரிய மண்ணை நிரப்பி நல்ல விதைகளை விதைத்துப் பயன் பெறலாம். அழகிய மலர்ச் செடிகளை வளர்க்க விரும்புவோர் நர்ஸரியில் அவற்றைப் பெற்று வளர்க்கலாம். பானைகளை சூரிய ஒளியில் அவ்வப்பொழுது படும் படி வைத்தல் இன்றியமையாதது.
எதை வளர்க்க முடியும் என்ற பட்டியலுக்கு முடிவே இல்லை. சிறு சிறு கீரை வகைகள், கொத்தமல்லி, கருகப்பிலை, ரோஜா, மல்லிகை, சூரிய காந்தி என்று இடத்திற்கும் நம் மனத்திற்கும் தக்கபடி செடி வகைகளையும் மூலிகைகளையும் இனம் கண்டு வளர்க்கலாம்.
இது தனி மனிதனுக்கான ஆதாயம் மட்டுமல்ல; தனி மனிதன் நாட்டிற்கே செய்யும் சேவையும் கூட!
*********
You must be logged in to post a comment.