இந்துமதமும் விஞ்ஞானமும்! அற்புதமான தீபாராதனை மந்திரம்! (Post No 2619)

deeparadhana to shiva

Research article written by london swaminathan

 

Date: 11 March 2016

 

Post No. 2619

 

Time uploaded in London :–  9-04 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஒருசிறுவனுக்குச் சூரியனைப் பார்க்க ஆசை ஏற்பட்டது. “அம்மா! எனக்கு சூரியனைக் காட்டு” என்றான். அம்மா, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அதை உயர்த்தி “இதோ பார்! சூரியன்” என்று காட்டினாள். அந்தப் பையனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. “சூரியனைக் காட்ட, எதற்கம்மா மெழுகுவர்த்தி?” என்றும் கேட்டுவிட்டான். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சிரிப்பு தாங்கவில்லை. இதே கதைதான் தினமும் கோவிலில் நடக்கிறது.

 

கோவில் ஆரத்தியின்போது, ஐயர்கள் பலவிதமான தீபங்களை ஏற்றி சுவாமி சிலைக்கு முன் காட்டுகிறார்கள். ஆனால் இந்த ஐயர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் மெத்தப் படித்த மேதைகள். வானியலை நன்கு அறிந்த பரம்பரையில் வந்த விஞ்ஞானிகள் அவர்கள். இன்று வானியல் அறிஞர்கள் பல்லாயிரம் கோடி சூரியன்கள் இருக்கின்றன என்று சொல்லுவதற்கு முன்பே, பல ஆயிரம் சூரிய மண்டலங்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்கள் கோவில் ஐயர்கள்!

garauda, alakar koil

மாணிக்கவாசகர் போன்ற தமிழ்ப் பெரியோர்கள் இதைத் தெள்ளத் தெளிவாகவே பாடி வைத்துள்ளனர். ஆகையால் தீபாராதனை காட்டும் ஐயர்கள், கடோபநிஷத்திலிருந்து ஒரு மந்திரத்தைச் சொல்லி தீப ஆராதனை செய்கின்றனர். இதோ அந்த மந்திரம்:–

 

ந தத்ர சூர்யோ பாதி ந சந்திர தாரகம்

நேமா வித்யுதோ பாதி குதோ அயமக்னி:

தமேவ பாந்தமனுபாதி சர்வம்

தஸ்ய பாசா சர்வமிதம் விபாந்தி

 

“அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை, சந்திரனோ, நட்சத்திரங்களோ பிரகாசிப்பதில்லை. மின்னல் கீற்றுகளும் அங்கு ஒளிர்வதில்லை. ஆகையால் நான் காட்டும் இந்த தீபம் எம்மாத்திரம்? உன் ஒளியே எல்லாவற்றுக்கும் ஒளியூட்டுகிறது. அதுதான் ஒளிரும் பொருட்களுக்கெல்லாம் ஒளி தருகிறது.”

 

ஐயர்களுக்கும் புரிகிறது. பல்லாயிரம் கோடி சூர்யப் பிரகாசம் உடைய உனக்கு இந்த சின்ன தீபத்தைக் காட்டியவுடன் என்னைப் பார்த்து சிரித்துவிடாதே. உன்னுடைய அளவற்ற ஒளிக்கு முன்னால் சூரியனோ, சந்திரனோ, நடசத்திரங்களோ பிரகசிக்காது என்பது எனக்கு நன்கு தெரியும். நீயல்லவோ அவைகளுக்கு ஒளியூட்டுகிறாய் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லிவிட்டு ஒரு சூட தீபாராதனை காட்டுகிறார். உடனே நாமும் கைகளை உயரத் தூக்கி, கன்னத்தில் போட்டுக் கொண்டு, கடவுள் நாமத்தை உச்சரித்துவிட்டு, பின்னர் தீபாரதனையைக் கண்ணில் ஒத்திக் கொள்கிறோம்.

 

 

மெழுகுவர்த்தி மூலம் சூரியனைக் காட்ட முயன்ற அம்மாவைப் பார்த்து எல்லோரும் சிரித்ததைப் போல என்னைப் பார்த்து சிரித்துவிடாதே; எனக்கு உன் பெருமை தெரியும் என்பது இதில் தொனிக்கிறது

 

இந்துக்களின் வீட்டிலுள்ள சின்னக் குழந்தை கூட, முதலில் சொல்லும் கணபதி துதியில், ‘சூர்ய கோடி சமப்ரபா’ (பத்து மில்லியன் சூரியப் பிரகாசம் உடையவனே!) என்று கடவுளைப் புகழும்.

abdul kalam arati

The President, Dr. APJ Abdul Kalam is being traditionally welcomed when he Inaugurated Neo Pherma Indian Collaboration Company at Abu Dhabi on his official visit to UAE

ஒரு 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பியர்களுக்கு ‘டெஸிமல் சிஸ்டமும்’ தெரியாது. பல்லாயிரம் கோடி சூர்யனிருப்பதும் தெரியாது. இப்பொழுதுதான் கண்டுபிடித்தி ருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு, டெசிமல் சிஸ்டத்தைச் சொல்லித் தந்திராவிடில், கம்ப்யூட்டர், இண்டெர்நெட் – முதலிய எதுவுமே வந்திருக்காது.

 

இனி கோவிலுக்குப் போனால் ஐயர் சொல்லும் அந்த மந்திரத்தை உணர்ந்து கடவுளின் ‘பில்லியன்’ சூரியப் பிரகாசத்தைத் தியானியுங்கள். இவ்வளவு அருமையான, அறிவியல்பூர்வ மந்திரத்தை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்துவரும் ஐயர்களுக்கு ஒரு கும்பிடும் போட்டுவிட்டு வாருங்கள்.

 

இதோ மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்:–

அண்டப்குதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை, வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன

இல்நுழைகதிரின் துன் அணுப்புரையச்

சிறியவாகப் பெரியோன்

(திருவாசகம்- திருவண்டப் பகுதி)

 

இறைவனோடு ஒப்பிடுகையில், அண்டங்கள்  அனைத்தும் தூசியில் பறக்கும் சிறு துகள்கள் போல ஆகிவிடுகின்றன என்கிறார் அடிகள். அதுமட்டுமல்ல, இதை ‘வளப்பெரும் காட்சி’ என்று வருணிப்பதிலிருந்து, பிரபஞ்சம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருந்திருப்பது புலனாகிறது. மாணிக்கவாசகரின் ஒவ்வொரு பாடலும் உபநிஷத உண்மைகளின் தமிழ் வடிவமே என்பதை, சுவாமி சித்பவானந்தரின் திருவாசகப் பேருரையைப் படித்தவர்களுக்குத் தெள்ளிதின் விளங்கும்!

Aarti-at-Balaji-Temple

இதோ சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும், ஐயர்கள் சொல்லும் உபநிஷத மந்திரம்:–

 

न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं
नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः।
तमेव भान्तमनुभाति सर्वं
तस्य भासा सर्वमिदं विभाति॥१५॥

इति काठकोपनिषदि द्वितीयाध्याये द्वितीया वल्ली॥

 

Na tatra suryo bhati na candra tarakam

nema vidyuto bhanti kutoyam agnihi

tameva bhantam anubhati sarvam

tasya bhasa sarvam idam vibhati

 

There the sun does not shine, nor do the moon and the stars. These streaks of lightning do not shine there either, (so) what to speak of this fire? That, shining, makes all others shine. By virtue of its luminosity, all these (manifestations) are illuminated.

 

–சுபம்–

 

 

Leave a comment

1 Comment

  1. murugankovil's avatar

    Saundaryalahari by adishankara
    Also refer same
    (Attainment of all occult powers)
    Pradhipa-jvalabhir dhivasa-kara-neerajana-vidhih
    Sudha-suthes chandropala-jala-lavair arghya-rachana;
    Svakiyair ambhobhih salila-nidhi-sauhitya karanam
    Tvadiyabhir vagbhis thava janani vacham stutir 100

    Oh Goddess who is the source of all words,
    This poem which is made of words,
    That you only made,
    Is like showing the camphor lamp to the Sun,
    Is like offering as ablation to the moon,
    The water got from the moon stone,
    And is like offering water worship,
    To the sea.

Leave a comment