Fun with English
அனக்ராம் – 1
Written by S NAGARAJAN
Date: 11 April 2016
Post No. 2713
Time uploaded in London :– 7-58 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ச.நாகராஜன்
ஆங்கிலம் அறிவோமா என்ற எனது நூலில் முதல் அத்தியாயத்தில் உள்ள 15ஆம் பகுதி அனக்ராம் பற்றியது.
அதை இங்கே தருகிறேன். இந்த நூல் ஆங்கில மொழியில் உள்ள
வேடிக்கை விநோதங்களைத் தொகுத்துத் தரும் ஒரு நூல்.
அனக்ராம் (ANAGRAM) என்றால் என்ன?
ஒரு சொல் அல்லது பெயரில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு மாறுபட்ட பொருள் தரும் வேறொரு சொல்லோ, சொல் தொடரோ உண்டாக்குதல் என்று இதற்குப் பொருள். எடுத்துக்காட்டாக TELEGRAPH என்ற வார்த்தையில் 9 எழுத்துக்கள் உள்ளன.
இதையே மாற்றி GREAT HELP என்ற இரு வார்த்தைகளாக அமைக்கலாம். TELEGRAPH மக்களுக்கு பேருதவி புரிகிறதல்லவா?
இப்படி மூலச் சொல்லும் புதியதாக உருவாக்கப்பட்ட சொல்லும் ஏதோ ஒரு விதத்தில் விசித்திரமான தொடர்பு கொண்டிருப்பது சுவையான விஷயம்.
சில அனக்ராம்களைப் பார்க்கலாம்:
- SWEET HEART (அன்பிற்கினியாள்)
- MINISTER (மந்திரி)
- DEMOCRATIC (ஜனநாயகம்)
- PARLIAMENT (மக்கள் சபை)
- ASTRONOMERS (வானியல் நிபுணர்)
இவற்றிற்கான அனக்ராம்கள் என்ன?
முதல் அனக்ராமை இப்படி அமைக்கலாம்.
THERE WE SAT (அங்கே நாம் அமர்ந்தோம்)
மந்திரியை மாற்றினால் வருவது ‘பாவத்தைச் செலுத்துதல்’ – PERMIT SIN
ஜனநாயகம் மாற்றப்படும் போது கிடைப்பது ‘தமாஷ் வியாபாரம்’. – COMIC TRADE
மக்கள் சபை மாறுவது அரைகுறை மனிதர் – PARTIAL MEN –
என்று. கடைசிச் சொல்லான வானியல் நிபுணர்
மாற்றப்படும் போது கிடைப்பது இனிமேலும் நட்சத்திரங்கள் இல்லை – NO MORE STARS!
ஒரு விசித்திரமான தொடர்புள்ள வார்த்தைகளைக் கண்டு மகிழ்வது சுவையான அனுபவம் தானே!
இன்னும் சில எடுத்துக் காட்டுகள் இதோ:
- A SHARP LIFTER
HAS TO PILFER
\ 2. THE EYES
THEY SEE
- DECIMAL POINT
I’M A DOT IN PLACE
- THE COUNTRY SIDE
NO CITY DUST HERE
- THE DETECTIVES
DETECT THIEVES
- THE NUDIST COLONY
NO UNTIDY CLOTHES
நேர் எதிர்மாறான பொருள் தரும் சில அனக்ராம்கள்:-
- MISFORTUNE
IT’S MORE FUN
- VIOLENCE
NICE LOVE
- EVANGELISTS
EVIL’S AGENTS
இப்படி எழுத்துக்களை மாற்றி அமைத்துப் புதுச் சொற்களை அமைப்பது ஐரோப்பாவில் ஒரு காலத்தில் பிரபலமான பொழுது போக்காக இருந்தது.
அடுத்து அனக்ராம் பற்றி சில சுவையான தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.
********
You must be logged in to post a comment.