
Written by london swaminathan
Date: 6 May 2016
Post No. 2787
Time uploaded in London :– 10-27 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

கல்வி அழகு
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்
கல்வியழகே அழகு – நாலடியார் 131
சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)
நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.
xxx
சொல் அழகு
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)
பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
Xxx

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு
–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)
பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.
Xxx

வள்ளுவன் கூறுகிறான்
சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனை பாவை அற்று
–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)
–Subham–
You must be logged in to post a comment.