
Article written by London swaminathan
Date: 11 June 2016
Post No. 2887
Time uploaded in London :– 6-10 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

Please read my (London Swaminathan) articles posted earlier:
1.Aryan Hitler and Hindu Swastika
2.Sibi Story in Old Tamil Literature
3.Were Moses and Jesus Aryans? (Two Parts)
4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)
5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)
- ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)
7.திராவிடர்கள் யார்? (July 17, 2013)
8.தமிழன் காதுல பூ!!! (March 25, 2012)
9.ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும் (August 14, 2013)
10.ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்(December 29, 2013)
11.Eighteen groups of Indians! (November 4, 2013)
12.‘Dravidians are Invaders’ ( December 26, 2013)
13.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain! (November 10, 2013)
14.Arya Putra Ravana Spoke Sanskrit! Hanuman spoke Prakrta! (Research Article No.1848; Date: 6 May 2015)
15.Brahmin Kings of Sri Lanka! (Article No.1854; Dated 9 May 2015.)
16.Were Moses and Jesus ‘Aryans’? (July 20, 2013)
17.Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)
(July 23, 2013)
18.Are these customs Aryan or Dravidian?
(July 2, 2013)
19.Aryan Chapatti and Dravidian Dosa!
(August 14, 2013)
20.Who are Dravidians? (July 17, 2013)

ஆரிய என்ற சொல் சங்க இலக்கியத்தில் இமயத்தில் வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்கால இலக்கியங்களில், வடக்கில் வாழும் மக்களையும், சம்ஸ்கிருத மொழியையும் குறிக்கப் பயன்பட்டது. இந்தியாவைப் பிளந்து, மதத்தை நிலைநாட்ட வந்தவர்கள், இதற்கு இனப்பூச்சு பூசி, திராவிடர் என்றால் பூர்வ குடி மக்கள், ஆரியர் என்றால் கைபர் கணவாய் வழியாகக் குடியேறியவர்கள் என்று விஷமத் தனமான புதுப் பொருள் கற்பித்தனர். ஆனால் தமிழ் இலக்கியத்திலோ, சம்ஸ்கிருத இலக்கியத்திலோ இதற்கு ஆதாரம் கிடையாது. ராமாயணத்தில், ராமனை சீதை, ‘ஆரிய’ என்று அழைப்பார். மாண்புமிகு, மரியாதைக்குரிய என்று இதற்குப் பொருள். நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாவல் எழுதியவர்களும், வெளியிட்டவர்களும், ஆரிய சிகாமணிகளே, ஆரிய சிரேஷ்டர்களே என்று, வாசகப் பெருமக்களை அழைத்துள்ளனர். ‘மெத்தப் படித்தவர்களே’, ‘பண்பாடுடுடையவர்களே’ – என்று பொருள்.
ஆரிய என்ற சொல் மருவி ‘ஐயர்’ (உயர்ந்தோர்) என்று ஆயிற்று (ஆர்ய= அஜ்ஜ= அய்யர்= ஐயர்).
சில சுவையான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ‘ஆரிய’ – என்ற சொல்லின் பிரயோகத்தை விளக்குகின்றன:–
கர்தவ்யம் ஆசரன் கார்யம் அகர்த்வ்யம் அநாசரன்
திஷ்டதி ப்ரக்ருதாசாரே ச வா ஆர்ய இதி ஸ்ம்ருத:
தர்ம விதிகளைக் கடைப்பிடிப்பவன், அதர்ம விதிகளை அனுசரிக்காதவன், நடைமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவன் ஆர்யன் என்று கருதப்படுவான்.
வாச்யௌ நடீசூத்ரதாராவார்ய நாம்னா பரஸ்பரம்
வயஸ்யேத்யுத்தமைர்வாச்யோ மத்யாரார்யதி சாக்ரஜ:
(வக்தவ்யோ) அமாத்ய ஆர்யேதி சேதரை:
ஸ்வேச்சயானாமபிர்விப்ரார்விப்ர ஆர்யேதி சேதரை:
நாடகத்தில் நடிகரும், சூத்ரதாரியும் (டைரக்டர்) ஒருவரை ஒருவர் ‘ஆர்ய’ என்று அழைக்கலாம் (இதை காளிதாசன் நாடகங்களில் காணலாம்).
வயதில் குறைந்தவர்கள் மூத்தவர்களை ஆர்ய எனலாம்.மந்திரிகளை ஆர்ய (மாண்புமிகு) என்று கூப்பிட வேண்டும். பிராமணர்கள் விருப்பத்தின்பேரில் மற்றவர்களை ஆர்ய என்று அழைக்கலாம்.
வீடு எது? காடு எது?
வீடு என்றால் பவனம். இதில் ‘ப’ என்ற எழுத்து போய்விட்டால் அது ‘வனம்’—அதாவது காடு. இதை விளக்கும் அழகிய சம்ஸ்கிருத ஸ்லோகம் இதோ:
யன் மனீஷி பதாம்போஜரஜ: கணபவித்ர்ரிதம்
தத்தேவ பவனம் நோ சேத்பகாரஸ்தத்ர லுப்யதே
பூதம் ஹி தத் க்ருஹம் யத்ர ஸ்வதாகார ப்ரவர்த்ததே
பொருள்:-
எந்த வீட்டில் ஞானிகளின் பாததூளி படுகிறதோ, எந்த வீட்டில் ஸ்வதா என்ற வேத மந்திரத்துடன் நீத்தார் (இறந்தோர்) கடன் நடைபெறுகிறதோ அது பவனம் (வீடு); மற்றதனைத்தும் வனம்!
(அரும் பத விளக்கம்:–மனீஷி= அறிஞர்கள், ஞானிகள்; கண=பாத தூளி, பத+அம்புஜ= பாத கமலங்கள், திருவடிகள்; பூதம்= புனிதமாக்கப்பட்ட)
–சுபம்–
R Nanjappa
/ June 11, 2016ஆர்ய என்ற சொல்லின் பொருளை ஸ்ரீ அரவிந்தர் நன்கு விளக்கியிருக்கிறார். “ஆர்ய”
என்ற பெயரில் ஒரு பத்திரிகையே நடத்தினார்! அவருடைய முக்கியமான படைப்புக்கள்
அனைத்தும் அதில்தான் முதலில் வெளிவந்தன.
போர்க்களத்தில் குழம்பி நின்ற அர்ஜுநனைப் பார்த்து ஸ்ரீ க்ருஷ்ணர் கேட்கிறார்:
“தகாத சமயத்தில் இந்த மோஹம் எந்தக் காரணத்தினால் உன்னை வந்தடைந்தது? இது
அனார்யஜுஷ்டம் அதாவது சான்றோர்களால் கடைப்பிடிக்கத்தகாதது” என்கிறார்.[
ஸ்ரீமத் பகவத் கீதை: 2.2]
உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு சொல்லலாம். விதண்டாவாதிகளிடம்
சொல்லி என்ன பயன்?
2016-06-11 10:40 GMT+05:30 Tamil and Vedas :
> Tamil and Vedas posted: ” Article written by London swaminathan Date: 11
> June 2016 Post No. 2887 Time uploaded in London :– 6-10 AM ( Thanks
> for the Pictures) DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE
> PICTURES; THEY ARE COPY”
>