
Profit, loss and risk crossword on white background
Article written by S.NAGARAJAN
Date: 12 June 2016
Post No. 2888
Time uploaded in London :– 22-40
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சம்ஸ்கிருதச் செல்வம்
வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!
ச.நாகராஜன்
நாடு முழுவதும் சுற்றி வரும் கவிஞர் உலக வாழ்க்கையின் இயல்பைக் கண்டு வியக்கிறார்.
மனிதரில் தான் எத்தனை விதம்! வாழ்க்கையை தனக்குத் தானே எப்படியெல்லாம் அவர்கள் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! வியப்பு மேலிடுகிறது அவருக்கு!
சிலர் அறியாமையால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்!
சிலரோ தங்களின் அலட்சியப் போக்கினால் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! சிலரோ அதிகம் படித்து விட்ட கர்வத்தினால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! இன்னும் சிலரோ ஏற்கனவே வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்களுடன் சேர்ந்து அவர்களின் செல்வாக்கினால் தங்கள் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொ ள்கிறார்கள்!
என்னே உலகின் போக்கு!
Some are lost due to ignorance; some are due to negligence;
Some due to arrogance of wisdom; some due to influence of those who are lost already!
கேசிதஞானதோ நஷ்டா: கேசித் நஷ்டா: ப்ரமாதத: I
கேசித் ஞானாவலேபேன கேசித் நஷ்டைஸ்து நாஷிதா: II
சாணக்ய நீதி உள்ளிட்ட பல நூல்களில் இந்த அருமையான செய்யுள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிரறது.
அறியாமையைப் போக்கிக் கொள்.
எதிலும் அலட்சியமாக இருக்காதே.
படித்ததினால் அகம்பாவம் கொள்ளாதே.
ஏற்கனவே வாழ்க்கையை இழந்தவர்களுடன் சேராதே. நல்லவர்களுடன் பழகு!
வாழ வேண்டிய விதத்தை ஒரே ஸ்லோகத்தில் கவிஞர் அழகாகச் சொல்லி விடுகிறார் இல்லையா!
*****
You must be logged in to post a comment.