
written by London swaminathan
Date: 1 July 2016
Post No. 2934
Time uploaded in London :– 18-30
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு கணவன் – மனைவி ஜோடி, ஐரோப்பாவிலுள்ள பின்லான்துக்குப் போய்விட்டு, அமெரிக்காவுக்குத் திரும்பி வந்தனர். பின்லாந்தில், ஒரு அழகான பின்னிஷ் பெண்ணைப் பார்த்தனர். அவளுக்கு, செக்கச் செவேல் என்று ஆப்பிள் பழம் போல கவர்ச்சியான கன்னம். அவள், வேலை தேடி அமெரிக்காவுக்க் வரப்போவதாகச் சொன்னாள். உடனே அந்த தம்பதி நாமே வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே என்று கருதி, அப்போதே பேட்டியைத் துவக்கினர்.
உனக்கு சமைக்கத் தெரியுமா?
எனக்கு சமைக்கத் தெரியாது. என் வீட்டில் அம்மாவே சமைத்து விடுவாள்.
போகட்டும்; வீட்டு வேலைகள் செய்யத் தெரியுமா?
எனக்கு எப்படி அது தெரியும்? என் அக்காவே எல்லா வீட்டு வேலைகளையும் செய்து விடுவாள்
பரவாயில்லை; எங்கள் வீட்டுக்கு வா. குழந்தைகளைப் பார்த்துக்கொள்.
அம்மாடியோவ், எனக்கு அதெல்லாம் தெரியாது. என் தங்கைதான் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டாள்.
துணிகளைத் தைக்கத் தெரியுமா?
அய்யய்யோ, அதை எல்லாம் அத்த்தைதான் செய்வாள்; எனக்கு எப்படி தெரியும்?
பின்னர் என்னதான் உனக்குத் தெரியும்? சொல்லித்தொலை, என்று கணவனும் மனைவியும் உரத்த குரலில் கத்தினார்கள்.
அந்தப் பெண், இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தது போல முகம் எல்லாம் மலர்ந்தது. ஆர்வத்தோடு பதில் சொன்னாள்:
எனக்கு, ரெயின்டீர் மான்களில் இருந்து பால் கறக்கத்தெரியும் என்றாள்!!
(யாதவர் வீட்டுப் பெண்கள், பசும்பால் கறப்பது போல, பின்லாந்து நாட்டில் பெண்கள், ரெயிண்டீர் மான்களில் இருந்து பால் கறப்பது வழக்கம்)

–SUBHAM-
You must be logged in to post a comment.