கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது……….. (Post No. 2949)

pegnant

Article Written by London swaminathan

Date: 7 July 2016

Post No. 2949

Time uploaded in London :– 9-45 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

oldman

யார் யாரைப் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையோடு போகக்கூடாது என்று ஒரு பாடல் இருக்கிறது:–

 

கர்ப்பிணிகள்

குழந்தைகள்

குரு (சந்யாசிகள்)

முதியோர்

கோவில்

அரசர்கள் (பிரதமர், முதலமைச்சர், ராஷ்டிரபதி)

அக்னிஹோத்ரம் செய்பவர்கள் வசிக்கும் இடங்கள்.

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் கர்பிணீம் வ்ருத்த பாலகௌ

ரிக்த ஹஸ்தேன ந உபேயாத் ராஜானம் தைவதம் குரும்

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் = தினமும் அக்னிஹோத்ரம்

செய்யும் பிராமணர்களின் வீடுகள்

கர்பிணீம், வ்ருத்த, பாலக: = கர்ப்பிணிகள், முதியோர், சிறுவர்/சிறுமியர்

 

ராஜானம், தைவதம், குரும் = அரசர்கள், தெய்வம், குரு ஆகியோரின் இருப்பிடம்

 

ரிக்த  ஹஸ்தேன = வெறும் கையோடு

ந உபேயாத் = நெருங்கக்கூடாது (செல்லக்கூடாது)

 

children

குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட், மிட்டாய் அல்லது விளையாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்றால் தாய், தந்தையர் மிகவும் மகிழ்ச்சி அடைவர். நம்முடைய வீட்டிலுள்ள குழந்தைகளின் வயது, விருப்பங்களை அறிந்து வைத்திருக்கிறார்களே என்று வியப்படைவர். உங்களுக்கு வடை, பயசத்துடன் சாப்பாடும் போடுவார்கள்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மசக்கையும், பல விருப்பங்களும் இருக்கும். அவர்களுடைய விருப்பங்களை அறிந்து, அதற்குத்தக சமைத்துக்கொண்டுபோய் கொடுக்க வேண்டும். பெண்ணின் அம்மாவோ, மாமியோரோ உங்களை வாழ்த்துவர். உங்கள் வீட்டில் அத்தகைய சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஓடிவந்து உதவி செய்வர்.

 

கோவில்களுக்குச் செல்லுகையில் கட்டாயம் பூவும், பழமும் கொண்டு செல்ல வேண்டும். தேவைப்படும் இடங்களில் பிரசாதம் செய்துகொண்டுபோய் கொடுக்கவேண்டும். ஒன்றும் செய்ய அவகாசமில்லாவிட்டால் உண்டியலிலும், ஐயர் (பட்டர், குருகள்) தட்டுகளிலும் காசுபோட வேண்டும். காரணம் என்ன வென்றால் கோவில்களிலிருந்து ஒரு துரும்பு கூட எடுத்துவரக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்லும். சிவன் சொத்து குல நாசம். ஆனால் நாமோ அங்கிருந்து விபூதி, குங்குமம், பூ, பழம், துளசி முதலியவற்றை அன்புடன் வாங்கி வருவோம். இதற்கு உடனே காசு போட்டுவிடவேண்டும்.

கோவிலுக்குச் செல்

பெரியோர்கள், சாது சந்யாசிகள்  முதலியோரைப் பார்க்கச்செல்லுகையில் பூ, பழம், தேங்காய் அல்லது குறைந்தது ஒரு எலுமிச்சம்பழமாவது வாங்கிச் செல்லவேண்டும். குரு, தெய்வம், சாதுக்களின் பரிபூரண ஆசி கிட்டும்.

 

வயதானவர்கள் வசிக்கும் வீட்டுக்குச் செல்லுகையில் பழங்கள், இ னிப்புகள், காரங்கள், புத்தகங்கள் (books), கடிகாரம், வாக்கிங் ஸ்டிக் (Walking Stick) , பிளாஸ்க் (Flask), காலணி (Shoes) போன்ற பயனுள்ள பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

–Subham–

 

 

Leave a comment

Leave a comment