
Compiled by London swaminathan
Date:18 July 2016
Post No. 2983
Time uploaded in London :– 14-43
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் இது:-
அவர் எப்படி கவிதை எழுதத் துவங்கினேன் என்று சொல்லுகிறார்:-
“எனக்கு அப்போது வயது 11. ஒரு அல்ஜீப்ரா கணக்கு போட வேண்டியிருந்தது. விடை தெரியவில்லை; மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். அந்த போராட்டம் ஒரு கவிதையாக கொப்புளித்தது. உடனே அவசரம், அவசரமாக அதை எழுதி வைத்தேன். அப்போதிலிருந்து கவிதை என்பது சுலபமாக வர ஆரம்பித்தது”.
இலக்கியத்தி ல்பெண்கள் சிறப்படைந்தது இது முதல் தடவை அல்ல. குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி, கணவனின் படையெடுப்பின்போது, மதுரை மாநகர மீனாட்சி கோவில் வரை வந்து, மதுரா விஜயம் என்ற காவியத்தைப் படைத்தார்.
ரிக் வேதத்தில் , சங்கத் தமிழ் இலக்கியத்தில், பிராக்ருத நூலான காதா சப்த சதியில் நிறைய பெண்புலவர்களைக் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும், அவ்வையாரும் நிறைய கவிதைகளைப்ப்ழிந்தனர். பொழிந்தனர். அவுரரங்க சீப்பின் மகள் ஜெப் உன்னிசாவும் ஒரு எழுத்தாளர்.
உலகின் பல நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் உண்டு. ஆயினும் பழங்கால நாகரீகங்களில் சுமார் நூறு இலக்கியகர்த்தாக்களை கிரேக்க நாட்டிலோ, எகிப்திலோ, சுமேரியாவிலோ, ரோமானிய சாம்ரஜ்யத்திலோ, காண முடியாது. எபிரேய மொழியிலோ சீன மொழியிலோ காணக்கிடைக்காது. அவை எல்லாம் ஆண் ஆதிக்கம் மிக்க சமூகங்கள்.
ரிக் வேத காலத்தில் 20 பெண்மணிகள் கவிதைகளை எழுதி உபநிஷத காலத்தில் பொதுச் சபை விவாதத்துக்கு — பட்டி மன்றத்துக்கு — வந்த கார்க்கி போன்ற பெண்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. இவர்களுக்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வ்வையார், நப்பசலை, நச்செள்ளை போன்ற பல சங்க இலக்கிய பெண்மணிகளைக் காண்கிறோம்.

நான் காற்று வாங்கப் போனேன்
“நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள் — என்று பாடினார் கண்ணதாசன்.
தமிழில் கவிதை புனையும் ஆற்றல், சரோஜினிக்கு இருந்திருந்தால்,
நான் கணக்குப்போடப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்;
அதைக் கேட்டு சொக்கிப் போனார்கள்
ஒரு கவிஞனாகி விட்டேன்.
என்று பாடியிருப்பார்.
–SUBHAM–
You must be logged in to post a comment.