
Picture from James Bond Film
Written by London swaminathan
Date : 16th August 2016
Time uploaded in London: 5-51 AM
Post No.3066
Pictures are taken from various sources; thanks for the pictures.
அரக்கர்கள், இராட்சதர்கள் ஆகியோர் திராவிடர்கள் என்றும், தேவர்கள் எல்லோரும் ஆரியர்கள் என்றும், ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் இந்தோ ஐரோப்பிய இனத்தவர் என்றும் வெளிநாட்டு “அறிஞர்கள்” எழுதி வைத்தனர். இப்படி வேற்றுமை விஷத்தை — விஷ வித்தை – விதைத்தால் இந்தியா துண்டாகும், இந்துமதமும் சிதறும் என்று ஆங்கிலத்தில் எழுதிய வெள்ளைத் தோல் அறிஞர்கள் தப்புக் கணக்குப் போட்டனர். காரணம் என்ன வென்றால், சில திராவிட அசிங்கங்கள் அவர்களுக்கு ஆமாம் சாமி போட்டு, வெள்ளைக்கார ஆட்சி நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ஆனால் உண்மை என்ன என்பதை ராமாயணமும் மஹாபாரதமும் பிட்டுப் பிட்டு வைக்கின்றன. உபநிஷத்துக்களிலேயே மிகப் பழைய பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலேயே தேவர் மானுடர், அசுரர் — ஆகிய மூவரும் தவம் செய்ததும் ஒரே கடவுளிடம் உபதேசம் பெற்றதும் இருக்கிறது. புராண, இதிஹாசம் முழுதும் அவர்கள் சகோதர்கள் என்று காட்டுகின்றன.
இதை மேம்போக்கக எழுதினால் கூட சிலர் இடைச் செருகல் என்று சொல்லிவிடுவர். ஆனால் ஆதி முதல் அந்தம் வரை கதையின் கருப்பொருளிலேயே இவ்விஷயம் உள்ளது.
கம்பராமாயணத்தில் இருந்து இதோ இரண்டு பாடல்கள்:–
விராதன் என்ற அரக்கன் தன் கதையைச் சொல்லும் பாடல் ஆரண்ய காண்ட விராதன் வதைப் படலத்தில் வருகிறது; :-
அன்ன சாபம் மேவி நான்
இன்னல் தீர்வது ஏது எனா
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான்
ராமனிடம் விராதன் சொல்கிறான்:– “என் பெயர் தும்புரு; குபேர உலகத்தைச் சேர்ந்தவன்; ரம்பையிடம் வேட்கை கொண்டதால் குபேரனின் சாபம் பெற்று அரக்கன் ஆனேன். இச்சாபம் எப்போது தீரும் என்று கேட்ட போது உன் திருவடிகள் படும்போது சாபம் நீங்கும் என்று குபேரன் சொன்னான்.”
இதிலிருந்து அரக்கர்களும் தேவர்களே என்பதும் காமம், க்ரோதம் லோபம் முதலிய விகாரங்களால் — குண வேறு பாட்டினால் — அரக்கன் ஆவதும் , பின்னர் அதிலிருந்து விடுபடுவதும் தெரிகிறது!
இக்கருத்து இந்து மத அரக்கர் கதை எல்லாவற்றிலும் வருகிறது!

Picture from Dracula film
இதோ இன்னொரு கதை:–
இராம இலக்குவரால் கொல்லப்பட்ட, கோர வடிவமுள்ள அரக்கனான கவந்தன், வானத்தில் ஒளிவடிவில் தோன்றியவுடன் இராம, இலக்குவர்கள், ஆச்சர்யத்தோடு அவன் யார் என்று வினவுகின்றனர்:
கவந்தன் சொல்கிறான்:
சந்தப்பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்பன் சாபத்தால் இக்கடைப்படு பிறவி கண்டேன்
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன்
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்மின் என்றான்
பொருள்:–
அழகிய ஆபரணங்களையும் மாலையையும் அணிந்த வீரனே!
“நான், தனு எனும் பெயரைக் கொண்ட ஒரு கந்தருவன். ஸ்தூலசிரஸ் என்னும் முனிவரின் சாபத்தால் , இந்த இழிவான அரக்கப் பிறப்பை அடைந்தேன் . உங்களுடைய மலர்க் கரங்கள் பட்டவுடன் பழைய வடிவம் பெற்றேன். நீங்கள் என் தந்தைக்கும் தந்தை போன்றவர்கள். இப்போது நான் சொல்லுவதைக் கேட்பீராக என்றான்”
. இதுபோன்ற அரக்கர் கதைகளையும், மஹாபாரதத்தில் காஸ்யப ரிஷியின் வரலாற்றையும் படித்தால் வெள்ளை க்காரன் சொன்னதெல்லாம் பொய் என்பது புலப்படும்!
Please read my earlier research article:–
அரக்கர்கள்,அசுரர்கள் யார்?, Research paper written by London Swaminathan, Research article No.1395; Dated 7th November 2014
இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.
–subham–
thoughtfultimepass
/ August 16, 2016கந்தர்வர்கள் அல்லது கந்தருவன் என்பவர்கள் யார் ?
Tamil and Vedas
/ August 17, 2016Gandharvas is one of the 18 groups. Please read my Tamil article:-
இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.