மறைந்து போன வேதங்கள்! (Post No.3093)

vedas4

Compiled by London Swaminathan

 

Date: 26  August 2016

 

Time uploaded in London: 6-26 AM

 

Post No.3093

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

rveda

உலகிலுள்ள பழையமொழிகள் ஒவ்வொன்றும் நிறைய நூல்களை இழந்துள்ளன. எந்த பழைய மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதமும் தமிழும் நிறைய நூல்களை இழந்துவிட்டன. சில நூல்களின் மேற்கோள்களைப் பல உரையாசிரியர்கள் கையாளும்போது அவர் காலத்தில் அந்த நூல்கள் இருந்தது நமக்குத் தெரிகிறது. இன்னும் சில நூற் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன. இன்னும் சில ஆசிரியர்கள் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன.

 

உலகில் மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம் ஆகும். அ தை ஒட்டி யஜூர், சாமம், அதர்வண வேதங்களை வியாசர் தொகுத்து வைத்தார். இந்துக்கள் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்ததாகக் கணக்கிடுகின்றனர்.

 

அவர் ஏன் 4 வேதங்களை த் தொகுத்தார்?

ஏனென்றால் அவர் காலத்திலேயே வேதம் என்பது கடல் போலப் பரந்த இலக்கியம் ஆனது. யார் ஒருவராலும் தனியாக அவ்வளவையும் மனப்பாடம் செய்ய இயலாது என்பது அவருக்கு விளங்கியது. உடனே நான்காகத் தொகுத்து நான்கு சீடர்களை அழைத்து ஒவ்வொருவரும் ஒரு வேதத்தைப் பரப்புங்கள் என்றார். அதிலும் கூட முழு வேதத்தையும் மனப்பாடம் செய்ய முடியாவிடில் ஒரு சாகையை (கிளை) மட்டும் படித்தால் போதும் என்றார். இப்படியெல்லாம் எளிமைப்படுத்தியும் இன்று வேதம் இருக்கும் நிலையை நாம் அறிவோம்.

 

பிற இலக்கியங்களிலிருன்த்து அழிந்து போன வேத நூல்கள் என்ன என்பதை அறிகிறோம்.

 

 

பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம்,  வேதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லும். அந்த நூல் குறைந்தது 2100 ஆண்டுகளுக்கு முந்தையது.

 

ரிக் வேதத்தில் 21 சாகைகளும்,

யஜுர் வேதத்தில் 100 சாகைகளும்

சாம வேதத்தில் 1000 சாகைகளும்

அதர்வ வேதத்தில் 9 சாகைகளும்

இருந்ததாக பதஞ்சலி கூறுகிறார்.

 

முக்திகோபநிஷத், இந்த வேதங்களில் முறையே 21, 109, 1000, 50 சாகைகள் இருந்ததாகக் கூறுகிறது.

vedas-flow-chart

எல்லோரும் வேதம் அழிந்துவருவதைக் காட்டி இருக்கின்றனர். இருக்கும் வேதங்களையாவது காப்பாற்றுவது இந்துக்களின் தலையாய கடமை ஆகும்.

1130-க்கும் அதிகமான சாகைகள் இருக்க வேண்டிய இடத்தில் இப்பொழுது 11 சாகைகள்தான் இருக்கின்றன. மேலும் 4 சாகைகளின் சில பகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதாக அறிஞர் பெருமக்கள் உரைப்பர்.

 

 

இப்போதுள்ள நான்கு வேதங்களிலும் 20,000 துதிகள் இருக்கின்றன. உலகில் மற்ற மதத்தினரும், மற்ற மொழியினரும் எழுதுவதற்கு முன்னரே வேதம் கடல் போலப் பரவிவிட்டது. இன்றுவரை, அது கோவில்களிலும், பூஜை, வழிபாடுகளிலும் பயன்படுகின்றன. திருமணச் சடங்குகளிலும் இறுதிச் சடங்குகளிலும் வேத மந்திரங்கள் பயன்படுகின்றன்.

 

 

முதல் இலக்கண   நூல்

2700 க்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ — தான் உலகின் முதல் இலக்கண   நூல். அவர் தனக்கு முந்தைய இலக்கண ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லுகிறார். நமக்கோ ஒன்றும் கிடைத்தில.

 

மனு ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட தர்ம சாஸ்திரத்தை 1080 அத்தியாயங்களாகப் பிரித்து எழுதியதாக நாரத ஸ்ம்ருதி கூறுகிறது.

 

நாரதர் அதை 12,000 ஸ்லோகங்களாகவும், மார்க்கண்டேயர் அதை 8000  ஸ்லோகங்களாகவும், பிருகுவின் மகன் சுமதி அதை 4000  ஸ்லோகங்களாகவும் குறைத்ததாகக் கூறும். ஆனால் இப்பொழுதுள்ள மனு ஸ்மிருதி 12 அத்தியாயங்களில் 2685 ஸ்லோகங்கள் மட்டுமே இருக்கின்றன.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

IMG_5597

Picture of Hindu Yogi/ Saint/ ascetic

கிருத யுகத்தில் எல்லோரும் நல்லவர்கள். அவர்கள் 400 ஆண்டுகள் வாழ்ந்த தாக மனு சொல்லுவார். ஆனால் கலியுகத்தில் இராட்சத புத்தியுள்ளவர்கள் அதிகம். ஆகையால் எல்லாவற்றையும் குறைத்துக் குறைத்து சிறிதாக்கி விட்டனர். திருவள்ளுவரும் கூட ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என்பார். ஏதாவது உங்கள் காதில் நல்லது விழட்டும் என்பார். ஆகவே இருப்பதைக் காப்பாற்றிப் போற்றுவது நம் கடமை. யாருக்கு விஷயம் தெரியுமோ அவர்களை ஆதரிப்பதும் நமது கடமை.

 

மேலும் வெளிநாட்டுக்காரர்கள் நமது சாத்திரங்களுக்குத் தேதி குறிப்பதும் தவறு என்று தெரிகிறது. அவர்கள் குப்தர் காலத்திலும், அதற்கு முந்தைய பிராமண சுங்க வம்ச ஆட்சிக்காலத்திலும் எழுதப்பட்ட புத்தகங்களையும் அதிலுள்ள ஓரிரு குறிப்புகளையும் வைத்து தவறாகக் காலம் கணிப்பர். அதை ஒதுக்கி விடுதல் நன்று.

 

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – மஹாகவி பாரதியார்.

 

-சுபம்-

 

Leave a comment

2 Comments

  1. krishnamoorthys's avatar

    அற்புதமான பதிவு .எனக்குள்ள சந்தேகம் மற்றும் யூகங்களுக்கு மருந்தாக அமைந்தது இந்தப்பதிவு .நன்றி .

  2. Phaimash Vasan's avatar

    Phaimash Vasan

     /  August 26, 2016

    மிகவும்”அருமையான பதிவு
    அனைவரும் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டியதாகும்.

Leave a comment