விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்? (Post No.3096)

swaminatha
படம்:- லண்டன் துர்கை கோவிலில் திரு. சுவாமிநாத சிவாச்ச்சாரியார்

Compiled by London Swaminathan

 

Date: 27 August 2016

 

Time uploaded in London: 10-49 AM

 

Post No.3096

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

லண்டனுக்கு வருகை புரிந்த மாயூரம் சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்களைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன் (வீடியோவை தனியாக வெளியிடுகிறேன்). பல புதிய விஷயங்களை அவர் கூறியது வியப்பளித்தது.

 

விடுமுறைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப் படுத்தியது இந்துக்களே!

அதுவும் மாதத்துக்குக் குறைந்தது எட்டு நாள் விடுமுறையை அமல் படுத்தியதும் இந்துக்களே!!

 

கணக்கிடு கருவி (கால்குலேட்டர்) இல்லாமலே எளிதில் 1000 வரை எண்ணும் முறையைக் கற்பித்ததும் இந்துக்களே.

 

படித்த பாடங்களை முறையாக ரிவிஷன் REVISION செய்ய கற்றுக் கொடுத்ததும் இந்துக்களே!

new-moon-january

படம்:– அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி நிலவு

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் “இந்துக்கள் சந்திரனை வழிபடுவது ஏன்? “ — என்று பிறை வழிபாடு பற்றி எழுதிய கட்டுரையில்

 

அஷ்டமி மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் கடல் பொங்குவது, நாள் தோறும் அலைகள் ஏறி, இறங்குவது பற்றிக் குறிப்பிட்டேன். அதில் பூமியைப் போலவே உடலிலும் 70 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால் இந்துக்கள் சில நாட்களை விடுமுறையாக அறிவித்ததைக் குறிப்பிட்டிருந்தேன் அது பற்றி சுவாமிநாத சிவாசாரியாரிடம் கேட்டேன்:–

 

 

இதோ அவரது கருத்துக்களின் சுருக்கம்.

 

“வெளிநாட்டினர்தான் நமக்கு வாராந்திர விடுமுறையைச் சொல்லிக் கொடுத்தனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது அது சரியல்ல. மாதத்துக்குக் குறைந்து எட்டு நாட்கள் விடுமுறை மிகப் பழங்காலத்திலிருந்தே வேத பாடசாலைகளில் பின்பற்றப்படுகிறது. அந்த நாட்களை “அனத்யயன” நாட்கள் என்பர். அதாவது அத்யயனம் (வேதக் கல்வி) செய்யக்கூடாத நாட்கள். அவையாவன:-

அஷ்டமி (எட்டாவது நாள்)

பிரதமை (முதல் நாள்)

சதுர்தசி (14 ஆவது நாள்)

பௌர்ணமி

அமாவாசை

hightides

இவைகளில் அஷ்டமி (எட்டாவது நாள்), பிரதமை (முதல் நாள்), சதுர்தசி (14 ஆவது நாள்) என்பன மாதம் இரு முறை வரும். அதாவது அமாவாசைக்குப் பின்னும் பௌர்ணமிக்குப் பின்னும் வரும்.

 

 

அது சரி விடுமுறை நாட்களில் வேத பாட சாலை மாணவர்கள் என்ன செய்வார்கள்? என்று கேட்டேன்.

 

சிவாசாரியார் சொன்னதாவது:–

 

“விடுமுறை என்றால் அவர்கள் சும்மா இருக்க முடியாது. வேத பாட சாலை என்பது அங்கேயே தங்கிப் படிக்கும் வசதியுடையது. ஆகையால துணி துவைத்தல், தங்கும் இடத்தை சுத்தம் செய்தல், வேத பாடசாலைக்கோ தனி உபயோகத்துக்கோ தேவையான பொருட்களை வாங்குதல், அம்மா, அப்பா , சகோதர சகோதரிகளைச் சந்தித்து அளவளாவுதல் முதலியன நடைபெறும்.

எல்லாவற்றிற்கும் மேலாக படித்த பாடத்தை சொல்லி நினைவு கூறுதல் நடக்கும். இந்தக் காலத்தில் ரிவிஷன் REVISION செய்வது என்று சொல்லுகிறோமே, அதை முறையாகச் செயல்படுத்தியது நாம்தான்.

 

இப்படி ரிவிஷன் செய்வதை திருவை சொல்லுதல் என்பர். மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்லுதலிலும் ஒரு முறை இருக்கிறது. பதம் பதமாக (சொற்களாக), இரண்டிரண்டாக, ஒரு ஐந்து வரிகளாக (பஞ்சாதி) என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதத்தை , புத்தகம் இல்லாமல், வாய்மொழியாகக் கற்பிப்பர். இதை அனத்யயன தினங்களில் சொல்லிப் பார்ப்பதும், அதை ஆச்சார்யார் (ஆசிரியர்) மேற்பார்வை செய்வதும் “விடுமுறை” நாட்களில் நடக்கும்.

 

ஒவ்வொரு முறை சொல்லும் போதும் பூணூலை ஒரு விரலில் சுற்றி இப்படி ஐந்து விரகளையும் பயன்படுத்தி ஐந்து முர்றையும், பின்னர் திரும்பிவருகையில் மேலும் ஒரு சுற்று வாரியாகச் சுற்றியும் பத்து எண்ணிக்கையை முடிப்பர். இது கால்குலேட்டர் CALCULATOR இல்லாமலே கணக்கிடும் முறையாகும்.

two_tidal_bulges_earth

எனது கருத்து:

 

 

(இது போல கைவிரல்களில் உள்ள கோடுகளைக் கொண்டு வலது கையில் 100 எண்ணிக்கை வரை எண்ண முடியும். இடது கையைப் பயன்படுத்தி ஒவ்வொரு விரல் கோடுக்கும் 100 வீதம் ஆயிரம் வரை எண்ண முடியும். மூன்று வருணத்தினரும் பூணுல் போட்ட பின்னர் தினமும் மூன்று முறை 1008 அல்லது 108 தடவை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டியிருப்பதால் இப்படி நூதன கணக்கிடும்  முறைகளை இந்துக்கள் பயன்படுத்தினர்.

 

உலகிற்கே இன்று நாம் பயன்படுத்தும் எண் முறையையும், தசாம்ச முறையையும் (டெசிமல் சிஸ்டம்) கற்றுக் கொடுத்தது இந்துக்கள் என்பதைப் பார்க்கையில் இந்த கணக்கிடும் முறை வியப்பளிக்காது.

 

கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்துவிட்டு ஏ ழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்ததால் ஞாயீற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவர்கள் பகர்வர்.

 

வெள்ளிக்கிழமை சூரிய அஸ்த்மனம் முதல் சனிக்கிழமை மூன்று நட்சத்திரங்கள் தெரியு ம் வரை ‘சப்பத்’ விடுமுறை என்று யூதர்கள் செப்புவர்.

பிரார்த்தனைக்கு உகந்த நாள்  வெள்ளிக்கிழமை என்று முஸ்லீம்கள் புகல்வர். இவர்கள் எல்லோருக்கும் வாரத்துக்கு ஒரு நாள் வீதம், மாதத்துக்கு 4 நாட்கள்தான் விடுமுறை.

ஆனால் இந்துக்களோ மாதத்துக்குக் குறைந்தது  எட்டு நாட்கள் என்று எப்போதோ அறிவித்தனர். இன்று உலகம் முழுதும் எட்டு நாள் விடுமுறையைப் பின்பற்றுகிறது.

 

 

பெரியவர் கூறிய விஷயங்களைப் பார்க்கையில், உலகமே நம்முடைய விடுமுறையைப் பார்த்து சிறிது மாற்றி வைத்ததை அறிய முடிகிறது.

புத்த மதத்தினர் இந்துக்களின் முறைகளை மேலை உலகத்திற்குக் கொண்டு சென்றனர். அதை ரோமன் கதோலிக்கர்கள் கன்னி மடங்களில் பயன்படுத்தினர். அதை மற்றவர்கள் பின்பற்றினர். நாம் என்றோ பயன்படுத்திய மாதம் எட்டு நாள் விடுமுறையை உலகம் சமீப காலத்தில்தான் பின்பற்றத் துவங்கியுள்ளது.

moon-7day-1838

படம்:– அஷ்டமி சந்திரன்

இப்போது பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்படும் ரிவிஷன் முறையை நாம் முதலில் பின்பற்றி, உலகம் முழுதும் பரப்பியுள்ளோம்.

 

இந்துக்களின் மனன சக்தி MEMORY POWER அபாரமானது எதையும் நெட்டுருப்போட்டு அதை வாய் மொழியாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பரப்புரை செய்து வந்துள்ளனர்.

பூமியிலுள்ள கடல் மீதும்,  மனித உடல் மீதும் நிலவின் தாக்கத்தை அவர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

 

–subham–

Leave a comment

Leave a comment