
Written by London swaminathan
Date: 5 September 2016
Time uploaded in London: 9-33 AM
AM
Post No.3124
Pictures are taken from various sources; thanks.

Picture: Pillayarpatti Ganesh
முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்பட்டுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பதை யும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு.
முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்படுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பஹையும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு. பெரும்பாலும் இடமாகச் சுழிக்கப்பட்டிருக்கும்.
புகழ்பெற்ற, மிகப் பழமையான பிள்ளையார்பட்டிக் கோவிலில் விநாயகர் துதிக்கை வலமாகச் சுழித்திருப்பதைக் காணலாம். இது ஒன்பது நகரத்தார் கோவில்ல்களில் ஒன்று. சுமார் 1600 ஆண்டுப் பழமையுடையது. திருச் செங்காட்டங்குடி வாதாபிக் கணபதிக்கும் முந்தையவர் இவர் என்பதற்கு அங்கே இருக்கும் கல்வெட்டுகள் சான்று பகரும். இது பாண்டியர் காலக் குடைவரைக் கோவில்.
காரைக்குடி- திருப்புத்தூர் வழித்தடத்தில் குன்றக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. ஏனைய சிவன் கோவிலகளில் பிள்ளையார் ஒரு துணைச் சந்நிதியில் அமர்ந்திருப்பார். ஆனால் இங்கோ பிள்ளையார்தான் முதலிடம். ஊரின் பெயரும் பிள்ளையாரின் பெயரில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இந்த ஊரின் பழைய பெயர் எருக்காட்டூர். பிள்ளையாரின் உயரம் ஆறு அடி.
பிள்ளையார்பட்டி குடைவரையில் உள்ள பெருபரணன் கல்வெட்டைக் கொண்டு ஆராய்ந்தால் இது பல்லவர் காலத்துக்கும் முன்னர் அமைந்த கோவில் என்பது விளங்கும் என்பார் கம்பன் அடிப்பொடி சா. கணேசன்.
இந்தப்பிள்ளையரை தேசி விநாயகப் பிள்ளையார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடும்.
இவர்தான் பழைய பிள்ளையார் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் காட்டும் சான்றுகள்:–
துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்தது
நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரத்துடன் விளங்குவது
அங்குச பாசங்கள் காணப்படாமை
வயிறு ஆசனத்தில் படாமல் அர்த்தபத்ம ஆசனம் போலக் கால்கள் மடிந்திருப்பது.
வலக்கரத்தில் மோதகம் வைத்திருப்பது
இடக்கரத்தை கடிக ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் கொண்டிருப்பது.
வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவது.
வலஞ்சுழிப் பிள்ளையார்தான் ஓம்கார ஸ்வரூபமென்பதையும், சிலைகளாகப் பிள்ளையார் உருப்பெருமுன், ஓம்கார சொரூபமாக அவர் வணங்கப்பட்டார் என்பதற்கும் இது சான்று ஆகும்.

சேண்பாக்கம் ஏகாதச (11) ஸ்வயம்பு கணபதி மூர்த்தங்கள்
இங்குள்ள 11 கணேச மூர்த்திகளும் ஓம்கார வடிவில் அமைந்திருக்கின்றன. 1865 ஆம் ஆண்டு மந்திரி துக்கோஜி ராவ் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது, பூமியில் சிறு அளவில் வளர்ந்திருந்த பிள்ளையார் சிலை மீது இடித்தவுடன் ரத்தம் வந்ததாகவும் உடனே வண்டி நகரவில்லை என்றும் சொல்லுவர். துக்கோஜிராவ் அன்றிரவு முழுவதையும் அங்கேயே செலவிட நேரிட்டது. அவரது கனவில் தோன்றிய கணபதி தமக்குக் கோவில் எழுப்புமாறு சொன்னவுடன் அவர் ராஜ மான்யங்களோடு ஒரு கோவிலை எழுப்பினார்.
இதே போல காஞ்சிப் பெரியவர் அங்கு சென்றபோதும் ஒரு அற்புதம் நடந்தது. அவர் வேலூர் விஜயம் மேற்கொள்ள இருந்தபோது சேண்பாக்கம் கணபதிக்கு 108 சிதறு தேங்காய்கள் உடைக்கும்படி கூறி இருந்த போதும் சிஷ்யர்கள் அதை மற ந்துவிட்டனர். அவ்வழியே பெரியவர்களுக்குப் பின்னால் யானை மீது புதுப் பெரியவர் வந்து கொண்டிருந்தார். நெடுஞ்சாலையிலிருந்து சேண்பாக்கத்துக்கு பிரிந்து செல்லும் இடத்துக்கு யானை வந்தபோது, இருந்த இடத்திலேயே சுற்றத் துவங்கியது. இது ஏன் என்று மடத்து நிர்வாகிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது பெரியவர் 108 தேங்காய் உடைக்கச் சொன்னதும் அதைத் தாங்கள் மறந்ததும் மடத்து நிர்வாகிகளுக்குந் நினைவுக்கு வந்தது. உடனே 108 தேங்கய்களைக் கொண்டுவந்து சிதறுகாய் போட்டதும் யானை நகரத் துவ ங்கியது. பெரியவர்கள், அதையடுத்து சேண்பக்கத்துக்கு விஜயம் செய்து அங்கு ஒரு நாள் முழுதும் தங்கி அபிஷேக ஆராதனைகளை நடத்தினார்.
வடஆற்காடில் இது தவிர திருப்பத்தூர் மாயப்பிள்ளையார்,திருவலம் வந்த விநாயகர் ஆகியோரும் பிரபலமானவர்கள்.
திருப்பத்தூர் மாயப் பிள்ளையார் திடீரென்று பூமியிலிருந்து தோன்றியதாக பக்தர்கள் கூறுவர்.
திருவலம் என்னும் தலம் நம்பியாண்டார் நம்பியால் பாடப்பெற்ற இடம் ஆகும். பொன்னை நதிக்கரை யில் அமைந்த ஆலயத்தில் அம்மை அப்பனை வலம் வந்து மாங்கனி பெற்ற பிள்ளையாருக்கு தனி சந்நிதி ஒன்று உள்ளது.

Picture of Ganesh shaped vegetables
ஏனைய பிள்ளையார் கதைகளை 4-ஆவது பகுதில் பார்ப்போம்.
Source Books:
பிள்ளையார் பட்டி தல வரலாறு -சா.கணேசன், 1983
காணாபத்யம்- செந்தில் துறவி, 1968
You must be logged in to post a comment.