வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!! (Post No.3321)

Written  by London Swaminathan

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 17-45

 

Post No.3321

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை.”

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

 

1957 ஆம் ஆண்டு மலேசிய தமிழ் முரசு பத்திரிக்கை மலரில் வெளியான ஒரு கட்டுரையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழ் கலாசாரம் பற்றி தனது கருத்துகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிட்ட பத்திரிகையே இது எங்கள் பத்திரிக்கையின் கருத்து அல்ல என்று ஈ.வெ.ரா.வை கை கழுவிவிட்டது!

 

கட்டுரை நகலை இணத்துள்ளேன் அதை பெரிதாக்கி படிக்க இயலாதவர்களின் நலன் கருதி சில அம்சங்களை மட்டும் இங்கே மீண்டும் எழுதுகிறேன் (அவர் சொன்னபடியே)

 

இவர் தமிழ் துரோகியா? தமிழ் அன்பனா என்று வாசகர்களே  முடிவு செய்யலாம்.

தினமணியில் வந்த ஒரு பழைய செய்தி

 

திருச்சியில் பகுத்தறிவுப் பகலவர்களைப் பெற்றெடுத்த, “தாலி அறுத்த மாதர்” மகாநாட்டில் பேசிய  ஈ.வெ.ரா. திருவள்ளுவரைச் சாடியதை நாங்கள் தினமணியில் பெட்டிச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டோ . (40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தினமணி சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்தபோது).

 

எங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கரஸ்பாண்டன்ட் கோபால ஐயர், ஈ.வெ.ராவுக்கு மிகவும் பிடித்த ஐயர்களில் ஒருவர். திருச்சியில் நடந்த திராவிடக் கழக மாநாட்டு விஷயங்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பவர்.

 

அவர் அனுப்பிய செய்தியைத்தான் நாங்கள் முதல்பக்கத்தில் பாக்ஸ் ஐயிட்டமாக BOX ITEM வெளியிட்டோம்.

 

தெய்வம் தொழாள் (குறள் 55) —– என்னும் திருக்குறளைச் சொல்லி முதல் வரிசையில் அமர்ந்த பெண்களைப் பார்த்து நிங்கள் எல்லாம் பத்தினிப் பெண்கள்தானே? என்று ஈ.வெ.ரா. கேட்டார். அதுகளும் மாடு மாதிரி தலை அசைத்து ஆமாம் சாமி போட்டன. எங்கே பார்ப்போம்; வள்ளுவன் சொல்றான்— பத்தினிப் பெண்கள் எல்லாம் பெய் என்றால் மழை பெய்யுமாம்; நீங்கள் எல்லோரும் “பெய்” என்று சொல்லுங்கள் என்றவுடன் அதுகளும் “பெய்” என்றன. மழை பெய்யவில்லை. பார்த்தீர்களா வள்ளுவனின் மூடநம்பிக்கை என்று சொல்லி ஈ.வெ.ர. உரையை முடிக்க அந்தப் பெண்கள் மூஞ்சியில் ஈ ஆடவிலை. இப்பொழுது வள்ளுவன் சொன்னது தப்பா? அல்லது அதுகள் எல்லாம் பத்தினிகள் இல்லையா– என்ற ஒரு தரும சங்கடமான நிலையில் மகளிரைத் தள்ளிவிட்டார் பெரியார்.

 

கீழே உள்ளதைப் படியுங்கள் இன்னும் வேடிக்கை பார்க்கலாம்:—

 

xxxxx

 

“மொழி என்பது மனிதனுக்கு அவ்வளவு ஒரு முக்கிய சாதனம் அல்ல. இயற்கையானதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவை இல்லை”.

xxxxx

 

நமக்கு சொந்த மொழி என்பது பிறந்த ஜாதியின் காரணமாக. எனக்குக் கன்னடம். மற்றும் சிலருக்குத் தெலுங்கு. மற்ற தமிழ்நாட்டுப் பெரு ம்பாலான மக்களுக்குத் தமிழ்.

 

xxxxx

 

தமிழ்நாடு நம் சொந்த நாடு. ஆனாலும் அட்சி தமிழர்கள் அல்லாத அந்நியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அந்நியர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம்முடைய நாட்டை அடக்கி ஆள்பவர்களாக இருப்பதனால் — இந்தி மொழிதான் அட்சி மொழியாகவும் போதனா மொழியாகவும்……………… இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதுமான சம்பவமுமாகும்.

xxxx

காலம்சென்ற ஐக்கோர்ட் ஜட்ஜ் சதாசிவ ஐய்யர் குமாரர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையில் மொழி என்னும் தலைப்பில்   (1939 ஆம் ஆண்டில் என்று ஞாபகம்) பேசியிருக்கிறேன். ஆங்கில எழுத்துக்களையே தமிழ் நெடுங்கணக்காக, தமிழ் அகரவரிசையாக எடுத்துக்கொள்ளலாமென்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும்,

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாகும் காலம் ஏற்பட்டால்தான் மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.

 

xxx

“இங்கிலீஷ் மொழியே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நீங்கள் பேசியவுடன் எல்லோரும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் யாராவது இப்படிப் பேசியிருந்தால் கூட்டத்தில் பெரிய கலாட்ட செய்திருப்பார்கள் என்று 6,7 வருடங்களுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்பு மகாநாட்டிற்குப் பிறகு சி.என். அண்ணாதுரை என்னிடம் கூறினார்.

xxx

 

நான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று சொன்னவுடம், மொழி வெறியர் சிலர், நீ யாருக்குப் பிறந்தாய்? என்று கேட்டனர்.

 

அந்த மொழியைப் பேசவேண்டும் என்று சொல்லுவது நாம் ஆங்கிலேயனுக்குப் பிறந்ததாகும் என்றால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு ரயில், ஆகாய விமானம், ரேடியோ, டெலிபோன் , மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையது என்று தெரிந்து அனுபவிக்கிறோம். இதனால் எத்தனை முறை ஆங்கிலேயனுக்குப் பிறந்தோம் என்பதை சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொல்லுவேன்.

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம்  உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

ஆங்கிலமே அரசியல் மொழியாகவும் போதனா மொழியாகவும் இருக்க வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங் கணக்காவது அவசியம்.

ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம்பயத்தக்கது

 

என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது ஆரிய வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிகவும் அருமையாகதான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்துக்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பயனைக் கொடுத்திருக்கிறது. விஞ்ஞாநதிற்கு சிறிதும் பயன்படத்தக்கதாய் இல்லை. அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை.

 

தமிழனின் பேச்சு மொழி”, “தாய் மொழி தமிழ்” — என்பதைத் தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்கால நிலச் சின்னங்களாகவே காணப்படுகின்றனர்.”

 

–SUBHAM–

 

 

 

 

Leave a comment

2 Comments

 1. சற்று நிதானமாக யோசித்தால் ஈ.வே.ரா. தமிழ் மொழி பற்றிச் சொன்னவற்றில் இருக்கும் உண்மை புலப்படும்.

  அவர் தமிழ் பண்பாடு, சமயம் பற்றிச் சொன்னவைகளை விடுவோம். மொழியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
  1. தமிழ் தொன்மையான மொழி. அதுதான்- அது மட்டும் தான்- அதன் பெருமை. இன்று அறிவியல் மற்றும் பிற துறைகள் வளர்ந்து வரும் வேகத்திற்கோ, விஷயச் செறிவுக்கோ தமிழ் ஈடுகொடுக்க முடியுமா?
  2. சம்ஸ்கிருத (ஆரியக்) கலப்பில்லாத தமிழ் சமயம் உண்டா?
  3. தமிழில் சங்க, மற்றும் பிற பழைய இலக்கியங்களுக்கு நிகராக ஏதேனும் புதிதாக உருவாகியிருக்கிறதா?
  4. இன்று எந்தத் துறையிலும் ஆங்கில அறிவு இல்லாமல் தமிழிலேயே படித்து அறிந்துகொள்ள முடியுமா? அப்படித் தமிழிலேயே படித்தாலும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவேண்டிய நிலையில் தானே இருக்கிறோம்?
  5. ஆங்கிலம் ஆட்சிமொழி இல்லையென்றால், ஹிந்தி அங்கு உட்கார்ந்துவிடும்! மோடி இன்னும் 5 வருஷம் நீடித்தால் போதும்- இது நிறைவேறிவிடும்! இதற்கு நாம் தயாரா? [ ஹிந்தி விஷயத்தில் ஈ,வே.ராவின் தீர்க்கதரிசனம் ராஜாஜியையும் மிஞ்சிவிட்டது!]

  தமிழ் வெறும் பேச்சுமொழியாகத்தான் இருக்கிறது! சங்கத்தமிழ் எத்தனை தமிழர்களுக்குப் புரியும்? தமிழில் சினிமா எடுக்கலாம். டி.வி. சீரியல் எடுக்கலாம்! சீரியஸ் விஷயங்களை [ புரியும்படி] எழுதமுடியாது. ஓரளவு எழுதியவர்களும் இருக்கிறார்கள்- ஏ. என். சிவராமன், கல்கி மாதிரி. அது அவர்களின் தனிப்பட்ட திறமை. மொழியின் இயல்பு அல்ல!

  இன்றும் மொழி வளர்ச்சி தனி நபர்களின் முயற்சியினால்தான் சிறந்துவருகிறது, அரசினர் கமிட்டி அமைத்து மொழியை வளர்ப்பதென்பது, விஞ்ஞானிகள் குழு அமைத்து லட்சியக் குதிரையை உருவாக்கிய கதையை நிகர்க்கும்!

  மேலும் ஈ.வே.ரா பேசிய-எழுதிய காலகட்டத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். அந்தக் காலத்தில், ‘தமிழே போதும்’ ‘தமிழிலேயே எல்லாம் முடியும்’, என்றெல்லாம் பலர் மேடையில் முழங்கிவந்தார்கள். நான் பள்ளி நாட்களில் பல பெரியார் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர் பேச்சினிடையே சில ஆங்கில வாசகங்களைச் சொல்லி “கண்ணீர்த் துளிகள் இவற்றைத் தமிழில் சொல்லட்டும்” என்று சவால் விடுவார்! பெரியார் தமிழுக்கு எதிராகச் சொன்னதுபோல் தோன்றினாலும், அவர் தமிழர்களை- குறிப்பாக இளைஞர்களை- குறுகிய மொழி வெறியினின்றும் காப்பாற்றினார் என்றே சொல்லவேண்டும்.
  அவர் சொன்ன விதம் அவருக்கே உரிய பாணி! ஆனால் அதில் உண்மை இருக்கவே செய்கிறது! Tamil is getting fossilised. This fate is shared by many old languages in the modern world.

 2. Thanks. Some of his views are acceptable. But we have to weigh a person’s contribution to the society by his or her overall performance.
  But he was bold enough to express his opinions till the end of his life.
  Even RSS’ General Assembly (Pratinidhi Sabha) passed a condolence resolution after his death.
  He created an awareness among both atheists and theists.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: