அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் (Post No. 3515)

Written by S NAGARAJAN

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  6-27 AM

 

 

Post No.3515

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

இந்திய வரலாறு – பி. என். ஓக்கின் புதிய கண்ணோட்டம்

 

இந்திய வரலாற்றை அதிசயக்கத்தக்க முறையில் ஆய்வு செய்து ஏராளமான புத்தகங்களை எழுதிய அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் ஹிந்து தர்மத்தின் புகழையும் பெருமையையும் உலகறியச் செய்தவர்களில் ஒருவர்.

 

 

1917ஆம் ஆண்டு  மார்ச் மாதம் இரண்டாம் தேதி பிறந்து 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மறைந்தார்.

 

90 வயது நிறைவாழ்வு வாழ்ந்த புருஷோத்தம நாகேஷ் ஓக்கை பி.என், ஓக் என்றே உலகம் அறிந்தது.

 

ஹிந்து வரலாறு சின்னாபின்னாபடுத்தப்பட்டு திரித்து, மாற்றி, சிதைத்து எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மனிதர் கொதித்தெழுந்தார். முறையாக வரலாற்றை ஆய்வு செய்யத் தொடங்கினார். இன்ஸ்டிடியூட் ஃபார் ரீ ரைட்டிங் இண்டியன் ஹிஸ்டரி என்ற ஒரு அமைப்பை நிறுவித் தன் ஆய்வு முடிவுகளை உலகினருக்கு அறிவித்தார். இதிஹாஸ் பத்ரிகா என்ற வரலாற்று இதழ் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். மதத்திற்கெல்லாம் தாய் மதமாக ஹிந்து மதம் இலங்கியது என்பதே இவர் வரலாற்று ஆய்வின் உயிரோட்டமான தத்துவமாக இருந்தது.

 

வேத நாகரிகத்தின் வரலாறு

 

ஏசு கிறிஸ்து, வாடிகன் சிடி, காபா,வெஸ்ட் மினிஸ்டர் அப்பே, தாஜ்மஹால் பற்றிய இவரது ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ப்லரை கோபம் கொள்ள வைத்தன.

 

வோர்ல்ட் வேதிக் ஹெரிடேஜ்  – எ ஹிஸ்டரி ஆஃப் ஹிஸ்டரிஸ் (World Vedic Heritage – A History of Histories) என்ற இவரது புத்தகம் மிக அருமையான புத்தகம். 92 அத்தியாயங்களில் 1312 பக்கங்களில் பல்வேறு அதிசயமான தகவல்களைத் தொகுத்து இதில் அவர் தந்திருக்கிறார்.

 

இதில் இவர் கூறும் முக்கிய செய்திகளில் இரண்டை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

 

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

Did Jesus Ever Lived  என்ற (76ஆம்) அத்தியாயத்தில் ஏசு பற்றிய பல்வேறு தகவல்களை முறையாக இவர் ஆய்வு செய்கிறார்.

பின்னர் அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது இது தான்:

 

“Thus from beginning to end the Jesus story is one big fiction which developed as a mushroom growth gathering heterogeneous elements in its meandering course over centuries after it had acquired a head-start with the grouse of an ambitious, short- tempered, angry man called Saus alias Paul expelled from the management of the Christ cult.

 

 

It is hoped that the above details would help people who believe in logic to realize how the whole foundation of Christianity is entirely fictious despite its colossal spread and size.” (Page 1003)

 

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

தாஜ்மஹல் உண்மையில் தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறும் இவர் அதற்கான் ஆதாரங்களை அள்ளித் தருகிறார்.

 

பிரம்மாண்டமான தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இன்று பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க அனுமதித்தால் இந்த உண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பது இவரது வாதம்

இவரது கூற்று:

 

“The marble Taj Mahal in Agra (India) is surrounded by numerous such palatial, red stone pavilions which escapes visitor’s attention, being misled by the concoted Shahjahan-Mumtaz legend. The Taj Mahal is Tejo-Mahalaya a Hindu temple-palace complex built several centuries before the 5th generation. Mogul ruler Shahjahan, (Reference, our research book titiled – THE TAJ MAHAL IS A TEMPLE PALACE). Shajahan requisioned the edifice, robbed it of its costly fixtures and furniture (such as silver doors, gold-railings, gems stuffed in the  marble grill, strings of pearl hanging on the Shivling amd the  legemdary  peacock throne) and misused it recklessly as a Muslim cemetery. Thus history has been turned so topsy turvy as to credit the very person who robbed, ravaged and descrated the Taj Mahal with having built it. Such is the appalling state of history all the world over,” (Page  1246)

 

இப்படிப்பட்ட ஏராளமான செய்திகள் பக்கத்திற்குப் பக்கம் தரப்படுகின்றன; நம்மை பிரமிக்க வைக்கின்றன.

 

 

சரியான ஹிந்து நாகரிக வரலாற்றுக்காக உழைத்தவர்

 

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் சர் ஆர்தர் கானன் டாயிலின் நாவலில் வரும் லாஜிக், அகதா கிறிஸ்டியின் நாவலில் வரும் மர்மம், இர்விங் வாலஸ் நாவல்களில் வரும் எதிர்பாரா திடுக்கிடும் திருப்பங்கள் போன்றவற்றை இந்திய வரலாற்றில் காண முடியும் என்பதை ஓக் நிரூபிக்கிறார்.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக சில காலமும், பத்திரிகையாளராக சில காலமும், இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரியாக நீண்ட காலமும் பணியாற்றிய இந்திய வரலாறு எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து, அதன் உண்மையான வரலாறு என்ன என்பதை ஆய்வு செய்து தருவதிலேயே ஓக் தனது வாழ்நாள் முழுவதையும் செல்வழித்து அர்ப்பணித்தார்.

 

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் இலக்கான மகத்தான வாழ்வு வாழ்ந்த அவர் வேத நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த பெரும் மேதை என்றே சொல்லலாம்!

 

********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: