பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)

Written by London swaminathan

 

Date: 25 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 17-36

 

Post No. 3670

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கட்டுரை-9ல் முப்பது வம்சங்களின் தோற்றத்தையும் முதல் வம்சாவளியையும் கண்டோம்.

இரண்டாவது வம்சாவளி (2800 BCE)

இரண்டாவது வம்சாவளி பற்றி அதிக விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் எகிப்து ஒரே நாடாக (Unification) உருப்பெற்றது. இந்த சாதனையை உருவாக்கியவர் காசிகெம்வி (Khasehemvy). அவர் மிகவும் பெரிய உருவம் படைத்தவர். அவர் விட்டுச்சென்ற நினைவலைகள் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. அவருக்கு மகன் கிடையாது. எகிப்திய வழக்கப்படி அவர் தன் மகளையே திருமணம் செய்துகொண்டார் என்று ஊகிக்கப் படுகிறது.. அவர் பெயர் (Nemmathap) நெம்மாதாப்.

 

துவக்க காலத்தில் பெண்களே ஆட்சிக்கு வந்தனர். அதாவது மன்னனின் மூத்த மகள் அல்லது மஹாராணி,  (Isis) ஐஸிஸ் என்னும் தேவதையின் அம்சமாகக் கருதப்பட்டாள். மன்னன், ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டார். சிம்மாசனத்துக்கான சித்திர எழுத்து மூலம்  ஐஸிஸ் குறிக்கப்பட்டாள். அந்த சிம்மாசனத்தில் உடகார்ந்ததால் மன்னர் கடவுள் அம்சம் பெறுகிறார்.

 

இந்து அரசர்களும் அரச பதவியை ராஜ்யலெட்சுமி என்று அழைத்தது ஒப்பிடத் தக்கது.

 

மூன்றாவது வம்சம் (2600 BCE)

நெம்மாதாப் (NemmaathapP மூலம் மூன்றாவது வம்சம் தோன்றியது. அவளுக்கு இரண்டு மகன்கள். முதல் புதல்வனின் பெயர் சனக்தே (Sanakhte) அல்லது Nebka நேப்கா. இரண்டாவது புதல்வன் தஜொசர் நெட்ஜெரிகேட் (Djoser Netjerykhet).

 

முதல் பிரமிட் (First Pyramid)

 

நெட்ஜெரிகேட் (கேது) என்ற மன்னந்தான் முதல் முதல் பிரமிட் கட்டியவர். இது படிக்கட்டுகள் போல அமைந்த (Step Pyramid)  பிரமிட். இது சக்கரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிரமிடு கட்டிய பெருமை அவருடைய அமைச்சரும், கட்டிடக் கலைஞருமான இமோதேப் (Imhotep)  அவர்களையே சேரும் ஒரு  மில்லியன் டன் (பத்து லட்சம்) கற்களை நன்கு செதுக்கி உருவாக்கப்பட்ட ஒப்பற்ற கட்டிடம் இது. இதற்கு ஈடு இணையாக அக்காலத்தில் ஒரு கட்டிடமும் கிடையாது.

 

பல பெயர்கள் கேட் என்று முடியும். இது மஹாபாரதத்தில் பல அரசர்களின் பெயர்கள் ‘கேது’ என்பதன் திரிபாக இருக்கலாம். இதே போல அமைச்சரின் பெயர் ‘தேப்’ என்பது ‘தேவ’ என்பதன் திரிபாக இருக்கலாம். எகிப்தில் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதை முன்னரே ஒரு  கட்டுரையில் தந்துள்ளேன்.

 

படிக்கட்டு வடிவில் அமைந்த முதல் பிரமிடுதான் பிற்கால மன்னர்களைப் பெரிய பிரமிடுகளைக் கட்ட ஊக்குவித்தது. எகி ப்துக்கு வரலாற்றில் அ ழி யாத இடத்தையும் புகழையும் ஈட்டித் தந்தது.

 

மன்னர் என்பவர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டதால் மன்னரின் மதிப்பு உயர்ந்தது. ஹீலியோபோலிஸ் (Heliopolis) எனப்படும் சூர்யபுரி நகரம் பெரும் சிறப்புடன் திகழ்ந்தது. இங்கிருந்து நட்சத்திரங்களைக் கவனித்தனர். நட்சத்திரங்களை வழிபடவும் செய்தனர்.

 

நட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்திரம்

 

இது இந்துமத்துக்கு மிக நெருக்கமான விஷயம். இன்றுவரை 27 நட்சத்திரங்கள் அதற்கான அதி தேவதைகள் வணங்கப்படுகின்றன. மேலும் வேதங்களிலேயே நடசத்திரங்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த இடத்தில் சிரியஸ் (Sirius) நட்சத்திரம் பற்றிய சில வியப்பான தகவல்களைக் காண்போம்; எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் நடசத்திரம் முக்கியப் பங்கு ஆற்றியது.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 19 ஆம் தேதி இது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் வானத்தில் தோன்றும்போது நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கும். ஆகையால் இதை எகிப்தியர்கள் ஆதிகாலத்திலிருந்தே கவனித்து அது தோன்றும் தேதியைப் பதிவு செய்யத் துவங்கினர். இதை எகிப்தியர்கள் சோதி (Sothi) என்று அழைத்தனர் நாமதை ஜோதி (ஒளி) என்று அர்த்தம் செய்தாலும் பொருந்தும். ஏனெனில்  இதுதான் வானத்திலேயே மிகவும் பிரகசமான நட்சத்திரம். எல்லா பண்பாடுகளும் இதை நாய், ஓநாய் அல்லது அது போன்ற மிருகங்களுடன் சம்பந்தப்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் இதை ம்ருக வ்யாத என்று அழைத்தனர். மான் வேட்டை என்று பொருள். எகிப்தில் இது தோன்றும்போது வெள்ளம் வந்தது போலவே கிரேக்க நாட்டில் கோடைக் காலம்  துவங்கும். ஆகவே அவர்களைப் பொருத்தமட்டில கோடை நட்சத்திரம். பாலிநேசியன் எனப்படும் பசிபிக் மஹாசமுத்திர பழங்குடியின ருக்கு இது கப்பல் விட உதவும் நட்சத்திரம்.

 

இந்த நட்சத்திரம் முதலில் இருந்த நிலைக்குத் திரும்பிவர 1460 ஆண்டுகள் ஆகும்.

 

எகிப்திய காலண்டர் சிரியஸ் நட்சத்திரம் தோன்றும் நாளன்று துவங்கும். இதை எகிப்தியர் சோப்டு (Sopdu) என்று அழைத்தனர். கிரேக்க நாட்டினர் சோதிக் காலண்டர் (Sothic Calendar) என்று அழைத்தனர். இந்துக்களின் சாந்திர மாதம் போலவே இதுவும் 360 நாட்களைக் கொண்டது. பின்னர் ஐந்து நாட்களைக் கூட்டி 365 நாள் என்று மாற்றினர். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் 6 மணி  நேரம் துண்டு விழும். ஆங்கிலக் காலண்டரில் லீப் வருடம் என்று உண்டாக்கி இதை ஈடு செய்தனர். எகிப்தியரும் வேறு சில காலண்டர் முறைகளைப் புகுத்தி குறைகளைப் போக்கினர்.

 

புதிய ராஜ்யம் (New Kingdom) , நடு (Middle Kingdom) ராஜ்யம் ஆகியவற்றில் சிரியஸ் நட்சத்திர உதயம் பற்றி மூன்று முறை கல்வெட்டுகளில் பதித்துள்ளனர்.

 

தொடரும்………………..

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: