இந்தியாவில் மட்டுமே இப்படி! (Post No.4023)

Written by S NAGARAJAN

 

Date: 22 June 2017

 

Time uploaded in London:-  20-18 (on 21st June 2017)

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெய்வ தேசம்

இப்படியும் இருக்கிறார்கள்! இந்தியாவில் மட்டுமே இப்படி!! – 1

 

ச.நாகராஜன்

 

பாழ்பட்டு நிற்கும் கலியுகத்தில் தர்ம தேவதை ஒற்றைக் காலில் நிற்கிறாளாம்.

ஆனால் அந்த ஒற்றைக் காலில் நிற்பதற்கும் தர்மத்தை ஆதரிக்கும் தெய்வ தேசமான பாரதம் தான் காரணமாகும்.

இன்றைக்கும் என்றைக்கும் இது உண்மை!

 

 

ஒரு சம்பவத்தை – நிஜமாக நடந்ததைப் – பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஈ தேஷ் என்ற பத்திரிகை  முந்தைய வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தை வெளியிட்டது.

சம்பவம் இது தான்.

 

 

மும்பையில் அவசரம் அவசரமாக மாலையில் அலுவலகத்திலிருந்து தொழுகைக்குச் செல்லக் கிளம்பினார் ரமீஸ்.

பொதுவாக அவர் தொழுகையை ஒரு நாளும் தவற விட்டதே இல்லை.

அன்று அவசரத்தில் தனது பர்ஸை ஆபீஸ் டிராயரிலேயே விட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.

 

 

ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் உட்கார்ந்த அவர் பையில் கையை விட்ட போது பகீர் என்றது. பர்ஸைக் காணோம். அலுவலகத்திலேயே அதை விட்டு விட்டோம் என்பது அப்போது தான் அவருக்குப் புரிந்தது.

இப்போது ஆட்டோகாரருக்குக் கொடுக்கக் கூட ஒரு பைசா இல்லை.

 

திரும்பி அலுவலகம் சென்று பர்ஸை எடுக்கலாம் என்றால் தொழுகை முடிந்து விடும். நேரமே இல்லை. ‘போதாத நேரம் அவருக்கு.

 

என்ன செய்வது?

ஒரு கணம் ஆட்டோ டிரைவரைப் பார்த்தார்.

நெற்றியில் நீள்மான குங்கும திலகக் கீற்று. கையில் கண்பதி உற்சவத்திற்கான பச்சையை வேறு இரு கரங்களிலும் அவர் குத்தி இருந்தார். நல்ல கணபதி பக்தர் போலும்!

ரமீஸின் பதட்டத்தைக் கவனித்த டிரைவஎ, “என்ன, ஏதாவது தகராறா, சாஹப் என்று கேட்டார்.

 

ரமீஸ் தன் நிலைமையைச் சொன்னார்.

“என்னை மசூதியில் இறக்கி விட்டு இருபது நிமிடம் காத்திருங்கள். தொழுகையை முடித்து கொண்ட உடனேயே என் வீட்டிற்குப் போய் அங்கு உங்களுக்கான ஆட்டோ சார்ஜையும் கூடவே காத்திருந்ததற்கான வெய்டிங் சார்ஜையும் தந்து விடுகிறேன். தொழுகையை மட்டும் தவற விட்டு விடக் கூடாது. எனக்கு இதைச் செய்ய முடியுமா? என்று அவர் டிரைவரைக் கேட்டார்.

 

 

பிஸியான் மாலை நேரம். மும்பையில் ஆட்டோ சவாரீயில் ஏதோ சிறிது ச்ம்பாதிக்க உகந்த நேரம்.

டிரைவர் தனது வேண்டுகோளை ஏற்பாரா?

“கவலைப்படாதீர்கள். உங்களை மசூதியில் டிராப் செய்து விடுகிறேன். ஆனால் காத்திருக்க ம்ட்டும் என்னால் முடியாது.தொழுகையை நல்லபடியாக முடித்து வீடு திரும்புங்கள்

 

டிரைவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார் ரமீஸ்.

மசூதி வந்தது. அங்கு ஆட்டோ டிரைவர் செய்ததைப் பார்த்து ஆடிப் போனார் ரமீஸ்.

 

தன் சட்டைப் பையில் கையை விட்டு சில நோட்டுகளை எடுத்த டிரைவர், ரமீஸிடம் கொடுத்து, “இதை வைத்துக் கொள்ளுங்கள். வீடு போய்ச் சேருங்கள் என்றார்.

ரமீஸ் இறங்கியவுடன் ஒரு வார்த்தையும் மேற்கொண்டு பேசாமல் ஆட்டோ சர்ரென்று கிளம்பியது.

 

 

பிஸியான் நேரத்தில் பிழைப்புக்கான அடுத்த சவாரியை நோக்கி அது கிளம்பியது!

தொழுகையை முடித்த ரமீஸ் பிரமிப்பிலிருந்து விடுபடவே இல்லை.

மாலையில் நடந்த சம்பவம் அவர் மனதை விட்டு அகலவே இல்லை.

 

 

மறு நாள் அந்த ஆட்டோ டிரைவரைத் தேட ஆரம்பித்தார். நெடு நேரம் பல தெருக்களில் தேடிய பின்னர் அவரைக் கண்டு பிடித்தார்.

 

அவரைப் பார்த்த ஆட்டோ டிரைவர், கூப்பிய க்ரங்களுடன், “அட வந்து விட்டீர்களா? என்று வரவேற்றார்.

‘வந்து தானே ஆக வேண்டும். நீங்கள் செய்த உதவியை என் வாழ்நாளில் என்றுமே நான் மறக்க மாட்டேன் என்று உணர்ச்சி பொங்க்ச் சொன்னார் ரமீஸ்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆட்டோவுக்கான கட்டணத்தை நன்றியுடன் சேர்த்துக் கொடுத்தார் ரமீஸ்.

அவர் திரும்பும் போது அவர் கையில் ஆட்டோ டிரைவர் கொடுத்த கண்பதி உற்சவத்திற்கான அழைப்பிதழ் இருந்தது.

ரமீஸின் உள்ளமோ ஒளி மயத்தால் விகசித்தது.

இப்படியும் ம்னிதர்கள் இருக்கிறார்கள்!

 

 

இந்தியாவில் மட்டுமே அல்லவா இப்படி நடக்க முடியும்.

தெய்வ தேசத்தில் ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி.

உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகச் சொல்கிறார்கள்.

 

***

நன்றி: கொல்கொத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – 16-9-2016

 

Leave a comment

Leave a comment